Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
வெற்றி பெறுவதற்குரிய வழிமுறைகள்
#1
வெற்றி பெறுவதற்குரிய வழிமுறைகள்



இந்தியாவின் நம்பிக்கை நட்சத்திரங்களாக இன்று டென்னிஸ் வீராங்கனை சான்யா மிர்ஸhவும், கார் பந்தய வீரர் நரேன் கார்த்திகேயனும் திகழ்வதைப் பார்க்கின்றேhம். வெற்றியின் உச்சிக்கு அவர்கள் இன்னும் போகவில்லை. ஆனாலும், அவர்கள் நெம்பர் ஒன் இடத்திற்கு நிச்சயம் வருவார்கள் என்றும், மிகப் பெரிய அளவில் புகழ் பெறுவார்கள் என்றும் பத்திரிகைகளும், தொலைக்காட்சி
களும், வர்த்தக நிறுவனங்களும் இப்போதே கணித்து விட்டன. இதனை எப்படி கணிக்க முடிந்தது?

இதற்கான விடை மிகவும் எளிதானது. ஏனென் றhல், வெற்றிப் பெறப் போகின்ற எவரிடமும், தனித்துவமான அடையாளங்கள் இருக்கும். இந்த அடையாளங்கள், அவர்களிடம் தெரிவதற்கு முன்பாக அவர்கள், இந்த வெற்றிக்காக அவர்கள் உழைத்த உழைப்பு, திட்டமிடல் இவற்றை எல்லாம் அளவிட்டுக் கூறிட முடியாது. தனக்கு என்ன வேண்டும் என்று மனத் தௌpவு முதல் தேவை. தனக்கு என்ன வேண்டும் என்று தெரியாதவர் அதை அடைவது கடினம். முடியாது...
வாழ்க்கையின் முதல் பாதியை நாம் எப்படி எவ்வளவு சீக்கிரம் கடந்திருக்கிறேhம் என்பதில்தான் இரண்டாவது பகுதியின் வெற்றியே அமைந்திருக் கிறது. இன்போசிஸ் நாராயண மூர்த்தி, டாக்டர் ரெட்டி லேபோரெட்ரீஸ், நிறுவனர் ஆஞ்சி ரெட்டி போன்றவர்கள் எல்லாம் தங்களின் சாதனைகளை ஒருநாள் ஒரு பொழுதில் நிகழ்த்தி விடவில்லை.

வெற்றி பெற்று விருது பெறும் அவர்களின் சிரித்த முகங்களுக்குப் பின்னே எவ்வளவு சிரமங்கள் இருந்தன என்பதை உலகம் அறிந்திருக்க வாய்ப் பில்லை. வெற்றிகரமான வாழ்க்கை என்பதும் ஒரு திரைப்படம் போன்றதுதான். துவக்கத்திலிருந்தே கதை விறு விறுப்பாக செல்ல வேண்டும். ஒரு திரைப்படத்திற்கு துவக்கம், இடைவேளை, சுபம் என்று இருப்பதுபோல், ஒவ்வொரு வெற்றிக்குப் பின்னாலும் இத்தனையும் நிச்சயம் இருந்தே தீரும்.

ஏனென்றhல் வெற்றிக்கு எந்த குறுக்கு வழியும் கிடையாது. திட்டமிட்ட உழைப்பு, சரியான உழைப்பு, உரிய சந்தர்ப்பம் இவைதான் ஒருவரது வெற்றிக்கு காரணமாகின்றன. பல சமயங்களில் வாய்ப்புகள் கையருகிலேயே இருந்திருக்கும் அடுத்தவர் செய்த பிறகுதான் அடடா... இதை நாமே செய்திருக்கலாமே என்று தோன்றும். நீங்கள் கலந்துகொள்ளப் போகும் போட்டியைக் குறித்த அறிவிப்புகள் எப்போது வேண்டுமானாலும் வரலாம். நாம்தான் தயாராக இருக்கவேண்டும். ஜhதகத்தில் 3 கிரகங்களாவது ஆட்சி உச்சமாக இருக்க வேண்டும் என்று சொல்வதைக் கேட்டு இருப்பீர்கள்.
இதனையொட்டிய ஒரு கருத்தினை தான் நமது நிதி அமைச்சர் ப.சிதம்பரம் அவர்கள் சொன்னார்கள். அதாவது இந்திய ஆட்சித் துறையின் எல்லா என்ஜpன்களும் சரியான வேகத்தில் இப்போது செயலாற்றுகின்றன என்று கூறினார்.

