Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
புலம்பெயர்ந்துள்ள தமிழ் மக்களுக்கான முக்கிய செய்தி
#1
புலம்பெயர் வாழ் மக்களின் ஒற்றுமையையும் பலத்தையும் சர்வதேசத்திற்கு நிரூபிக்கும் காலம் கனிந்து விட்டது. உங்களது பணி தியாகம் ஒற்றமை என்பனவற்றை உலகம் அறிவதற்கான வாய்ப்பு உங்கள் வாயில் கதவைத்தேடி வந்துள்ளது. என விடுதலைப் புலிகளின் முக்கிய உறுப்பினர் திரு. க.வே.பாலகுமாரன் அவர்கள் புலம்பெயர் வாழ் மக்களிற்கு வழங்கியுள்ள செய்தியில் தெரிவித்துள்ளார். எதிர்வரும் 24ம் நாள் பிரசெல்ஸில் தமிழீழ விடுதலைப் புலிகள் மீதான ஐரோப்பிய ஒன்றியத்தின் பயணத் தடையை எதிர்த்து புலம்பெயர் வாழ் தமிழ் மக்கள் பேரணி ஒன்றை நடாத்துவதற்காக ஒழுங்கமைப்புக்களை செய்துள்ளனர்.

இதனையொட்டி விடுதலைப் புலிகளின் முக்கிய உறுப்பினரான திரு. க.வே.பாலகுமாரன் அவர்கள் புலம்பெயர் வாழ் மக்களுக்கு வழங்கியுள்ள செய்தியில் தெரிவித்திருப்பதாவது, புலம்பெயர் வாழ் மக்களின் ஒற்றுமையையும் பலத்தையும் சர்வதேசத்திற்கு நிரூபிக்கம் காலம் கனிந்து விட்டது.உங்களது பணி தியாகம் ஒற்றமை என்பனவற்றை உலகம் அறிவதற்கான வாய்ப்பு உங்கள் வாயில் கதவைத்தேடி வந்துள்ளது. இந்த வேளையில் தான் உங்களுக்கு ஒரு செய்தியை சொல்ல விரும்புகிறேன். நாம் இன்று புலத்திலே களம் காண்கின்றோம் அதற்கமைய எதிர்வரும் 24ம் நாள் பிரசெல்ஸில் உங்களுக்கென ஒரு பெரும் பணி காத்திருக்கிறது. அதில் நீங்கள் சொல்லப்போகும் செய்தி ஜரோப்பிய ஒன்றியத்தினால் எங்கள் மீது விதிக்கப்பட்டுள்ள தடையானது ஒட்டுமொத்த தமிழினத்தையும் சினமடைய வைத்துள்ளது என்பதனை ஐரோப்பிய ஒன்றியத்திற்கு உணர்த்தப்போகிறது.

எந்தவொரு தடையை விதிப்பதன் மூலமும் புலிகளை நசுக்கி பலமிழக்க செய்து பேச்சு வார்த்தை நடத்துவதென்பது முட்டாள் தனமானது என்பதையும் இது ஒர் எதிர்மாறான விளைவை எற்படுத்தப்போகின்றது என்றும் உணர்த்தப் போகின்றது.

அதுமட்டுமின்றி சிங்களப் பேரினவாதம் தனது இனவாதப் போக்கால் தமிழ் மக்களின் ஆன்மாவை தட்டியெழுப்பியுள்ளது. அது வரும் 24ம் நாள் ஒன்றாக சங்கமித்து உரத்து ஒலிக்கும். அதுவே இன்று தனியாக தமிழர்களின் கையில் பறந்து கொண்டிருக்கும் தேசியக் கொடியை சர்வதேச அரங்கில் பறக்கச் செய்யப்போகின்றது.
எனவே என் அன்பிற்குரிய மக்களே உங்கள் பலம் சர்வதேச சமூகத்தின் ஆன்மாவை தட்டியெழுப்பட்டும் எதிர்வரும் இந்த நாள் உங்கள் வெற்றி நாளாக அமையட்டும் அதற்காக எல்லோரும் அணி திரள்வோம் எனத் தெரிவித்துள்ளார்.

<i>நன்றி நிதர்சனம் இணையத்தளம்</i>
http://www.nitharsanam.com/?art=12494
Reply


Messages In This Thread
புலம்பெயர்ந்துள்ள தமிழ் மக்களுக்கான முக்கிய செய்தி - by kurukaalapoovan - 10-22-2005, 11:41 AM

Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)