11-22-2003, 01:54 PM
94க்கு முதல் ஒரு இ-சந்திப்பு (இயக்க சந்திப்பு என்றும் எடுத்துக் கொள்ளலாம்) நிகழ்ந்தது. நானும் போயிருந்தேன். ஒரு திருமணமான பெண்மணி. நெற்றியில பொட்டோ அல்லது கழுத்தில் தாலியோ இல்லை. ஏனெனில் மைக்கில் பெண்ணியம் பற்றி கதைக்க அதுகள் தடைகளாகத் தென்பட்டிருக்கலாம். மைக்கில் பெண்கள் அடக்கப்படுகிறார்கள் என எழுதிக் கொண்டு வந்ததை (எழுதிக் கொடுத்தது அவரது கணவர் என்பது பலருக்கு தெரியும்) விளாசிக் கொண்டிருந்தார். பெரும்பாலும் ஆண்களைச் சாடுவதே அவ்வாசிப்பின் நோக்கமாக இருந்தது.
இடைவேளை வந்ததா? அப்பெண்மணி என்னுடன் பேசிக்கொண்டிருந்தவரிடம், "இவரைக் கண்டனீங்களே?" என்று விசாரித்தபோது அதிர்ந்தாலும்.. சந்தோசமாக இருந்தது. என்னதான் மைக்கில் கத்தினாலும்.. கணவனின் பெயர் சொல்லி விசாரிக்கவில்லையே?! அதற்காகத்தான். அதேநேரம், அவரது வாசிப்பின் தாக்கத்தால் கணவன்மாருடன் பிரச்சினைப்படப்போகும் பெண்களை நினைத்துக் கவலையாகவும் இருந்தது.

.