Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
கனடா
#2
<b>நம்பிக்கை ஊட்டும் கொடி </b>
தற்போதைய தேசியக் கொடி 1965ம் ஆண்டு பெப்ரவரி மாதம் 15ம் திகதி முதல் உத்தியோகபூர்வமாக அங்கீகரிக்கப்பட்டதாகும். கொடியில் மேப்பில் இலை சிவப்பு நிறத்தில் அமைந்துள்ளது. கனடா பல நாடுகளிலும் அபிவிருத்தி பணியில் ஈடுபட்டுள்ளது. சர்வதேச அமைதிப் பணியில் அதன் படையினர் ஈடுபட்டுள்ளார்கள். அங்கெல்லாம் நன்கு அறியப்பட்ட ஒன்றாக சிவப்பு மேப்பில் இலைக் கொடி அமைந்துள்ளது. அவலமுறுவோருக்கு நம்பிக்கை தருவதாகவும் அமைந்துள்ளது.

<b>தேசிய கீதம்</b>
O Canada!
Our home and native land!
True patriot love in all thy sons command.
With glowing hearts we see thee rise,
The True North strong and free!
From far and wide,
O Canada, we stand on guard for thee.
God keep our land glorious and free!
O Canada, we stand on guard for thee.
O Canada, we stand on guard for thee.

<b>கனடியத் தேசிய கீதம் (தமிழில்)</b>

ஓ கனடா! எங்கள் வீடும் நாடும் நீ !
உந்தன் மைந்தர்கள் உண்மைத் தேச பக்தர்கள் !
நேரிய வடக்காய், வலுவாய், இயல்பாய்
நீ எழல் கண்டுவப்போம் !
எங்கு உள்ள நாம் ஓ கனடா
நின்னைப் போற்றி அணிவகுத்தோம் !
எம்நிலப் புகழைச்சுதந்திரத்தை
என்றும் இறைவன் காத்திடுக !
ஓ கனடா, நாம் நின்னைப் போற்றி அணிவகுத்தோம் !
ஓ கனடா, நாம் நின்னைப் போற்றி அணிவகுத்தோம் !

1880ம் ஆண்டு பிரெஞ்சு மொழியில் கனடா தேசிய கீதம் இயற்றப்பட்டு அதற்கு மெட்டும் அமைக்கப்பட்ட போதிலும் நுறு ஆண்டுகளின் பின்னர் 1980ம் ஆண்டு ஜூலை மாதம் முதலாம் திகதியே ஓ கனடா தேசிய கீதமாகப் பிரகடனப்படுத்தப்பட்டது. பிரெஞ்சு மொழியின் வாசகம் 1908ம் ஆண்டு ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கப்பட்டது. ஆங்கிலத்தில் உள்ள தற்போதைய தேசிய கீதம் அதனை அடிப்படையாகக் கொண்டதாகும். 1980ம் ஆண்டு ஐலை மாதம் முதலாம் திகதி முதல் ஆண்டு தோறும் ஜூலை முதலாம் திகதி கனடா தேசிய தினமாகக் கொண்டாடப்படுகின்றது.

<b>சமய சார்பற்ற நாடு</b>
1991ம் ஆண்டு மேற்கொள்ளப்பட்ட குடிமதிப்பு புள்ளிவிபரப்படி கனடாவின் மொத்தத் தொகையில் ஜந்தில் நான்கு பங்கினர் கிறிஸ்தவர்கள். மொத்த சனத் தொகையில் 47 சதவீதத்தினர் கத்தோலிக்க மதத்தவர்கள். யூத, இஸ்லாமிய, இந்து, சீக்கிய, புத்த மதங்களைச் சேர்ந்தவர்களும் கனடாவில் கணிசமான அளவு இருக்கின்றார்கள். 12.5 சதவீதத்தினர் எந்தச் மதத்தையும் சாராதவர்கள்.

