Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
நன்றி பதிவுகள்.கொம்.
#12
பெண்ணியம் தொடாபாக காலம்காலமாக நாம் உணர்ச்சி கொந்தளிக்கும் வகையில் வாதப்பிரதிவாதங்களில் ஈடுபட்டு வருகின்றோம். இந்த வாதங்களின் பயணாக அல்லது அதுவும் ஒரு காரணமாக பெண்கள் தொடர்பான எமது கருத்துக்ளில் ஆரோக்கியமான மாற்றம் ஏற்பட்டுவருகின்றது. இருப்பினும் வளர்ந்து வரும் மனித அறிவின் வேகத்துக்கு நிகராக பெண்ணியம் தொடர்பான கருத்தியல் மாற்றத்தின் வேகம் குறைவாகவுள்ளது போன்றேதென்படுகின்றது.

எமது இனத்தைப் பொறுத்தவரையில்; நாம் பெண்களது உரிமை என்று சொன்னவுடன் தமிழ்க்கலாச்சாரம் என்று தொடங்கிவிடுகின்றோhம். (உண்மையில் கலாச்சாரம் என்ற சொல்லே தமிழ் இல்லையாம். பண்பாடுதானாம் சரியான சொல் அது ஒருபுறம் இருக்க) நாம் எமது பண்பாட்டை(கலாச்சாரம்) பெண்களில்தான் முற்றுமுழுதாகப் பார்க்க முனைகின்றோம். ஏனெனில் எமது சமுதாயம் ஆண்வழி சமூகம். அதாவது சமுதாயத்தின் கட்டமைப்பை தீர்மானிப்பவர்கள் ஆண்கள். (ஆணாதிக்க சமுதாயம் என்ற சொல் எமது நண்பர்கள் பலரை கடுமையாகப் பாதிக்கின்றது போலிருக்கின்றது எனவே இந்த ஆண்வழி என்ற சொற்தொடரையே பாவிக்கின்றேன்.) மனிதவாழ்க்கை நாகரிக வளர்ச்சிக்கேற்ப எமது விரிவாக்கம் அடையும்போது அதற்கேற்ப ஆண் தனது நடை உடை பாவனையில் மாற்றத்தை தானாகவே ஏற்படுத்திக் கொண்டான். அதனை எமது சமுதாயம் ஒன்றும் சொல்லாமலே ஏற்றுக்கொண்டது. ஆண் வேட்டியை மாற்றி காற்சட்டை அணிந்தபோதோ அல்லது திருமணத்தின் பின் மெட்டி கடுக்கன் என்பவற்றை அணிவதை நிறுத்தியபோதோ அது பெரிய தமிழ்பண்பாட்டுப்பிரச்சணையாக யாரும் கருதியதாக நான் அறியவில்லை. அதனில் எந்த தவறு இருப்பதாயும்; தெரியவில்லை. ஆனால் சிக்கல் எப்போது உருவெடுத்ததெனில் பெண்ணும் ஆணுக்கு நிகராக சமூகபொருளாதார செயற்பாடுகளில் இறங்கியபோது அவளும் பழைய பழக்கவழக்கங்களில் சிலவற்றை கழட்டிவைக்க வேண்டிய தேவையேற்பட்டபோது 'பண்பாட்டுக்கூச்சல்கள்' சற்றுப் பலமாகவே ஒலிக்கத்தொடங்கின. ஏனெனில் எமது சமுதாயம் ஆண்வழியானது. ஆண்தான் மாறும்போது அவனது பண்பாட்டு 'பிறழ்ச்சி' அவனுக்குத் தெரிந்திருக்கவில்லை அல்லது தெரிந்து கொள்ள விரும்பவில்லை. ஆனால் பெண்மாறும் போது அவனால் தனது இனத்தின் 'பண்பாடு பாழ்பட்டுப்" போவதைக் காணச் சகிக்க முடியவில்லை. எமது சமூகத்தில் கருத்தியலை உருவாக்குபவனும் ஆணாயிருப்பதனால் இப் "பண்பாட்டுச் சீரழிவுக்கு" எதிராக அவனால் பலமாகவே கூக்கிரலிட முடிந்தது முடிகின்றது. அணிகலன்களை அணிந்துதான் எமது பண்பாட்டை பேணவேண்டும் என்ற நிலையில் எமது பண்பாடு அவ்வளவு தரம் குறைந்ததாக இருப்பதாகத் தெரியவில்லை. எமது பண்பாடு என்பது எமது வாழ்க்கையை வளப்படுத்துவதாய் இருத்தல்வேண்டும். எமது வளர்ச்சிக்கு முட்டுக்கட்டை போடும் எமது பழைய பழக்கவழக்கம்களை நாம் தொடர்ந்து பின்பற்றுவதனால் எந்தவொரு நன்மையும் எவருக்கும் கிட்டப்போவதில்லை.

