Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
யாழில் படையினரின் ஊர்தி மோதி சிறுவன் படுகாயம்
#1
பாடசாலை முடித்து பலாலி வீதியினு}டாக வீடு திரும்பிக் கொண்டிருந்த சிறுவன் ஒருவன் மீது சிறீலங்கா படையினரின் பிக்கப் ரக ஊர்தி மோதியுள்ளது. இதனால் பலத்த காயங்களுக்கு உள்ளாகிய அச்சிறுவன் மயக்கமடைந்த நிலையில் யாழ். அரசினர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளான்.
வசாவிளான் மத்திய மகாவித்தியாலயத்தில் ஆண்டு இரண்டில் கல்வி கற்கும் ரஐPந்திரன் ரஐPவன் என்ற ஏழு அகவைச் சிறுவனே படையினரின் ஊர்தி மோதி படுகாயமடைந்துள்ளான்.

இச்சிறுவனின் குடும்பத்தினர் ஏற்கனவே இராணுவ உயர் பாதுகாப்பு வலயம் காரணமாக பலாலியில் இருந்து இடம் பெயர்ந்து வந்து ஊரெழு என்னும் இடத்தில் வாழ்ந்து வருகின்றார்கள்.

விபத்து இடம் பெற்றதும் இப் பகுதியில் கூடிய மக்கள் ஆத்திரம் அடைந்த போதிலும் சமூகப் பெரியோர்களின் அறிவுறுத்தல்களிற்கு அமைய பொறுமை காத்தனர்.
sankathi
Reply


Messages In This Thread
யாழில் படையினரின் ஊர்தி மோதி சிறுவன் படுகாயம் - by mayooran - 10-23-2005, 04:40 AM
[No subject] - by RaMa - 10-23-2005, 05:28 AM

Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)