<b>தேசிய பறவை</b>
கனடாவின் தேசிய பறவை ஒரின வாத்தாகும். கனடாவில் மட்டும் இந்த இனம் காணப்படுவதால் அதனை கனடா வாத்து- கனடா கூஸ் (Canada Goose) என்று அழைக்கிறார்கள். இந்தப் பறவையின் முதுகுப்புறமும் பின் பகுதியும் காவி நிறத்தில் இருக்கும். அதன் தலையும் கழுத்தும் கறுப்பு நிறம். தாடை வெள்ளை நிறம். கனடா கூஸ் பறக்க ஆரம்பிக்கும் போது தனது தலையை உலுப்பும். அப்பொழுது அதன் தாடை பளபளப்பது கவர்ச்சிகரமானதகா இருக்கும். வளர்ந்த ஆண் வாத்தின் எடை 8 கிலோ கிராம் வரை இருப்பதுண்டு. இனப் பெருக்கத்தின் போது கனடாவிலும் அலாஸ்காவிலும் காணப்படும் கனடா கூஸ் குளிர் காலத்தின் போது தென்புல ஜக்கிய அமெரிக்காவுக்கும் மெக்ஸிக்கோவுக்கும் இடம் பெயரும். இந்த இடப்பெயர்ச்சியின் போது அவை கூட்டம் கூட்டமாகப் பறந்து செல்கின்றன. அப்போது அவை ஏ அமைப்பில் பறந்து செல்வதும், ஓயாது சத்தம் எழுப்பியபடி செல்வதும் கண்டும் கேட்டும் ரசிக்கக் கூடியதாகும். இடப் பெயர்வின் போது இந்த பறவைகள் பல்லாயிரம் கிலோ மீட்டர் தொலைவு வரை பறந்து செல்கின்றன. தரை அமைப்பு அல்லது நட்சத்திரங்களின் உதவியுடன் பரம்பரை, பரம்பரையாக ஒரே மார்க்கத்தில் அவை இடம் பெயரும் தன்மை கொண்டவை.

<b>நாணயம் (Currency)</b>
கனடாவின் நாணயம் கனடா டாலர். ஒரு கனடா டாலர் 100 சென்ட்களாகப் (cents) பிரிக்கப்படுகின்றது. ஒரு டாலர் உலோக நாணயம் லூணி (loonie) என்றும் இரண்டு டாலர் உலோக நாணயம் ரூணி (Twonie) என்றும் அழைக்கப்படும் வழக்கம் பரவலாக இருக்கின்றது.

