10-22-2005, 12:47 PM
ஈழவன், யாழ் போன்ற கருத்துக்களத்தில் ஒருவரின் கருத்துக்களுக்கு அனுமதியில்லை என்பதற்கா குடில் ஒன்றை உருவாக்குவது சரியா? குற்றங்குறையில்லாத மனிதர் யார் என்பதை நீங்களே ஒத்துக்கொள்ளுறீர்கள். அனுசரித்துப் போக வேண்டும். நிர்வாகம் பிழைவிட்டால் ஆதாரங்களை காட்டி மாற்றங்களை கொண்டுவர வேண்டும்.
தமிழினம் கருத்துக்களத்தில் கூட ஒற்றுமையாக இருப்பதற்கு பக்குவமடையவில்லை அதற்குள்ளும் தனிமனித சுதந்திரத்தை மதிப்பளிக்க முடியாதது மிகவும் கவலைக்குரிய விடயம். இரு தனிமனிதரிடம் இயல்பாகவே இருக்கும் வேற்றுமைகளை அனுசரித்து ஏற்றுக்கொள்ள வேண்டும். அதை அடிப்படை நன்நடத்தையாக நாம் உணரவேண்டும். இந்த அடிப்படை மனிதவிழுமியங்களை (நாகரீகமடைந்தாக கூறிக்கொள்ளும் மனிதர் என்னும் விலங்குகளிற்கு) இல்லை என்றால் எமக்கு மொழி கலாச்சாரம் பண்பாடு சமூகம் என இருந்து என்ன பயன்?
நாம் ஒவ்வொருவரும் சொந்தமாக குடில் தொடங்கலாம் இல்லை கொஞ்ச பணத்தை செலவளித்தால் சொந்தமாக கருத்துக்களம் ஒன்றையும் ஆரம்பித்து ஈ ஓட்டலாம். இதுதான் எங்கள் அனைவருக்கும் (சந்தேகம் இன்றி நான் உட்பட) உள்ள குறைபாட்டிற்கான தீர்வா?
கோழைகளாக இல்லாது எங்கள் குறைபாடுகளை விமர்சித்து எம்மை முன்னேற்ற முனைவோம். ஒளவையார் திருவள்ளுவர் கண்ணதாசன் எழுதிவைத்தது தான் எங்கள் கலாச்சாரம் அல்ல. நாம் ஒவ்வொருவரும் தினம் தினம் இதயசுத்தியோடு கடைமைக்கா என்றில்லாது உண்மையாக நடத்தும் வாழ்வுதான் எங்கள் கலாச்சாரம் பண்பாடு. யாழ்களத்தில் உங்கள் ஒவ்வொருவரின் பங்களிப்பும் இன்று தமிழராகிய எமது உண்மையான கலாச்சாரம் பண்பாட்டின் அங்கங்கள் என்றதை மறந்துவிடாதீர்கள்.