10-21-2005, 04:01 PM
ஐயோ,
தங்கரின் தங்கமான குணமென்று சொல்பவர்களே நான் கேட்ட கேள்விகளுக்கு உங்கள் பதிலென்ன?
தன்னிடம் வேலை பார்ப்பவருக்குரிய 600 ரூபாயைக் கொடுக்காதது நல்ல குணமா?
தன் உரிமைக் கேட்டவர்களை விபச்சாரிகள் என்று சொன்னது தங்கமான குணமா?
தானே கெட்டவை என்று சொல்பவற்றைத் தன் படங்களில் வைத்துவிட்டு பிறகு மற்றவர்களை அதே காரணத்துக்காகக் கிண்டலடிப்பது தங்கமான குணமா? சொல்லுங்கள் அழகியில் விவேக்கின் நகைச்சுவைக் காட்சிக்கும் குருவி குடைந்த கொய்யாப்பழ ஆபாச நடனத்துக்கும் என்ன தேவை? பிறகு தான் மட்டுமே சரியான , நல்ல படங்களை எடுப்பவன் என்ற புரட்டைச் சொல்வதில் என்ன தங்கமான குணமிருக்கிறது?
நீங்களே சொல்லுங்கள் உங்கள் முதலாளி உங்களுடைய சம்பளத்தைத் தராமல் ஏமாற்றுகிறார். அதைக்கேட்ட உங்களை விபச்சாரியென்றோ அல்லது உங்கள் குடும்பத்தைக் கீழ்த்தரமாகவோ திட்டுவதோடு சம்பளத்தையும் தரமறுக்கிறார். அவரை தங்கமான மனிதரென்றா சொல்வீர்கள்?
என்னையா கதை விடுகிறீர்கள்? இவ்வளவு செய்தபின் அவரைத் தங்கமானவர் என்று கதைவிடும் உங்களின்அறியாமையை என்னவென்பது. தங்கர் கெட்டதுக்கு எங்கட புலம்பெயர்ந்தவர்களும் ஒரு காரணம் என்பது மறுக்கமுடியாத உண்மை. அவருக்கு அளவுக்கதிகமான பணஉதவிகள் செய்வதிலும் தலையில் தூக்கிவைத்து ஆடுவதிலும் அவர்கள்தான்முன்னணியில் நிற்கிறார்கள்.
சினிமாத்தயாரிப்பாளர் ஒஸ்கார் ரவிச்சந்திரன் தன்னிடம் 60 லட்சம்ரூபாவுக்கு தங்கர் பச்சான் ஏமாற்றிவிட்டார் என்று சொன்னது தெரியாதா? ஒன்பதுரூபா நோட்டுப் படமெடுக்கிறேன் என்று காசுவாங்கி அந்தப் படத்தை இடைநடுவில் விட்டுவிட்டுத் திரிகிறாரே தங்கர் பச்சான். இன்றும் அந்தப் படத்தை வேறுயாருக்காவது எடுப்பதானால் அந்த 60 லட்சத்தையும் கொடுத்தாக வேண்டிய நிலையில் அந்தப் படத்தை எடுக்காமலேயே கிடப்பில் போட்டுள்ளாரே தங்கர். இவரா தங்கமானவர்?