<b>ஒரு கொடியின் கீழ்...</b>
கனடா ஒரு சுதந்திரமான, சமஷ்டி அமைப்பு கொண்ட ஐனநாயக அரசாகும். இங்கிலாந்து மகாராணி இரண்டாவது எலிஸபெத் பெயரளவில் அதன் தலைவியாக இருக்கின்றார். 1867ம் ஆண்டுக்கு முன் கியூபெக்கும் ஒண்டாரியோவும் ஜக்கிய கனடா என்ற பெயரில் இணைந்திருந்தன. 1867ம் ஜூலை மாதம் முதலாம் திகதி ஜக்கிய கனடாவுடன் நோவா ஸ்கோஷியாவும் நியூ பிரன்ஸ்விக்கும் சேர்ந்து கனடிய நேசகூட்டமைப்பை (Confederation of Canada) உருவாக்கின. இந்த கூட்டமைப்பு டொமினியன் கனடா என்று அழைக்கப்பட்டது.
ஒண்டாரியோவும் கியூபேக்கும் கூட்டமைப்பு உருவான போது தற்போயை விஸ்தீரணத்தைக் கொண்டிருக்கவில்லை. அவற்றின் கணிசமான பகுதிகள் பின்னர் சேர்த்துக் கொள்ளப்பட்டவையாகும். 1867 ம் ஆண்டு ஜூலை மாதம் முதலாம் திகதி உதயமான கனடா கூட்டமைப்பில் இன்று தென் ஒண்டாரியோ, தென் கியூபேக் என்று அழைக்கப்படும் குடியேற்ற பகுதிகளும் நியூ பிரன்ஸ்விக், நோவா ஸ்கோஷியா ஆகிய குடியேற்ற மண்டலங்களும் அடங்கியிருந்தன. கனடா கூட்டமைப்பு பிரிட்டிஷ் அரசு மற்றும் மேலே கூறிய நான்கு வடஅமெரிக்க குடியேற்ற பிரதேசங்களின் இணக்கத்துடன் அமைக்கப்பட்ட ஒன்றாகும். எனினும் கனடிய கூட்டமைப்பு ஏற்படுத்தப்பட வேண்டிய அவசியத்தை பிரிட்டிஷ் அரசும் வடஅமெரிக்க குடியேற்ற பிரதேசங்களும் வெவ்வேறு நோக்கில் பார்த்தன. வடஅமெரிக்க பிரிட்டிஷ் குடியேற்ற பிரதேசங்களை ஒன்றிணைத்து பலமான நாடொன்றை உருவாக்கினால் அது
(1) பொருளாதாரத்திலும் இராணுவ பலத்திலும் அதிவிரைவான வளர்ச்சியைக் கண்டுவரும் ஜக்கிய அமெரிக்காவினால் கபளிகரம் செய்யப்படுவதை தடுத்து நிறுத்தும்,
(2) ரயில் சேவை, கட்டுமானப் பணிகள் போன்ற துறைகளில் பிரிட்டிஷ்காரர்கள் முதலீடு செய்வதை ஊக்குவிக்கும்
(3) வடஅமெரிக்க பிரிட்டிஷ் குடியேற்ற பிரதேசங்களுக்கான பாதுகாப்பு செலவீனத்தைக் குறைக்கச் செய்யும் என்று பிரிட்டிஷ் அரசு எண்ணியது.
ஜக்கிய கனடாவின் தலைவராக இருந்த ஜோன் ஏ.மக்டோனால்ட் போன்றவர்கள் குடியேற்ற பிரதேசங்கள் ஒன்றிணைவதன் மூலம் துரித வளர்ச்சி கண்டு வரும் தொழிற்துறையினால் தயாரிக்கப்படும் பொருட்களுக்கு பாரிய உள்ளூர் சந்தை வாய்ப்பு ஏற்படும் என்றும் ஜக்கிய அமெரிக்காவின் ஆக்கிரமிப்பு ஏற்படும் பட்சத்தில் ஒரு குடையின் கீழ் நிற்கும் குடியேற்ற பிரதேசங்கள் வலுவான எதிர்ப்பினைக் காட்ட முடியும் என்றும் கருதினார்கள்.