ஒரு காரின் என்ஜpன், ஆக்ஸிலேட்டர், பிரேக், கிளெட்ச், ஸ்டியரிங், கியர் என்று எல்லாம் சிறந்த வேலை செய்வதாக இருக்க வேண்டும். வெற்றி என்பது தோல்விகளே இல்லாதது அல்ல.

வெற்றி என்பது இறுதி இலக்கை அடைவது என்கிறhர் எட்வின் பிலிஸ். வெற்றி என்பது ஒவ் வொரு போராட்டத்திலும் வெல்வதென்பதல்ல. இறுதிப் போரில் வெல்வதாகும். ஆறுகள் தாங்கள் ஓடும் பாதையில் இங்கும், அங்கும் தடைகள் இருந்தால் சுற்றிப்போகும். ஆனால் செல்லும் திசையை அடைய வேண்டிய இலக்கைத் தவற விடாது. நாமும் வெற்றி பெறுவதில் ஆற்றினைப் போலத்தான் செயல்படவேண்டும்.

தன்னம்பிக்கை இருப்பவனை யாராலும் தோற்கடிக்கவே முடியாது. இரு கைகளைக் காட்டிலும் நம்ப வேண்டியது தன்னம்பிக்கை.
வெற்றிக்கும், தோல்விக்கும் பல சமயங்களில் இடைவெளி மிகக் குறைவு. ஒலிம்பிக் போட்டிகளில் தங்கப்பதக்கத்துக்கும், வெள்ளிப்பதக்கத்துக்கும் என்ன வித்தியாசம் பல நேரங்களில் ஒரு விநாடிக்கும் குறைவு. இவ்வளவு செய்தவர் இன்னும் கொஞ்சம், கொஞ்சம் செய்திருந்தால் அவர்தானே முதல் அவருக்குத்தானே தங்கம்.
உண்மை அதுதான். இறங்கியாயிற்று. வெற்றி பெற்று விட வேண்டும். எதையும் விட்டுவிடக் கூடாது.

உங்களிடம் உள்ளது முழுவதையும் பயன்படுத் துங்கள். வெற்றி உங்களுக்குத்தான். உதாரணமாக 10 கிண்ணங்களை வரிசையாக சுற்றி விடவேண்டும். பத்தும் ஒரே சமயத்தில் சுற்ற வேண்டும். ஐந்தாவது கிண்ணத்தை சுழற்றும் போது முதலாவது கிண்ணம் தனது சுழற்சியை நிறுத்திவிடக்கூடாது.

இந்த பத்து கிண்ணங்கள்.

1. திறமை, 2.ஆரோக்கியம், 3.தொழில் அறிவு, 4. பண பலம், 5.சுயகட்;டுப்பாடு, 6. நட்பு வட்டம், 7. கவனம், 8. மாறுதலுக்கு தயாரான மனம்,9. இட மறிதல், 10. சமயோஜpத புத்தி. இந்த பத்து கிண்ணங்களும் ஒரே சீராக சுற்றி வரும் என்றhல் எவரும் நிச்சயம் வெற்றி வீரராகலாம்.

-எஸ். கதிரேசன்.
Reply


Messages In This Thread
வெற்றி பெறுவதற்குரிய வழிமுறைகள் - by aathipan - 10-21-2005, 12:44 PM

Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)