Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
சந்திரிகாவை பதவியிலிருந்து அகற்றிய சதியை அம்பலப்படுத்துவேன்
#1
<b>சந்திரிகாவை பதவியிலிருந்து அகற்றிய சதியை அம்பலப்படுத்துவேன்: அனுரா பண்டாரநாயக்க
[திங்கட்கிழமை, 24 ஒக்ரொபர் 2005, 00:24 ஈழம்] [ம.சேரமான்]
சிறிலங்கா அரச தலைவர் பதவியிலிருந்து அகற்றிய சதித் திட்டத்தை விரைவில் நாடாளுமன்றத்தில் அம்பலப்படுத்துவேன் என்று சிறிலங்கா வெளிவிவகார அமைச்சர் அனுரா பண்டாரநாயக்க அறிவித்துள்ளார்.


கெடம்ப மாநகராட்சி சபை மைதானத்தில் நடைபெற்ற மகிந்த ஆதரவு தேர்தல் பரப்புரைக் கூட்டத்தில் அனுரா, சந்திரிகா, மகிந்த ராஜபக்ச ஆகியோர் பங்கேற்றனர்.

இக்கூட்டத்தில் பேசிய அனுரா பண்டாரநாயக்க, 12 ஆண்டுகளுக்கு மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட நிலையில் சதிச் செயலால் இந்த ஆண்டே அரச தலைவர் பதவியிலிருந்து சந்திரிகா குமாரதுங்க ஓய்வு பெற வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. இந்தச் சதியை விரைவில் நாடாளுமன்றத்தில் நான் அம்பலப்படுத்துவேன் என்றார்.

அமெரிக்காவில் உள்ளது போல் இரு பிரதான வேட்பாளர்களும் நேரடி விவாதங்களை நடத்த வேண்டும் என்றும் அனுரா கேட்டுக்கொண்டார்.

சந்திரிகா பேசியதாவது:

நீதியானதும் நியாயமானதுமான தேர்தல் நடைபெற்றால் தென்னிலங்கைத் தீவிரவாதக் குழுக்களான ஜே.வி.பி, ஜாதிக ஹெல உறுமயவுக்கு 4 விழுக்காடு கூட கிடைக்காது. மக்களை திசை திருப்புகிற எந்த ஒரு தீவிரவாதக் குழுவையும் நாம் அனுமதிக்க முடியாது. இதுவிடயத்தில் மக்கள் அவதானமாக இருக்க வேண்டும்.

சிறிலங்கா அரச தலைவராக மகிந்த தேர்ந்தெடுக்கப்பட்டு அவர் தவறு செய்தால் அவரை சுதந்திரக் கட்சியினர் கேள்விக்குள்ளாக்க வேண்டும். மக்கள் அவரை சரியான பாதைக்கு அழைத்துச் செல்ல வேண்டும் என்றார்.

நிகழ்ச்சியில் தாமதமாக கலந்து கொண்ட மகிந்த ராஜபக்ச, எதிர்வரும் 8ஆம் திகதி நாடாளுமன்றத்தில் நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்ய சந்திரிகா குமாரதுங்க ஒப்புதல் தெரிவித்துள்ளார். சந்திரிகாவை ரணில் விக்கிரமசிங்க சந்தித்துப் பேசும் போது நிதிநிலை அறிக்கையை தாக்கல் செய்வதை தடுக்க முயற்சிப்பார். அதை சந்திரிகா குமாரதுங்க ஏற்கக் கூடாது என்றார் மகிந்த.

</b>
www.puthinam.com
Reply


Messages In This Thread
சந்திரிகாவை பதவியிலிருந்து அகற்றிய சதியை அம்பலப்படுத்துவேன் - by வினித் - 10-23-2005, 08:13 PM

Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)