அத்லாந்திக் மாகடல் சார்ந்த குடியேற்ற பிரதேசங்கள் கூட்டமைப்பை முதலில் விரும்பவில்லை. மீன் பிடித் தொழிலில் மட்டுமல்லாது பிரிட்டன் மற்றும் கரிபியன் தீவுகளுக்கிடையில் அத்லாந்திக் மாகடல் மார்க்கமாக நடை பெற்ற போக்கு வரத்து, வர்த்தகம் ஆகியவற்றின் மூலம் அவை நல்ல லாபத்தை ஈட்டிவந்தன. எல்லாவற்றிற்கும் மேலாக 1840கள் முதல் கப்பல் கட்டுமானத்துறையினால் அவற்றின் பொருளாதாரம் கணிசமாள அளவு வளர்ச்சியும் கண்டிருந்தது. அந்த காலப் பகுதியில் கப்பல்களைக் கட்டுவதில் அவற்றை விஞ்ச ஜரோப்பாவுக்கு மேற்கே எந்த ஒரு நாடும் இருக்கவில்லை என்றும் சொல்லலாம். அதனால் பிரிட்டிஷ் சாம்ராச்சியத்தில் தொடார்ந்து இருப்பதையே அத்லாந்திக் மாகடல் குடியேற்ற பிரதேசங்கள் விரும்பின. அவற்றின் பாதுகாப்புக்கு பிரிட்டிஷ் அரசே பொறுப்பாக இருந்தது. ஆண்டு தோறும் அதிகரித்துச் சென்ற பாதுகாப்பு செவீனம் பிரிட்டிஷ் அரசுக்கு பெரும் சுமையாக இருந்தது. அதனால் அத்லாந்திக் மாகடல் குடியேற்ற பிரதேசங்களை ஒன்றிணைக்க அது பாடுபட்டது. எவ்வளவுதான் அழுத்தம் கொடுத்த போதிலும் அவை அதற்கு மசியவில்லை. ஆனால் 1866ம் ஆண்டு பெனியன்கள் (Fenians) நியூ பிரன்ஸ்விக்கினுள் ஊடுருவியதும் (அயர்லாந்தின் சுதந்திரத்திற்காகப் பாடுபட்ட அமெரிக்க - ஜரிஸ்காரர்களைக் கொண்ட குழுவொன்றைச் சேர்ந்தவர்களே பெனியன்ஸ் என்று அழைக்கப்பட்டார்கள்.) வடஅமெரிக்காவில் உள்ள பிரிட்டிஷ் குடியேற்ற பிரதேசங்களின் மீது தாக்குதல்களை நடத்துவதன் மூலம் தங்கள் தாய் நாட்டின் சுதந்திரத்தை வென்று எடுக்கலாம் என்று அவர்கள் நம்பினார்கள். அவர்கள் மேற்கொண்ட நடவடிக்கைகளில் ஒன்றுதான் 1866ம் ஆண்டின் நியூ பிரன்ஸ்விக் ஊடுருவல்.) அமெரிக்காவுடனான வர்த்தக ஒப்பந்தம் காலாவதியானதும் அத்லாந்திக் மாகடல் குடியேற்ற பிரதேசங்கள் தங்கள் கொள்கைகளில் மாற்றம் கொள்ள வைத்தன. அவற்றில் இரண்டு பிரதேசங்களான நியூ பிரன்ஸ்விக், நோவா ஸ்கோஷியா ஆகியவற்றின் சட்ட சபைகள் கூட்டமைப்பில் இணைந்து கொள்வதென்ற தீர்மானத்தை இயற்றச் செய்தன.
ஹட்சன் பே கொம்பனிக்குச் சொந்தமான ரூபேர்ட் நிலமும் வடமேற்கு பிரதேசங்களும் 1869ம் ஆண்டு கனடா அரசினால் கொள்முதல் செய்யப்பட்டன. அவற்றின் ஒரு பகுதி 1870ம் ஆண்டு பிரித்தெடுக்கப்பட்டு மணிடோபா மாகாணம் என்று பெயரிடப்பட்டு கனடிய கூட்டமைப்புடன் சேர்த்துக் கொள்ளப்பட்டது. குடியேற்றப் பிரதேசங்களாகவிருந்த பிரிட்டிஷ் கொலம்பியாவும் பிரின்ஸ் எட்வேர்ட் ஜலண்டும் முறையே 1871ம் 1873ம் ஆண்டுகளில் தனித்தனி மாகாணங்களாக கனடாவுடன் இணைக்கப்பட்டன. எஞ்சிய வடமேற்கு பிரதேசங்களில் இருந்து சாஸ்காட்சேவன் என்ற மாகாணமும் அல்பேர்டா என்ற மகாணமும் உருவாக்கப்பட்டு 1905ம் ஆண்டு கனடாவின் கூட்டாச்சியுடன் இணைக்கப்பட்டன. 1949ம் ஆண்டு நியூபெளண்லாந்தும் அதன் நிர்வாகத்தில் இருந்த லப்ரடோரும் கனடிய கூட்டமைப்பின் பிறிதொரு மாகாணமாகச் சேர்ந்து கொண்டன. 1898ம் ஆண்டு வடமேற்கு பிரதேசங்களில் இருந்து யூகோன் பிரதேசம் பிரிக்கப்பட்டது. 1999ம் ஆண்டு வடமேற்கு பிரதேசத்தின் கிழக்குப் பகுதி பிரிக்கப்பட்டு நுனாவுட் பிரதேசம் உருவாக்கப்பட்டது. அதனால் கனடாவில் இன்று 10 மாகாணங்களும் 3 பிரதேசங்களும் இருக்கின்றன. பிரித்தானிய நாடாளுமன்றத்தினால் நிறைவேற்றப்பட்ட சட்டத்தை 1982ம் ஆண்டு ஏப்ரல் மாதம் 17ம் திகதி இரண்டாவது எலிஸபெத் மகாராணி பிரகடனப்படுத்தியதையடுத்து அரசியல் நிர்ணயச் சட்டம் நிறைவேற்றப்படுவது தொடர்பாக கனடா மீது பிரிட்டன் கொண்டிருந்த அற்ப சொற்ப கட்டுப்பாடுகளும் நீக்கப்பட்டுவிட்டன. அரசியல் யாப்பில் மாற்றத்தைக் கொண்டுவரும் பூரண உரிமை தற்போது கனடாவுக்கு உரியதாகும்.

