Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
மீண்டும் லண்டனில் ஒளிக்கீற்று!
#1
இன்று லண்டன் வோல்தம்ஸ்ரோ பகுதியுள்ள அசெம்பிளி மண்டபத்தில் "விடுதலைப்பேரொளி" நூல் வெளியீட்டுவிழா மிக உணர்வுபூர்வமாக நடைபெற்றது. மண்டபம் நிறைந்த தேசிய உணர்வாளர்கள் மத்தியில், ஈழ்த்திலிருந்து வருகை தந்திருந்த பாராளுமன்ற உறுப்பினர் திரு.கஜேந்திரன் அவர்களும், தமிழகத்திலிருந்து வருகை தந்திருந்த விடுதலைச் சிறுத்தைகள் அமைப்பின் தலைவரும், எங்களில் ஒருவனுமாகிய திரு.திருமாவளவனும் மண்டபம் நிறைந்த கரவொலி மத்தியில் உணர்ச்சிப் பேருரையாற்றினார்கள். எழுச்சிப்பாடல்கள், நடனங்கள் என இனிதே நிறைவுற்ற நிகழ்ச்சியை லண்டனில் இன உணர்வாளர்களினால் பல அச்சுறுத்தல்களுக்கு மத்தியில் நடாத்தப்பட்டுள்ளது.

பல வருடங்களாக தேசிய செயற்பாடுகள் பெருமளவில் முடக்கப்பட்டிருந்த லண்டனில் இப்படியான தேசியத்திற்கான செயற்பாடுகள் ஆரம்பிக்கப்பட்டிருப்பது, அங்கு வந்த மக்கள் பலராலேயே பாராட்டப்பட்டது இங்கு குறிப்பிடத்தக்கது. முதல் முறையாக இப்படியான தேசியத்திற்காதரவான செயற்பாடுகள் உணர்வாளர்களினால் ஆரம்பிக்கப்பட்டுள்ளானது, எத்தடைகள் வரினும், இந்த நாட்டு சட்டங்களிற்குட்பட்டு, எமது உணர்வுகளை/குரல்களை ஒலிக்க நாங்கள் தயங்கமாட்டோம் என்பதையே கோடிட்டுக் காட்டுகிறது. மீண்டும் பழையபடி ஒளிக்கீற்றுக்கள்........
" "
Reply


Messages In This Thread
மீண்டும் லண்டனில் ஒளிக்கீற்று! - by cannon - 10-23-2005, 10:15 PM
[No subject] - by ஜெயதேவன் - 10-23-2005, 10:45 PM
[No subject] - by narathar - 10-23-2005, 11:03 PM

Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)