Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
நன்றி பதிவுகள்.கொம்.
#2
<b>நிகழ்வுகள்</b>
<b>சுவிஸ் பெண்கள் சந்திப்பு 2003! </b>
<b>ஒரு குறிப்பு! </b>
<b>றஞ்சி (சுவிஸ்)</b>

புகலிடத்தில் வாழும் பெண்கள் தங்கள் கருத்துக்களையும் அனுபவங்களையும் பா¢மாறிக்கொள்ளும் முகமாக 1990இல் §ஐர்மனியில் உள்ள சில பெண்களால் ஆரம்பிக்கப்பட்டது. இப் பெண்கள் சந்திப்பு §ஐர்மனியின் பல்வேறு மாநிலங்களில் தொடர்ந்து நடைபெற்று வருகின்ற அதேநேரம், அது தனது எல்லைகளை விஸ்தா¢த்து சுவிஸ், பிரான்ஸ் போன்ற நாடுகளிலும் சந்திப்புகளை நடாத்தி வருகின்றது. ஜரோப்பாவில் வாழும் பெண்கள் மட்டுமன்றி இலங்கை, இந்தியா அவுஸ்திரேலியாவிலிருந்தும்கூட பெண்கள் வந்து கலந்து கொள்ளும் சந்திப்பாக வளர்ந்திருக்கிறது. சுவிஸில் மூன்றாவது தடவையாக நடைபெறும் பெண்கள் சந்திப்பின் 22வது தொடர் ஒக்டோபர் மாதம் 11ம் திகத§ சுவிஸ் சூ¡¢ச் நகா¢ல் நடைபெற்றது. இச் சந்திப்பு தனது 13வது வருடத்தை பூர்த்தி செய்வதும் இங்கு குறிப்பிடத்தக்கது. ஓரு நாள் நிகழ்ச்சியாக நடைபெற்ற இச் சந்திப்பில் பெண்ணியச் சிந்தனை நோக்கிலான கருத்தாடல்கள், அனுபவப் பகிர்வுகள், விமர்சனங்கள் என்பன இடம்பெற்றன.

வழமைபோல் சுய அறிமுகத்துடன் நிகழ்வுகள் ஆரம்பிக்கப்பட்டன. "தமிழ்ப் பெண்களின் முன்னேற்றத்திற்கு தடையாக இருக்கும் கலாச்சாரமும் பெண்களும்" என்ற தலைப்பில் பிரான்ஸைச் சேர்ந்த பா¢மளா தனது கருத்தை வெளியிட்டார் அவர் கூறும்போது சகல பெண்களும் ஒடுக்குமுறைக்கு உட்பட்டிருக்கின்றோம், வெள்ளை இனப் பெண்களாக இருந்தால்கூட. குறிப்பாக வறிய வெள்ளை இனப் பெண்கள், ஆபி¡¢க்கப் பெண்களைவிட இந்திய, இலங்கைப் பெண்கள் கலாச்சாரத்தினால் கூடுதலாக ஒடுக்கப்பட்டிருக்கிறார்கள் என்றே நினைக்கிறேன். இந்திய இலங்கைப் பெண்கள் 'தாலி' என்ற பதத்தை வைத்து சென்¡¢மென்டாகவும் பெண் ஒடுக்குமுறைக்குள் தள்ளிவிடப்பட்டுள்ளார்கள். பண்டைய காலத்தில் மாடுகளை தங்களுடைய மாடுகள்தாம் என அடையாளம் காண்பதற்காக நிறம் பூசிய கயிறுகள் மூலம் கட்டுவர். அதேபோல்தான் இந்தத் தாலியும் என்று கூறினார். கலாச்சாரத்தை பெண்கள் மட்டும்தானா கட்டிக்காக்க வேண்டும் என்றும் கேள்வி எழுப்பினார். தாய்வழிச் சமூகம் இருந்த காலத்தில் பெண்கள் கடின உழைப்பாளிகளாகவும் ஆண்கள் வீட்டு வேலைகளை செய்பவர்களாகவும் இருந்திருக்கிறார்கள். தாய்வழிச் சமூகம் மாறி தந்தைவழிச் சமூகம் வந்தபின் அவர்கள் பெண்களை அடக்குவதற்காக தாலி, சாமர்த்திய சடங்கு, பொட்டு பூ நகை போன்ற அடையாளங்களை வேண்டுமென்றே கலாச்சார சின்னங்களாக திணித்து பெண்களை அடிமையாக்கியுள்ளனர். இவ்வாறாக தனது கருத்துக்களை முன்வைத்தார் பா¢மளா. கலந்துரையாடல் ஒன்றரை மணிநேரம் நடைபெற்றது மட்டுமல்லாமல் பயனுள்ளதாகவும் அமைந்தது.

