Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
பிரஸெல்ஸ் பேரணிக்குத் தடை?கோருகிறார் ஆனந்தசங்கரி
#1
<b><span style='font-size:30pt;line-height:100%'>பிரஸெல்ஸ் பேரணிக்குத் தடை விதிக்க கோருகிறார் ஆனந்தசங்கரி!</b> </span>
[வெள்ளிக்கிழமை, 21 ஒக்ரொபர் 2005, 18:10 ஈழம்] [கொழும்பு நிருபர்]
<b>தமிழீழ விடுதலைப் புலிகளின் ஐரோப்பிய ஒன்றியத்தின் பயணத் தடையை நீக்கக் கோரி பிரஸெல்சில் எதிர்வரும் 24ஆம் திகதி நடைபெற உள்ள பேரணிக்கு தடை விதிக்க வி.ஆனந்தசங்கரி கோரியுள்ளார்.


ஐரோப்பிய ஒன்றியத்தின் அனைத்துத் தலைவர்களுக்கும் எழுத்து மூலம் வி.ஆனந்தசங்கரி விடுத்துள்ள வேண்டுகோள்:

இலங்கையின் வடகு கிழக்கில் படுகொலைகள் தொடர்வதால் எதிர்வரும் 24 ஆம் திகதி பிரஸெல்ஸில் நடைபெறவுள்ள விடுதலைப்புலி ஆதரவு பேரணிக்கு இடமளிக்க வேண்டாம்.

ஒவ்வொரு நாளும் அரச கட்டுப்பாட்டுப் பிரதேசத்தில் குறைந்த பட்சம் ஒருவரேனும் படுகொலை செய்யப்படுகிறார்கள்.

கடத்தல், சித்திரவதை செய்தல், கைது செய்தல், படுகொலை செய்தல் ஆகிய செயற்பாடுகள் மூலம் மனித உரிமை மீறல் நடவடிக்கைகளில் விடுதலைப் புலிகள் ஈடுபடுகின்றனர்.

தங்கள் மீது விதிக்கப்பட்டுள்ள ஐரோப்பிய நாடுகளுக்குப் பயணம் செய்வதற்கான தடையை நீக்கிக் கொள்ளும் நோக்கில் விடுதலைப் புலிகளின் தலைவர்கள் எதிர்வரும் 24 ஆம் திகதி பிரஸெல்ஸில் பேரணியொன்றை நடத்துமாறு தங்களுடன் தொடர்புடைய அமைப்புகளுக்குத் தெரிவித்துள்ளனர்.

இந்த பேரணியில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர்கள் சிலரும் கலந்து கொள்ள உள்ளனர். விடுதலைப் புலிகளினால் மேற்கொள்ளப்படும் படுகொலைகள் மற்றும் சிறுவர் கடத்தல்களை இவர்கள் ஒருபோதும் கண்டிக்கவில்லை என்றும் கூறியுள்ளார்.
</b>

www.puthinam.com
[b]<span style='font-size:25pt;line-height:100%'>
</span>
Reply


Messages In This Thread
பிரஸெல்ஸ் பேரணிக்குத் தடை?கோருகிறார் ஆனந்தசங்கரி - by வினித் - 10-21-2005, 01:10 PM
[No subject] - by vasisutha - 10-21-2005, 01:40 PM
[No subject] - by தூயவன் - 10-21-2005, 02:47 PM
[No subject] - by கறுணா - 10-21-2005, 03:47 PM

Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)