<b>ஜந்து பெரும் பிரிவுகள்</b>
வரலாறு, அரசியல் மற்றும் புவியமைப்பு அடிப்படையில் கனடாவை ஜந்து பெரும் பிரிவுகளாகக் கொள்ளலாம். அத்லாந்திக் கனடா, மத்திய கனடா, மேற்கு கனடா, பிரிட்டிஷ் கொலம்பியா, வடபுலம் என்று நாம் அந்தப் பிரிவுகளை இனம் காணலாம்.

<b>அத்லாந்திக் கனடா (Atlantic Canada)</b>
அத்லாந்திக் கனடாவில் நியூபெளண்லாந்து, நியூ பிரன்ஸ்விக், நோவா ஸ்கோஷியா, பிரின்ஸ் எட்வேட் ஜலண்ட் ஆகிய நான்கு மாகாணங்கள் அடங்குகின்றன. இந்த மாகாணங்கள் கனடாவின் கிழக்கு கரையோரத்தில், அத்லாந்திக் மாகடலை அண்டியிருக்கின்றன. நியூபெளண்லாந்து அன்ட் லப்ரடோ ர் தவிர்ந்த ஏனைய மாகாணங்களை கடல் சார்ந்த மாகாணங்கள்
(Maritime Provinces) என்றும் அழைக்கப்படுவது மரபு. பிரதேச வரலாறு, புவியமைப்பு ஆகியவை காரணமாக இந்த நான்கு மாகாணங்களும் அத்லாந்திக் மாகாணங்கள் என்று அழைக்கப்படுகின்றன. கடல் வழியாக வந்தவர்கள் அத்தலாந்திக் கனடாவில் தான் முதன் முதலாகக் குடியேறினார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. அதுமட்டுமல்ல பிரிட்டிஷ், பிரெஞ்சு குடியேற்றவாசிகள் இந்தப் பிரதேசத்திற்கு வந்தது முதல் அத்லாந்திக் மாகடல் அவர்களது வாழ்க்கையுடன் பின்னிப்பிணைந்துள்ளது. தங்களது ஐணவனோபாயத்திற்கு அவர்கள் அத்லாந்திக் மாகடலையே நம்பியிருந்தார்கள். இன்றும் கூட அவர்கள் அதனை நம்பியிருக்கிறார்கள். முன்னர் போன்று இப்பொழுதும் கனடாவுக்கும் வெளிநாடுகளுக்கும் இடையிலான கடல் தொடர்பு அத்லாந்திக் கனடா மூலமாகவே அதிக அளவில் இடம் பெறுகின்றது. மொத்தத்தில் அத்லாந்திக் கனடாவின் விவகாரங்களில் வடஅத்லாந்திக் மாகடலின் ஆதிக்கம் கடந்த 400 ஆண்டுகளுக்கும் மேலாக இருந்து வருகின்றது எனலாம். அத்லாந்திக் கனடாவின் விஸ்தீரணம் மொத்த கனடாவின் 5.4 சதவீதமாகும். இந்த பிரதேசத்தின் சனத்தொகை 2.3 மில்லியன்.