மதியபோசனத்தின் பின் சாந்தினி வரதராஐன் "புலம்பெயர் தமிழ்ப் பெண்களின் முற்போக்கு சிந்தனையும் அவர்கள் வாழும் பிற்போக்கு வாழ்க்கையும்" என்ற விடயத்தினை முன்வைத்து தனது கருத்தை வெளியிட்டார். இன்று பெண்கள் தாங்கள் வாழும் வாழ்க்கையில் பின்தங்கியே உள்ளார்கள் என்றும் மனம்விட்டுப் பேசக்கூட அவர்களால் முடியாமல் உள்ளதாகவும் குறிப்பிட்ட அவர், தாங்கள் முற்போக்கு சிந்தனையுடன் தான் வாழ்கிறோம் எனக் கூறிக்கொண்டு தங்களைத் தாங்களே ஏமாற்றிக் கொண்டிருக்கிறார்கள் என்றும் கூறினார். இதையடுத்து பலர் அங்கு மனம்விட்டுக் கதைத்தார்கள். இது அங்கு சமூகமளித்த பெண்களை உணர்வு¡£தியில் ஒன்றுகூட வைத்தது சிறப்பான அம்சமாக அமைந்தது.

அடுத்த நிகழ்ச்சியாக பெண்கள் சந்திப்பு மலர் 2002 இன் மீதான ஓர் வாசிப்பை §ஐர்மனியைச் சேர்ந்த சந்திரவதனா செய்யவிருப்பதை அறிவித்த நான், அதற்குமுன் இம் மலர் பற்றிய சில கருத்துக்களை எனது தலைமையுரையின் ஒரு பகுதியாகக் குறிப்பிட்டேன். பால்வினைத் தொழில் பற்றிய விடயங்களை கருப்பொருளாகக் கொண்டு இம் மலர் வெளிவந்துள்ளது. பால்வினைத் தொழில் என்ற சொல்லே எம்மில் பலருக்கு அலர்ஐ¢யை ஏற்படுத்தக்கூடியது. இது என்ன சாக்கடை, இந்த அசிங்கத்தை எழுதுவதன் மூலம் நாமும் கெட்டவர்கள் ஆகிவிடுவோமா என்ற பயமும் எம்மில் சிலருக்கு. ஒரு தலைப்பைத் தொ¢வு செய்து இதுபற்றி எழுதுங்கள் என வரையறுப்பது படைப்பாளியின் சுதந்திரத்தில் தலையிடுவது போன்றது என்றாலும், சமூகத்தில் நடைமுறையில் இருக்கும் பாலியல் சுரண்டல், சமப்பாலுறவு போன்ற விடயங்கள் ஏனைய சமூகங்களில் பேசப்படுவது போன்று தமிழ்பேசும் மக்களிடையே உரத்துப்பேசப்படுவதில்லை. பால்வினைத் தொழிலை பேசு பொருளாக்குவதன் மூலம் பெண்கள் மீது சமூகமும் அதனுடன் தொடர்புடைய சகல நிறுவனமயப் படுத்தபட்டவைகளும் எவ்வாறு அடக்குமுறையை திட்டமிட்டுப் பேணுகின்றன என்பதை நாம் வேறு ஒரு பா¢மாணத்தில் காணலாம். பெண்ணியம் பற்றிய பு¡¢தலில், உணர்தலில் பால்வினைத் தொழில் பற்றிய கருத்தோட்டத்தையும் வாதப்பிரதிவாதங்களையும் ஏற்படுத்த வேண்டிய தேவையின் அடிப்படையில் இதனை நாம் தொ¢வு செய்திருந்தோம் என தொகுப்பாளர்கள் கூறியுள்ளார்கள்.

