10-24-2005, 05:32 AM
சே.
களப்பக்கம் ஒருநாள் வராவிட்டால் என்னைக் கழுவிக் காயப்போட்டுவிட்டார்கள்.
முதலில் ஆவன செய்வதாக உறுதியளித்த வலைஞனுக்கு நன்றி.விவாதத்திற்கு இடமளிக்க முடியாதென்றால் கூட பரவாயில்லை எனக்குத் தேவை ஆம்.இல்லை பதில்தான்.
அன்பின் பிருந்தனுக்கு.உங்கள் கருத்துக்கள் உங்களை வெளிப்படுத்திவிடுகின்றன நன்றி.
நான் மற்றவர்களைப் போட்டுத்தாக்கும் அல்லது எனது சொந்தக் கருத்துக்களை எழுதும் வலைப்பதிவு கவிதை என்பது.அது தூக்கப்படவில்லை.மற்றைய பதிவுகள் காலத்திற்கேற்ற கோலம் கொள்ளாமையினால் தூக்கப்பட்டன அவற்றை ஓரிரு நாளில் துலங்க வைக்க என்னால் முடியும்.
அவற்றில் எழுதுவதெல்லாம் ஈழத்து இலக்கியம்,சஞ்சிகைகள் பற்றிய அறிமுகம்,குறும்பட அறிமுகம் தான் அவற்றையும் தூக்கப்பட்டன என்று உங்களுக்கே விளங்கிய வகையில் மொட்டையாகச் சொல்லி அரண்டவன் கண்ணுக்கு இருண்டதெல்லாம் பொய் என்பதை நிரூபித்திருக்கிறீர்கள்.
பழமொழிகள் மீது எனக்கு நிறையவே நம்பிக்கை உண்டு அவை தவறுவதில்லை என்பது எனது அனுமானம்.
நான் இங்கே களத்தில் கருத்தாட விரும்பியது பாலியல் பற்றி எம்மிடையே இருக்கும் மூடநம்பிக்கைகளை கேள்விக்குட்படுத்த வேண்டுமென்றுதான்.ஒழிய முலையையும் பிருட்டத்தையும் பற்றிக் கதைத்து வாயில் வீணி வடிய திருப்திப் பட்டுக்கொள்ள அல்ல
ஆனா ஆவன்னாவிலிருந்து சொல்லிய பிறகும்முலை என்றால் ஆபாசம் யோனி என்றால்தான் புரட்சியா என்கிறீர்கள்.
சின்னப்பிள்ளைகளை முதலில் தேவாரமும்,திருக்குறளும் படிக்காமல் தடுக்கப்பாருங்கள் அங்கேதான் அதிகமான ஆபாசச் சொற்கள் இருக்கின்றன.
தப்பித்தவறி அவர்களை கோவில் பக்கமோ தேர்ப் பக்கமோ விட்டுவிடாதீர்கள்.உடலுறவின் பல்வேறு படிநிலைகளை வக்கிர புத்தி பிடித்த சிற்பிகள் கோவில் சிற்பத்தில் செதுக்கி வைத்திருக்கிறார்கள்.
சிவனும் உமையும் களிறும் பிடியுமாகிக் கலந்தார்கள் என்று சமயப் பாடத்தில் சொல்லியிருப்பதை நீக்க வழக்குப் போடுங்கள் அது அனிமல் செக்ஸ். ஆபாசம்.
பசி தாகம் போன்று பாலியலும் ஒரு சாதாரண உடல் வேட்கைதான் அதனை அசிங்கம் ஆபாசம் என்று சொல்லாமல் நாகரீகமா மாற்றினால்,பாலியல் தொழிலை சட்டபூர்வமாக்கி வயதெல்லை நிர்ணயித்து அரசாங்கத்தின் நேரடிக் கண்காணிப்பின் கீழ்க் கொண்டுவந்தால் உலகில் பாதி பாலியல்க் குற்றங்கள் குறையும். பாதி பாலியல் நோய்களும் குறையும்.
உலகில் எயிட்ஸ் நோய் அதிகமாக இருப்பது திறந்த பாலியற் செயற்பாடுகள் உள்ள அமெரிக்காவிலோ ஐரோப்பாவிலோ அல்ல.பல நூற்றாண்டு மரபும் கலாச்சாரங்களும் உள்ள ஆபிரிக்க நாடுகளிலும் ஆசிய நாடுகளிலும் தான்.இந்தியா உலகிலேயே இரண்டாவது இடத்தில் இருக்கின்றது.
நாங்கள் இங்கே கதைக்காவிட்டால் ஓரினச் சேர்க்கையும் அரவாணிகளும்,பாலியல் தொழிலாளர்களும் உலகில் இல்லையென்றாகிவிடுமா
நான் திரும்பவும் பழமொழியை நம்புகிறேன்.
பூனை கண்ணை மூடிக் கொண்டால் உலகம் இருண்டுவிடாது

\" \"