<b>மத்திய கனடா (Central Canada)</b>

மத்திய கனடாவில் ஒண்டாரியோ, கியூபேக் ஆகிய மாகாணங்கள் அடங்குகின்றன. இந்த இரு மாகாணங்களும் ஏனைய மாகாணங்களிலும் பார்க்க பொருளாதார ரீதியிலும் அரசியல் ரீதியிலும் செல்வாக்கு மிக்கவை. கனடாவின் சனத்தொகை சுமார் 31 மில்லியனில் 62 சதவீதத்தினர் இந்த இரு மாகாணங்களிலும் வசிப்பது அவற்றின் செல்வாக்குக்கான முக்கிய காரணமாகும். மத்திய கனடாவின் விஸ்தீரணம் மொத்த கனடாவில் 26.3 சதவீதம். சனத்தொகை சுமார் 18 மில்லியன். தென் ஒண்டாரியோவும் தென் கியூபேக்கும் கனடாவின் சக்தி வாய்ந்த பொருளாதார மையமாகத் திகழ்கின்றன. இவை ஜக்கிய அமெரிக்காவின் தொழில் பேட்டைகளுக்குச் சமீபமாக இருப்பதால் அமெரிக்காவுடனும் நெருங்கிய தொடர்பைக் கொண்டுள்ளன.

<b>மேற்கு கனடா (Western Canada)</b>
மேற்கு கனடா பரந்த புல்வெளிப் பிரதேசம் (The Prairies) என்றும் அழைக்கப்படுகின்றது. மணிடோ பா, சாஸ்காட்சேவன், அல்பேர்டா ஆகிய மாகாணங்கள் மேற்கு கனடாவில் அடங்குகின்றன. அத்லாந்திக் கனடா, மத்திய கனடா ஆகியவற்றுடன் ஒப்பிடும்போது மேற்கு கனடாவின் குடியேற்றம் காலத்தால் பிந்தியது. 1885ம் ஆண்டு கனடிய பசுபிக் புகையிரத பாதை பூரணப்படுத்தப்பட்டதை அடுத்து ஆயிரக்கணக்கானவர்கள் அங்கு சென்று குடியேறினார்கள். செழிப்பான மண்வளம் மக்களைக் கவர்ந்திழுத்தது. இன்று சுமார் 5 மில்லியன் மக்கள் இந்தப் பிரதேசத்தில் வசிக்கின்றார்கள். விவசாயமே இந்தப் பிரதேசத்தின் வளமைக்கு முக்கிய காரணமாக இன்றும் இருக்கின்றது. அல்பேர்டாவில் கண்டு பிடிக்கப்பட்ட எண்ணெய் மற்றும் இயற்கை வாயு வளம் அந்த மாகாணத்தின் பொருளாதாரத்தைக் கட்டி எழுப்பியுள்ளது. மணிடோ பாவிலும் சாஸ்காட்சேவனிலும் மிகக் குறைவான சக்தி மூல வளங்கள் இருப்பதால் அவை விவசாயத்தையே பெரும்பாலும் நம்பியிருக்கின்றன.

<b>பிரிட்டிஷ் கொலம்பியா (British Columbia)</b>

ரோக்கி மலைத் தொடர் பிரிட்டிஷ் கொலம்பியாவை நாட்டின் ஏனைய பகுதிகளில் இருந்து பிரிக்கின்றது. இணை வரிசையான மலையடுக்குத் தொடர் காரணமாக போக்கு வரத்துத் தடையும் கிழக்கு கனடாவின் சேய்மையும் பிரிட்டிஷ் கொலம்பியாவை கடந்த காலத்தில் தனிமைப்படுத்தியிருந்தன. நவீன போக்குவரத்து வசதிகள் காரணமாக குறித்த இயற்கை தடைகள் நீக்கப்பட்டுவிட்ட போதிலும் பிரிட்டிஷ் கொலம்பியா வாசிகள் தெற்கேயுள்ள ஜக்கிய அமெரிக்காவுடனும் பசுபிக் மாகடலுக்கு அப்பால் உள்ள ஐப்பான், சீனா போன்ற நாடுகளுடனும் தங்கள் வர்த்த உறவுகளை கூடுதலாக வைத்துக் கொண்டுள்ளார்கள். பிரிட்டிஷ் கொலம்பியாவின் விஸ்தீரணம் கனடாவின் விஸ்தீரணத்தில் 9.5 சதவீதம். சனத் தொகை 3.7 மில்லியன். இவர்களில் பெரும்பான்மையானவர்கள் பசுபிக் மாகடற்கரையில் வசிக்கிறார்கள்.

