Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
அப்ப உள்வீட்டுகொலையள் ஆரம்பமாகப் போகுதுங்கோ....
#1
மகிந்த ராஜபக்சவை ஈ.பி.டி.பி தேசவிரோதக் கும்பலின் தலைவர் டக்ளஸ் தேவானந்த, ஆதரிப்பது தொடர்பில் ஈ.பி.டி.பி. கும்பலுக்குள் உள்முரண்பாடுகள் தோற்றம் பெற்றுள்ளதாக செய்திகள் கசிந்துள்ளன. டக்ளஸ் தேவானந்த இந்த விவகாரம் தொடர்பாக தன்னிச்சையாக முடிவுகளை எடுப்பதாகவும் அக்கும்பலுக்குள் விசனங்கள் எழுந்துள்ளன.

இந்த நிலையில் மகிந்தவின் ஜே..வி.பி.யினருடனான ஒப்பந்தத்தின் போது தன்னிடம் கலந்தாலோசிக்காது தன்னிடமிருந்து பல சலுகைகள் பெற்ற டக்ளஸ் தேவானந்த, மேற்படி ஒப்பந்தத்தில் முன்னின்று கைதட்டி வரவேற்றமை அரசு தலைவர் சந்திரிகாவுக்கு பலத்த ஏமாற்றத்தை அளித்தள்ளதாகவும், அதனைத் தொடர்ந்து டக்ளஸ் தேவானந்தா அரசு தலைவர் சந்திரிகாவை சந்திப்பதற்கு சந்திரிகாவிடம் அனுமதி கோரியிருந்த போதிலும் சந்திரிகா டக்ளஸ் தேவானந்தாவை சந்திக்க மறுத்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

இதனையடுத்து ஈ.பி.டி.பி கும்பலின் ஆலோசகராக இருக்கும் ஒருவரை அழைத்துப் பேசிய சந்திரிகா மேற்குறித்த தனது விசனத்தை வெளியிட்டுள்ளார். சந்திகாவின் தீவிர விசுவாசியான அவரும் உடனடியாகவே டக்கிளசை சந்தித்து இது குறித்தும், மற்றும் ஒற்;றை ஆட்சிக்குள் தீர்வு என மகிந்த கூறுகின்றமை ஈ.பி.டி.பி.யின் கொள்கைகளுக்கே எதிரானது எனவும் மாநிலத்தில் சுயாட்சி, மத்தியிலே கூட்டாட்சி என்ற ஈ.பி.டி.பியின் கொள்கைகளையும் சுட்டிக்காட்டியுள்ளார்.

ஆனால் அதனை நிராகரித்த டக்ளஸ் இன்னும் 20 நாட்கள் அரசு தலைவர் ஆக இருக்கப் போகின்றவர் பின்னால் சென்று இனி எந்தப் பயனும் இல்லை எனவும், மகிந்தவை விட்டால் எம்மை ஆதரிப்பதற்கு யார் உள்ளனர் எனவும், எனக்கு வேறு வழி என்ன இருக்கின்றது என கேள்வி கேட்டுள்ளார்.

இதனைத் தொடர்ந்து நேற்று பண்டாரநாயக்க மகாநாட்டு மண்டபத்தில் இடம்பெற்ற 'மகிந்தவின் சிந்தனைகள்" தேர்தல் கொள்கைப் பிரகடன வெளியீட்டிற்கு ஈ.பி.டி.பி. கும்பலின் சார்பில் ஐவருக்கு அழைப்பிதழ்கள் வழங்கப்பட்டிருந்தன. டக்ளஸ் தேவானந்த, தவராஜா, மகேஸ்வரி வேலாயுதம், இராசமாணிக்கம், மற்றும் விக்னேஸ்வரன் அகியோருக்கே இது கிடைக்கப் பெற்றுள்ளதாக தெரியவருகின்றது.

இதன் போது மீண்டும் மேற்படி அந்த சந்திரிகாவின் விசுவாசி டக்ளஸிடம் அரசு தலைவருக்கு இது வருப்பமில்லை எனத் தெரிவித்திருக்கின்றார். ஆனால் டக்ளஸோ அதைப ;பொருட்படுத்த வில்லை எனவும், இதனைத் தொடர்ந்தே கட்சிக்குள் டக்ளஸ் தனது சுயநலத்துக்காக செயற்படுவதாக கூறி முரண்பாடுகள் தோற்றம் பெற்றிருப்பதாகவும் அறியமுடிகின்றது.
Reply


Messages In This Thread
அப்ப உள்வீட்டுகொலையள் ஆரம்பமாகப் போகுதுங்கோ.... - by வன்னியன் - 10-20-2005, 04:34 AM
[No subject] - by Birundan - 10-20-2005, 10:20 AM
[No subject] - by கறுணா - 10-20-2005, 08:51 PM

Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)