<b>ஆனால் இப் பெண்கள் சந்திப்பு மலர் வெளிவந்தவுடன் பல ஆண்கள் தங்களது காழ்ப்புணர்ச்சிகளை கொட்டவும் தவறவில்லை. யாழ் இணையத்தில் தங்களது ஆணாதிக்கக் கருத்துக்களை வலுப்படுத்துவதற்காக பெண்கள் சந்திப்புமலரை கொச்சையாக எழுதியதும் மட்டுமல்லாமல், தங்களது சொந்தப் பெயர்களில் எழுத திராணியற்ற ஆண்கள் வேறு பெயர்களில் பெண்கள் சந்திப்பு மலரைப் பற்றி மிகக் கேவலமான முறையில் யாழ்.கொம்மில் 14 பக்கங்கள் வரை தங்களது காழ்ப்புணர்வுகளை கொட்டித்தீர்த்தனர். அதற்குப் பதிலடி கொடுத்து இளைஞனும், சந்திரவதனாவும் தமது கருத்துக்களை கூறியிருந்தனர். அம் மலரை கண்ணால்கூட பார்க்காமல், அதில் வந்த கட்டுரைகளை வாசிக்காமல் கருத்துச் சொல்ல வருமளவுக்கு ஆண் மேலாதிக்கச் சிந்தனை எழுத்துத் தர்மத்தையே மீறி செயற்பட வைத்தது. இதற்குத் துணைபோன இணையத்தளங்கள் பொறுப்புடன் நடந்து கொள்ளாமைக்கு எனது வன்மையான கண்டனத்தைத் முன்வைத்தேன். இதன்பால் அபிப்பிராயம் தொ¢வித்த பலரும், இவர்களைப் போன்றவர்களை நாம் கணக்கில் எடுத்து விவாதிப்பதும் விமர்சிப்பதும் தேவையில்லாதது. இவர்கள் எல்லாவற்றுக்கும் மூக்கை நுழைப்பவர்கள். அதனால் இவர்களுக்கு பதில் சொல்ல வேண்டிய அவசியம் எமக்கு இல்லை எனவும் அத்துடன் சொந்தப் பெயர்களில் எழுதுவதை விடுத்து புனைபெயர்களின் பின்னால் ஒளிந்துகொள்வதே அவர்களது கருத்துகளின்மீதான திராணியற்ற தன்மையை வெளிப்படுத்துவதாகவும் கருத்துக்கள் கூறப்பட்டதுடன் யாழ்.கொம் மீது கண்டனமும் தொ¢விக்கப்பட்டது. </b>

இதைத் தொடர்ந்து இம் மலர் பற்றிய சந்திரவதனாவின் கட்டுரை வாசிக்கப்பட்டது. (இக் கட்டுரை கீழே இணைக்கப்பட்டுள்ளது)

பால்வினைத்தொழில் சம்பந்தமான தகவல்களைத் திரட்டும் இந்தக் கால கட்டத்தில் என்னால் வேறெதிலும் கவனம் செலுத்த முடியாதபடி மனசு ஏதோ ஒரு சோகத்தில் ஆழ்ந்து போயிருந்தது. இப்படியும் நடக்கிறதா..? இப்படியெல்லாம் சின்னஞ்சிறு சிறுமிகளும், பெண்களும் துயருறுகிறார்களா..? உலகம் இத்தனை ஏமாற்றுத்தனமும் நயவஞ்சகமும், சுயநலமும் நிறைந்ததா..? என்றெல்லாம் கேள்விகள் எனக்குள் எழுந்து கொண்டே இருந்தன. சில விடயங்களை நம்பவும் முடியாமல், நம்பித்தான் ஆக வேண்டும் என்ற நிலையில் உலகின் மூலை முடுக்குகளில் எல்லாம் பால்வினைத் தொழிலுக்காகவும், பாலியல் துர்ப்பிரயோகத்துக்காகவும் பலிக்கடாக்கள் ஆக்கப்பட்ட பெண்களின் துயர்களை மனசை விட்டு அகற்றவும் முடியாமல்.. அவஸ்தைப்பட்டேன் என உணர்வைக் கொட்டியபடி தொடங்கிய அவா¢ன் விமர்சனம் எல்லோரையும் பாதிப்பதாக இருந்தது.

