Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
சிதம்பரத்தில் ஒரு அப்பா சாமி.
#1
சிதம்பரத்தில் ஒரு அப்பா சாமி.

தமிழ் திரைப்பட உலகில் மிகவும் சிறந்த படைப்புக்களை கொடுத்துக் கொண்டிருக்கும் தங்கர் பச்சானின் இயக்கத்தில் உருவாகியுள்ள சிதம்பரத்தில் ஒரு அப்பா சாமி திரைப்படம்,ஒரு சிறந்த மற்ரும் பார்வையாளரை சிந்திக்கத்தூண்டும் அருமையான திரைபாடமாகவே நான் பார்க்கின்றேன்.

மிகவும் எளிமையான முறையில் எல்லோரையும் சென்றடயக்கூடிய ஒரு அழகிய சிற்பமாக செதுக்கியிருக்கின்றார் தங்கர்பச்சான். இளயராசாவின் இனிய இசையும் படத்திற்கு மேலும் மெருகேற்றி இருக்கின்றது. ஒளிப்பதுவு மிகவும் அற்புதமாக செய்யப்பட்டிருக்கின்றது. உதாரணத்திற்கு ஸோரிய ஒளிக்கீற்று இருண்ட வீDDஇற்குள் விZஉவது போன்ற காட்சி படம் தொடங்கி சில காட்சிகள் நகர்ந்த பின் வரும். அந்த சிறிய விடயமே படத்தின் முடிவு எவ்வாறு அமையும் என்பதை காட்டி நின்றது.

தங்கர்பச்சான் இளங்கோவாக இத்திரைப்படத்தில் வாழ்ந்து இருக்கின்றார். தேன்மொழியாகத்தோன்றிய நவ்யாவும் மிகவும் சிறப்பாக நடித்திருக்கின்றார். பிரமீடநடராசன் மற்றும் சுந்தரரசன் போன்றவர்களின் நடிப்புக்களும் பாராட்டப் பட வேண்டியவை. குழந்தைகலாக நடித்தவர்கலும் சிறப்பாக நடித்துள்ளார்கள். Mஒத்தத்தில் ஒரு சிற்பத்தை செதுக்கிய தங்கர் பச்சானை பாராட்டுவதோடு அவரின் மேலும் பல படைப்புக்களை எதிர்பார்க்கலாம்.
[size=18]<b> </b>
[size=18]<b> </b>

IRUVIZHI
Reply


Messages In This Thread
சிதம்பரத்தில் ஒரு அப்பா சாமி. - by iruvizhi - 10-20-2005, 11:39 AM

Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)