10-22-2005, 03:35 AM
சிறிலங்கா அரச தலைவர் தேர்தலில் ரணில் விக்கிரமசிங்கவை ஆதரிப்பதன் மூலமே சந்திரிகாவின் சிறிலங்கா சுதந்திர கட்சியை காப்பாற்ற முடியும் என்று நாடாளுமன்ற உறுப்பினர் கபீர் காசிம் தெரிவித்துள்ளார்.
கேகாலையில் நடைபெற்ற தேர்தல் பரப்புரைக் கூட்டத்தில் கபீர் காசிம் பேசியதாவது:
ரணில் விக்கிரமசிங்கவின் வெற்றி உறுதியானது என்று தெரிந்த நிலையில்தான் சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் அதிகார மையத்தைக் காப்பாற்ற ஜே.வி.பி திட்டமிட்டு வருகிறது.
அதிகாரத்தைக் கைப்பற்றுவதற்காகவே கடந்த தேர்தலில் சுதந்திரக் கட்சியுடன் கூட்டணி அமைத்து ஐக்கிய தேசியக் கட்சியை தோற்கடித்தது ஜே.வி.பி. சுதந்திரக் கட்சியின் வேட்பாளர் மகிந்த ராஜபக்ச தனது ஆதரவாளரான மங்கள சமரவீர, சிறீபதி சூரியராச்சி மூலம் ஜே.வி.பி. விரித்த வலையில் விழுந்துள்ளார். வன்முறைப் பாதை மூலம் தாங்கள் சாதிக்க நினைத்ததை இப்போது வேறு வழிகளில் சாதிக்க ஜே.வி.பி. முனைகிறது.
இதன் விளைவாக பண்டாரநாயக்க, திருமதி பண்டாரநாயக்க, சந்திரிகா பண்டாரநாயக்க ஆகியோரால் பாதுகாக்கப்பட்ட சுதந்திரக் கட்சி நீர்த்துப் போய்விடக் கூடும். சுதந்திரக் கட்சியுடன் ஜே.வி.பி. கூட்டணி அமைத்த குற்றச்செயலை செய்துவிட்டதாக ஏற்கனவே அனுரா பண்டாரநாயக்க அதிருப்தியில் உள்ளார். சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் நீண்டகாலத் தலைவர்கள், ஜே.வி.பி-சுதந்திரக் கட்சி கூட்டணியால் வருத்தமடைந்துள்ளனர்.
சுதந்திரக் கட்சியை ஜே.வி.பி.யிடமிருந்து காப்பாற்ற ஒரே வழி ரணில் விக்கிரமசிங்கவை வெற்றி பெற வைப்பதுதான் என்றார் கபீர் காசிம்.