இதற்கு கருத்துச் சொன்ன பெண்கள், இப்படியான பிரச்சினைகள் எமது சமூகத்தினா¢டமும் இருக்கின்றது அதை மூடி மறைத்து வருகின்றனர் என்றும் சென்ற ஆண்டில் வவுனியாவில் ஒரு சிறுமி 65 வயது நிரம்பிய ஆணால் பாலியல் வன்முறைக்கு ஆளாகியதை ஒரு உதாரணமாகவும் அந்த ஆண் குற்றவாளிக்கு நீதிமன்றம் 1500 ரூபா அபராதமும் 6 மாதச் சிறைத்தண்டனையும் விதித்த மலினமான தண்டனை பற்றியும் பேசப்பட்டது. புலம்பெயர் தேசத்திலும்கூட நிகழ்ந்த இவ்வாறான வன்முறை பற்றியும் (குறிப்பாக பிரான்ஸ் இல் கொலைசெய்யப்பட்ட சிறுமி நிதர்சினி உதாரணமாக்கப்பட்டார்) கருத்துக்கள் பா¢மாறப்பட்டது. இந்தியா போன்ற நாடுகளில் பால்வினைத் தொழிலாளர்கள் உருவாக்கப்படுவதில் ஆட்கடத்தல் மூலமாக அதாவது சிறுமிகள் யுவதிகளைக் கடத்திச் சென்று பலவந்தமாக இத் தொழிலுக்கு உட்படுத்தி பின் அதிலிருந்து மீளமுடியாமல் ஆக்கிவிடுவதின் மூலமும் பால்வினைத் தொழிலாளர்கள் உருவாக்கப்படுவது பற்றியும் பேசப்பட்டன.

அடுத்த நிகழ்ச்சியாக நளாயினி "ஒரு பெண்ணின் எழுதுகோலுக்குப் பின்னால்" என்ற தலையங்கத்தில் உரையாடினார். அவர் கூறும்போது ஒரு ஆண் எழுத்தாளன் ஒரு பெண் எழுத்தாளரை விட எத்தனை தவறுகள் செய்தாலும் இந்த சமூகம் எதையுமே கூற தலைப்படாது என்றும் ஒரு பெண் எழுத்தளருக்கோ இச்சமூகம் எழுந்தமானமான விமர்சனங்களால் சந்தேகப் பார்வைகளால் மனம் நொந்து தற்கொலை செய்யுமளவுக்கு தள்ளிவிடுகின்றனர் என்றும் கூறினார். அத்தோடு ஆண் எழுத்தாளர்கள் எதை வேண்டுமானாலும் எழுதிவிட்டு போகலாம்ளூ அது கருத்தோடு நோக்கப்படும் விமர்சனம்ளூ அந்த ஆணையோ அல்லது அவனின் குடும்பத்தையோ சாடாது எழுத்தோடு மட்டுமே நின்று கொள்ளும். ஓரு ஆண் எழுத்தாளன் காதலை காமத்தை சமூக வரம்பு மீறலை எதையும் எழுதலாம். ஆனால் ஒரு பெண் எழுத்தாளர் இதையே காமத்தை காதலை ஏன் பாலியல் சம்பந்தமாக எழுதிவிட்டால் அவளே அதை செய்ததாக குற்றச்சாட்டு வைத்து, விமர்சனத்தை கூறி, மனஅழுத்தத்தை ஏற்படுத்தி, அவளை எழுதவிடமால் பண்ணிவிடுகிறார்கள் என தனது பல கருத்துக்களை முன்வைத்தார்.

கடைசி நிகழ்ச்சியாக அடுத்த பெண்கள் சந்திப்பு மலர்க் குழு தொ¢வுசெய்யப்பட்டதுடன், பெண்களின் பிரச்சினைகளை மையமாக வைத்து எடுக்கப்பட்ட குறுந் திரைப்படங்களான மத்தம்மா, மல்லி, து¡க்கம், ஆயி'¡, ராஐ¡ங்கத்தின் முடிவு ஆகிய படங்கள் காண்பிக்கப்பட்டன. .

இப் பெண்கள் சந்திப்பினால் என்ன பலன் ஏற்பட்டுவிடப் போகிறது. பெண்கள் சந்திப்பு மலர் தேவைதானா?? கவிதை, கட்டுரை, கதை, ஓவியம், விமர்சனங்களினால் என்ன நிகழ்ந்துவிடப்போகிறது?? இவைகளால் பெண்களின் பிரச்சினைகள் இல்லாமல் போய்விடுமா?? அல்லது பெண்ணு¡¢மை தான் கிடைத்துவிடுமா?? இவ்வாறான கேள்விகளோடு இச் சந்திப்பிலிருந்து சில பெண்கள் ஒதுங்கிக் கொண்டனர். காலம்காலமாக எழும் இப்படியான சலனங்களுக்கு விடைகளை அவர்கள் தமது தரப்பிலேயே தேடிக்கொள்ள வேண்டியிருப்பதால் அவை எந்த சமூகச் செயற்பாட்டையும் இல்லாமல் செய்துவிடுவதில்லை. பெண்கள் சந்திப்பும் அதன் தொடர்ச்சியைப் பேணிக் கொண்டு ஒக்ரோபர் 11ம் தேதியன்று சுவிஸில் ஆக்கபூர்வமாக நடந்துமுடிந்தது. அடுத்த பெண்கள் சந்திப்பு (2004 ம்ஆண்டு) பிரான்சில் நடைபெறவுள்ளது.

