10-20-2005, 07:35 PM
<b>விமானம் விழுந்த இடத்தை போர் நிறுத்தக் கண்காணிப்பாளர்கள் பார்வையிட்டனர்</b>
<img src='http://www.bbc.co.uk/worldservice/images/2005/10/20051019150710uav203a.jpg' border='0' alt='user posted image'>
<i>ஆளில்லா விமானம்</i>
வவுனியா விமானப்படைத்தளத்தின் கட்டுப்பாட்டில் பயிற்சியில் ஈடுபட்டிருந்தபோது காணாமல் போனதாக இராணுவத்தினரால் தெரிவிக்கப்பட்ட ஆளில்லாத விமானம் விழுந்ததாகக் கூறப்படும் விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டில் உள்ள இடத்தை இன்று போர்நிறுத்த சர்வதேச கண்காணிப்பு குழுவினர் சென்று பார்வையிட்டுள்ளனர்.
இந்தத் தகவலை கொழும்பில் உள்ள அக்குழுவின் பேச்சாளர் தெரிவித்தார்.
இதனை விடுதலைப் புலிகளின் வவுனியா மாவட்ட அரசியல்துறை பொறுப்பாளர் ஞானம் இன்று மாலை உறுதிப்படுத்தினார்.
விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டுப் பகுதியாகிய கனகராயன்குளம் பிரதேசத்தில் உள்ள கரப்புக்குத்தி, விஞ்ஞானகுளம், கற்கிடங்கு ஆகிய கிராமங்களுக்கிடையில் உள்ள காட்டுப்பகுதியிலேயே இந்த ஆளில்லாத வேவு விமானம் விழுந்ததாகவும், அப்பகுதி கண்ணிவெடிகள் மிகுந்த பிரதேசம் எனவும் ஞானம் தெரிவித்தார்.
விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டில் உள்ள பகுதிகளை ஆளில்லாத வேவு விமானத்தின் மூலம் படைத்தரப்பினர் வேவு பார்த்துள்ளமை இந்த விமானம் விழுந்ததிலிருந்து உறுதிப்படுத்தப்பட்டிருப்பதாக போர்நிறுத்த சர்வதேச கண்காணிப்பு குழுவின் கவனத்திற்குத் இன்று தாங்கள் கொண்டு வந்துள்ளதாவும், விடுதலைப் புலிகளின் வவுனியா மாவட்ட அரசியல்துறை பொறுப்பாளர் ஞானம் கூறினார்.
இந்த விமானத்தைத் தேடி நேற்று மாலை இராணுவ உலங்கு வானூர்தி ஒன்றும் தமது அனுமதியின்றி கனகராயன்களம் பகுதியில் சுற்றிப் பறந்ததாகவும், இந்த இரண்டு செயற்பாடுகளின் மூலமாகப் படையினர் போர்நிறுத்த ஒப்பந்தத்தை மீறியிருப்பதாக போர்நிறுத்த கண்காணிப்பு குழுவினரிடம் தாங்கள் முறையிட்டிருப்பதாகவும் ஞானம் தெரிவித்தார்.
இதுகுறித்து கொழும்பில் உள்ள போர்நிறுத்த சர்வதேச கண்காணிப்பு குழுவின் பேச்சாளரிடம் கேட்டபோது, ஆளில்லாத விமானம் விடுதலைப் புலிகளின் பிரதேசத்தின் மீது பறந்ததன் மூலம் படையினர் போர்நிறுத்த ஒப்பந்தத்தை மீறியிருப்பதாக முன்பும் விடுதலைப் புலிகள் தமது ஆட்சேபணையைத் தெரிவித்துள்ளதாகக் கூறினார்.
எனினும் விடுதலைப் புலிகளின் பிரதேசத்தில் வீழ்ந்த ஆளில்லாத விமானத்திற்கு என்ன நடக்கும் என்பது பற்றி தமக்கு எதுவும் தெரியாது என்றும் அவர் மேலும் கூறினார்.
இதற்கிடையே தமிழர் விடுதலைக் கூட்டணியின் வவுனியா மாவட்ட முக்கியஸ்தரும், வவுனியா மாவட்ட வெகுஜன அமைப்புக்களின் ஒன்றியத் தலைவருமாகிய சதாசிவம் குலதேவராஜாவின் வீட்டிற்கு அடையாளம் தெரியாதவர்கள் குண்டுத் தாக்குதல் நடத்தியுள்ளதாக வவுனியா பொலிசார் தெரிவித்தனர். அவருடைய வீடு யாழ் வீதியில் அமைந்துள்ளது.
இந்தச் சம்பவம் இன்றிரவு 8 மணியளவில் நடைபெற்றதாகவும், வீட்டிற்குச் சேதம் இல்லையென்றும் சம்பவ இடத்திற்கு விரைந்து விசாரணைகளை மேற்கொண்டுள்ள பொலிசார் தெரிவித்தனர்.
- பீபீசி தமிழ்