10-23-2005, 02:08 AM
சரி, பிருந்தன் அண்ணா,
உங்களுக்கு பதிவுகள் தூக்கப்பட்ட காரணம் தெரிந்திருந்தால், பிறகேன் இப்படியான கருத்தை எழுதினால் அங்கே தூக்கிவிடுவார்கள் என்ற பயம் ஈழநாதனுக்கிருப்பதாக எழுதினீர்கள். இக்கருத்து உங்களுக்குச் சரியாகப் புரியவில்லை என்றுதானே என்னால் எடுத்துக்கொள்ளப்படும்?
அங்கே புளொக் வைத்திருந்தால் யாரும் பெரிய இது இல்லை. நான் சொல்ல வந்தது ஈழநாதனின் பக்கத்துக்கு இருக்கும் வாசகர் வட்டம் இவ்விவாதங்களையெல்லாம் நிறையப் பார்த்த கூட்டம். அதில்போல் அரிச்சுவடியிலிருந்து கதைக்க முடியாது என்றுதான் சொன்னேன்.
இதைப்பற்றி மட்டுந்தான் கதைக்க வேணும் எண்டு ஆர் சொன்னது? இதைப்பற்றி மட்டுந்தான் நாங்கள் சிந்தித்து அலைந்து கொண்டிருக்கிறோமென்று நீங்கள் சொல்வது எதன் அடிப்படையில்?
வேறு விடயங்களே இல்லையா என்று கேட்கிறீர்கள். இதுவும் ஒரு விடயம் என்றுதான் நாங்கள் சொல்கிறோம். இது கதைக்கப்பட வேண்டிய விடயமில்லை என்பது உங்கள் கருத்தென்றால் அதை நேர்மையாக வையுங்கள். மற்றவர்களும் தங்கள் கருத்தை வைக்கட்டும். மட்டுறுத்துனர் தனது கருத்தைச் சொல்வதாகச் சொல்லியிருக்கிறார். அதைவிட்டுவிட்டு மற்றவர்களை முத்திரை குத்துவதை விடுங்கள்.
நீங்களே ஒரு இடத்தில் வாதிக்க வேண்டிய விடயம் என்று கருத்துச் சொல்லிவிட்டு அதேபக்கத்தில் எதிர்த்தும் கருத்துப்போடுகிறீர்கள். ஈழநாதனின் பக்கத்தில் விவாதிக்கலாமே என்று கேட்டுவிட்டு பிறகு உங்களுக்கு வேற வேலையே இல்லையா என்று கேட்கிறீர்கள். பயத்தினால் தான் புளொக்கில் எழுதவில்லை என்றீர்கள். பிறகு அதை மறுத்துச் சொன்னபோது அங்கே எழுதினால் என்ன பெரிய கொம்பா என்கிறீர்கள்.
எனக்குப் புரியவில்லை.