உண்மையில் நாம் ஒவ்வொருவரும் எமது சமுதாயத்தால் வனையப்பட்டவர்கள். நாம் வாழ்ந்த சுற்றாடல் நாம் கற்ற புத்தகங்கள் பத்திரிகைகள் எமது சமயம் எல்லாம் எமது இப்போதைய கருத்தியலில் பாரிய தாக்கத்தை ஏற்படுத்துகின்றன. அந்த சுற்றாடல் என்ன சொன்னதோ அதனையே சரியென பற்றிப் பிடித்திருக்கின்றோம். அதற்கு மாறாக எம்மால் சிந்திக்க முடியவில்லை அல்லது முயலவில்லை. ஆண்களுக்குரிய சிக்கல் என்னவெனில் அவர்களுக்கு பெண்கள் அடிமைப்படுத்தப்படுத்தப்படுகின்றார்கள் என்பது தெரியாமல் இருப்பதுதான். பெண்கள் எப்படியான முறையில் காலம்காலமாக செயற்பட்டு வந்தார்களோ அதுவே இயற்கையின் நியதி என்று ஆண்கள் எண்ணுகின்றார்கள். எனவே பெண்களது உரிமைப் பிரச்சணை ஒருபெரிய விடயமாக அவர்களுக்குத் தெரியவில்லை. பெண் தனது உரிமைக்காக குரல் எழுப்பும்போது அது ஏதோ இயற்கைக்கு மாறான செயலாக அவர்கள் பார்க்கின்றார்கள். ஆண்கள் பெண்ணின் நிலையிலிருந்து அவள் தொடர்பான விடயங்களை அனுகினால் அவள் எப்படியான செக்கில் பிணைக்கப்பட்டிருக்கின்றாhள் என்பதை புரியக்கூடியதாக இருக்கும்.


"மாற்றம் என்பதே மாறாத ஒன்று" என்ற மாக்சின் தத்துவம். அதுபோல பெண்தொடர்பான ஆணின் சிந்தனையிலும் மாற்றம் ஏற்படவேண்டும். இல்லையேல் இயற்கைசுழற்சியில் எமது பண்பாடு காலத்திற்கொவ்வாததாய் கருதப்பட்டு எதிர்கால சந்ததியினரால் கைவிடப்படும் பேரபாயம் ஏற்படும்.
Reply


Messages In This Thread
[No subject] - by இளைஞன் - 11-21-2003, 06:47 PM
[No subject] - by இளைஞன் - 11-21-2003, 06:58 PM
[No subject] - by Mathivathanan - 11-21-2003, 07:09 PM
[No subject] - by S.Malaravan - 11-21-2003, 08:43 PM
[No subject] - by கண்ணன் - 11-21-2003, 09:19 PM
[No subject] - by kuruvikal - 11-21-2003, 10:37 PM
[No subject] - by yarl - 11-21-2003, 10:40 PM
[No subject] - by yarl - 11-21-2003, 10:51 PM
[No subject] - by sOliyAn - 11-22-2003, 12:14 AM
[No subject] - by Kanani - 11-22-2003, 01:59 AM
[No subject] - by manimaran - 11-22-2003, 01:59 AM
[No subject] - by Mathivathanan - 11-22-2003, 02:32 AM
[No subject] - by kaattu - 11-22-2003, 02:50 AM
[No subject] - by kaattu - 11-22-2003, 02:51 AM
[No subject] - by Mathivathanan - 11-22-2003, 02:57 AM
[No subject] - by sOliyAn - 11-22-2003, 03:25 AM
[No subject] - by Mathivathanan - 11-22-2003, 09:52 AM
[No subject] - by kuruvikal - 11-22-2003, 10:45 AM
[No subject] - by kuruvikal - 11-22-2003, 11:22 AM
[No subject] - by sOliyAn - 11-22-2003, 01:20 PM
[No subject] - by Ilango - 11-22-2003, 01:34 PM
[No subject] - by sOliyAn - 11-22-2003, 01:54 PM
[No subject] - by shanthy - 11-22-2003, 08:49 PM
[No subject] - by S.Malaravan - 11-22-2003, 09:18 PM
[No subject] - by manimaran - 11-22-2003, 11:31 PM
[No subject] - by kaattu - 11-23-2003, 09:44 PM
[No subject] - by kuruvikal - 11-24-2003, 01:26 AM
[No subject] - by kaattu - 11-25-2003, 09:38 AM
[No subject] - by vasisutha - 11-25-2003, 03:00 PM
[No subject] - by vasisutha - 11-25-2003, 03:03 PM
[No subject] - by poorukki - 11-25-2003, 05:34 PM
[No subject] - by shanthy - 11-26-2003, 12:27 AM
[No subject] - by manimaran - 11-26-2003, 02:15 AM
[No subject] - by Chandravathanaa - 12-01-2003, 09:11 PM
[No subject] - by Saniyan - 12-01-2003, 10:22 PM
[No subject] - by manimaran - 12-02-2003, 01:28 AM
[No subject] - by kuruvikal - 12-02-2003, 03:44 PM
[No subject] - by vasisutha - 12-03-2003, 12:24 AM
[No subject] - by kuruvikal - 12-03-2003, 03:04 PM
[No subject] - by vasisutha - 12-03-2003, 10:10 PM
[No subject] - by kuruvikal - 12-03-2003, 10:29 PM
[No subject] - by vasisutha - 12-03-2003, 10:35 PM
[No subject] - by vasisutha - 12-03-2003, 10:40 PM
[No subject] - by shanthy - 12-04-2003, 08:11 AM
[No subject] - by kuruvikal - 12-04-2003, 11:20 AM
[No subject] - by பாரதி - 12-04-2003, 01:18 PM
[No subject] - by kuruvikal - 12-04-2003, 01:54 PM
[No subject] - by vasisutha - 12-04-2003, 03:27 PM
[No subject] - by Paranee - 12-04-2003, 03:31 PM
[No subject] - by Mathivathanan - 12-19-2003, 01:39 PM
[No subject] - by kuruvikal - 12-19-2003, 03:08 PM
[No subject] - by இளைஞன் - 12-19-2003, 04:39 PM
[No subject] - by Chandravathanaa - 01-28-2004, 09:37 AM
[No subject] - by vasisutha - 01-28-2004, 10:36 PM
[No subject] - by Chandravathanaa - 01-28-2004, 11:11 PM
[No subject] - by இளைஞன் - 07-12-2004, 01:14 AM
[No subject] - by Chandravathanaa - 07-14-2004, 03:12 PM

Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)