நன்றி: பதிவுகள்.கொம்


Reply


Messages In This Thread
[No subject] - by இளைஞன் - 11-21-2003, 06:47 PM
[No subject] - by இளைஞன் - 11-21-2003, 06:58 PM
[No subject] - by Mathivathanan - 11-21-2003, 07:09 PM
[No subject] - by S.Malaravan - 11-21-2003, 08:43 PM
[No subject] - by கண்ணன் - 11-21-2003, 09:19 PM
[No subject] - by kuruvikal - 11-21-2003, 10:37 PM
[No subject] - by yarl - 11-21-2003, 10:40 PM
[No subject] - by yarl - 11-21-2003, 10:51 PM
[No subject] - by sOliyAn - 11-22-2003, 12:14 AM
[No subject] - by Kanani - 11-22-2003, 01:59 AM
[No subject] - by manimaran - 11-22-2003, 01:59 AM
[No subject] - by Mathivathanan - 11-22-2003, 02:32 AM
[No subject] - by kaattu - 11-22-2003, 02:50 AM
[No subject] - by kaattu - 11-22-2003, 02:51 AM
[No subject] - by Mathivathanan - 11-22-2003, 02:57 AM
[No subject] - by sOliyAn - 11-22-2003, 03:25 AM
[No subject] - by Mathivathanan - 11-22-2003, 09:52 AM
[No subject] - by kuruvikal - 11-22-2003, 10:45 AM
[No subject] - by kuruvikal - 11-22-2003, 11:22 AM
[No subject] - by sOliyAn - 11-22-2003, 01:20 PM
[No subject] - by Ilango - 11-22-2003, 01:34 PM
[No subject] - by sOliyAn - 11-22-2003, 01:54 PM
[No subject] - by shanthy - 11-22-2003, 08:49 PM
[No subject] - by S.Malaravan - 11-22-2003, 09:18 PM
[No subject] - by manimaran - 11-22-2003, 11:31 PM
[No subject] - by kaattu - 11-23-2003, 09:44 PM
[No subject] - by kuruvikal - 11-24-2003, 01:26 AM
[No subject] - by kaattu - 11-25-2003, 09:38 AM
[No subject] - by vasisutha - 11-25-2003, 03:00 PM
[No subject] - by vasisutha - 11-25-2003, 03:03 PM
[No subject] - by poorukki - 11-25-2003, 05:34 PM
[No subject] - by shanthy - 11-26-2003, 12:27 AM
[No subject] - by manimaran - 11-26-2003, 02:15 AM
[No subject] - by Chandravathanaa - 12-01-2003, 09:11 PM
[No subject] - by Saniyan - 12-01-2003, 10:22 PM
[No subject] - by manimaran - 12-02-2003, 01:28 AM
[No subject] - by kuruvikal - 12-02-2003, 03:44 PM
[No subject] - by vasisutha - 12-03-2003, 12:24 AM
[No subject] - by kuruvikal - 12-03-2003, 03:04 PM
[No subject] - by vasisutha - 12-03-2003, 10:10 PM
[No subject] - by kuruvikal - 12-03-2003, 10:29 PM
[No subject] - by vasisutha - 12-03-2003, 10:35 PM
[No subject] - by vasisutha - 12-03-2003, 10:40 PM
[No subject] - by shanthy - 12-04-2003, 08:11 AM
[No subject] - by kuruvikal - 12-04-2003, 11:20 AM
[No subject] - by பாரதி - 12-04-2003, 01:18 PM
[No subject] - by kuruvikal - 12-04-2003, 01:54 PM
[No subject] - by vasisutha - 12-04-2003, 03:27 PM
[No subject] - by Paranee - 12-04-2003, 03:31 PM
[No subject] - by Mathivathanan - 12-19-2003, 01:39 PM
[No subject] - by kuruvikal - 12-19-2003, 03:08 PM
[No subject] - by இளைஞன் - 12-19-2003, 04:39 PM
[No subject] - by Chandravathanaa - 01-28-2004, 09:37 AM
[No subject] - by vasisutha - 01-28-2004, 10:36 PM
[No subject] - by Chandravathanaa - 01-28-2004, 11:11 PM
[No subject] - by இளைஞன் - 07-12-2004, 01:14 AM
[No subject] - by Chandravathanaa - 07-14-2004, 03:12 PM

Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)