Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
''ஆந்தையின் அலறல்களில் சில''
#7
இலங்கையில் இந்திய கூட்டாட்சி முறை: ஆனந்தசங்கரி
[ஞாயிற்றுக்கிழமை, 23 ஒக்ரொபர் 2005, 01:59 ஈழம்] [கொழும்பு நிருபர்]
இலங்கையில் இந்திய கூட்டாட்சி முறையை செயற்படுத்த வேண்டும் என்று வீ. ஆனந்தசங்கரி வலியுறுத்தியுள்ளார்.


இது தொடர்பில் ஆனந்தசங்கரி கூறியுள்ளதாவது:

சிறிலங்கா சுதந்திரக் கட்சி வேட்பாளர் மகிந்த ராஜபக்சவின் தேர்தல் அறிக்கையானது கூட்டாட்சி முறையை நிராகரித்துள்ளது. ஜே.வி.பி, ஜாதிக ஹெல உறுமயவினரும் கூட்டாட்சி முறையை நிராகரித்துள்ளனர்.

இந்திய கூட்டாட்சி முறையில் பெரும்பான்மை இந்துக்கள் இருந்தபோதும் சீக்கியர் ஒருவர் பிரதமராக முடிந்துள்ளது. இதன் மூலம் அனைத்து இன மக்களும் சம பிரதிநிதித்துவம் பெற முடியும்.

இந்தியக் கூட்டாசி முறையை ஐக்கிய தேசியக் கட்சி வேட்பாளர் ரணில் விக்கிரமசிங்கவும் நிராகரித்து வருகிறார். நான் அரச தலைவர் வேட்பாளராக இருந்தால் இந்திய மாதிரியைத்தான் முன்வைத்திருப்பேன்.

இந்தியக் கூட்டாட்சி முறையை சிறிலங்க அரசாங்கம் முன்வைக்குமேயானால் சர்வதேச சமூகம் அதில் குறைகாண முடியாது. தமிழீழ விடுதலைப் புலிகளும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினரும் கூட அதை நிராகரிக்கமாட்டார்கள்.

அதிகாரப் பகிர்வின் மூலம் தீர்வு காணப்பட வேண்டும். தமிழ் மக்களின் விருப்பங்கள் நிராகரிக்கப்பட்டால் பாரிய விளைவுகள் ஏற்படும். சிறிலங்காவின் பிரதான கட்சிகள் செயற்பாடுகள் தமிழீழ விடுதலைப் புலிகளை பலப்படுத்துவதாகவே அமைந்துள்ளன என்றார் ஆனந்தசங்கரி.

ஜாதிக ஹெல உறுமய, ஜே.வி.பி. உள்ளிட்ட கட்சிகளின் தலைவர்களுடன் இந்தியக் கூட்டாட்சி முறை ஆனந்தசங்கரி ஆலோசனை நடத்தியுள்ளார்

www.puthinam.com
[b]<span style='font-size:25pt;line-height:100%'>
</span>
Reply


Messages In This Thread
[No subject] - by ANUMANTHAN - 10-13-2005, 06:05 PM
[No subject] - by வினித் - 10-13-2005, 06:24 PM
[No subject] - by ANUMANTHAN - 10-13-2005, 06:37 PM
[No subject] - by vasisutha - 10-14-2005, 12:06 AM
[No subject] - by கறுணா - 10-14-2005, 10:02 PM
[No subject] - by வினித் - 10-22-2005, 08:45 PM

Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)