<b>வடபுல பிரதேசம் (The Territorial North)</b>
யூகோன், நுனாவுட், நோர்த் வெஸ்டேர்ன் டெரிட்டரீஸ் ஆகிய பிரதேசங்கள் அடங்கிய பகுதி கனடாவின் வடபுலம் என்று அழைக்கப்படுகின்றது. கனடாவின் நிலப்பரப்பில் சுமார் 40 சதவீதத்தை கனடா வடபுலம் தன்னகத்தே கொண்டுள்ளது. அதன் விஸ்தீரணம் 3.4 சதுர கிலோ மீட்டர்கள். இவ்வளவு பெரிய பிரதேசமாக இருந்த போதிலும் வடபுலத்தில் ஒரு லட்சத்திற்கும் குறைவான மக்களே வசிக்கின்றார்கள். அவர்களில் மூன்றில் ஒரு பகுதியினர் வைட்ஹோஸிலும் ஜெலோநைவிலும் வசிக்கின்றார்கள். ஏனையோர் சிறு நகரங்களிலும் கிராமங்களிலும் வசிக்கின்றார்கள். கனடா வடபுலத்தில் வசிக்கும் மக்களில் அரைவாசிப் பங்கினர் பூர்வ குடிகள். இந்த பிரதேசத்தில் நிறைய மூலவளங்கள் இருக்கின்றன. உலக சந்தைகளில் இருந்து நெடுந்தொலைவில் இருப்பதும் குளிரான சுற்றுச் சூழலும் அதன் அபிவிருத்தியைப் பாதிக்கவே செய்த போதிலும் அதன் மூலவளத்தை பிரயோசனப்படுத்தும் நடவடிக்கைகள் சமீப காலமாக அதிகரித்திருக்கின்றன.
முற்றும்.

நன்றி: கனடா முரசு
<b> .. .. !!</b>
Reply


Messages In This Thread
கனடா - by Rasikai - 10-20-2005, 08:54 PM
[No subject] - by Rasikai - 10-20-2005, 08:59 PM
[No subject] - by Rasikai - 10-20-2005, 09:05 PM
[No subject] - by sathiri - 10-20-2005, 10:32 PM
[No subject] - by Mathan - 10-21-2005, 07:46 AM
[No subject] - by sabi - 10-21-2005, 03:29 PM
[No subject] - by vasisutha - 10-21-2005, 03:40 PM
[No subject] - by Rasikai - 10-21-2005, 09:37 PM
[No subject] - by Saniyan - 10-21-2005, 11:54 PM
[No subject] - by KATPUKKARASAN - 10-22-2005, 02:21 AM
[No subject] - by Rasikai - 10-22-2005, 09:00 PM
[No subject] - by Vishnu - 10-22-2005, 09:04 PM
[No subject] - by adithadi - 10-22-2005, 09:22 PM
[No subject] - by kurukaalapoovan - 10-22-2005, 09:30 PM
[No subject] - by Rasikai - 10-22-2005, 09:55 PM
[No subject] - by Rasikai - 10-22-2005, 09:56 PM
[No subject] - by Rasikai - 10-22-2005, 10:51 PM
[No subject] - by Rasikai - 03-26-2006, 03:36 AM
[No subject] - by Sabesh - 03-26-2006, 04:43 AM
[No subject] - by Rasikai - 03-27-2006, 05:53 PM
[No subject] - by Aravinthan - 03-28-2006, 12:35 AM
[No subject] - by Rasikai - 03-28-2006, 09:16 PM
[No subject] - by TRAITOR - 03-28-2006, 09:48 PM
[No subject] - by Rasikai - 03-30-2006, 08:13 PM
[No subject] - by Rasikai - 03-31-2006, 04:57 PM
[No subject] - by Rasikai - 03-31-2006, 07:42 PM
[No subject] - by sinnakuddy - 04-08-2006, 05:47 PM
[No subject] - by மின்னல் - 04-08-2006, 06:39 PM

Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)