10-19-2005, 07:51 PM
வெள்ளிக்கு விண்கலம்
<img src='http://www.bbc.co.uk/worldservice/images/2005/10/20051018112825venusnasa_203.jpg' border='0' alt='user posted image'>
<b>வெள்ளியின் சிவந்த பரப்பு</b>
பூமி கிரகத்திற்கு மிக நெருங்கிய கிரகமான வெள்ளி கிரகத்திற்கு ஒரு விண்கலம் ஒன்றினை அனுப்ப ஐரோப்பிய விண்வெளி நிறுவனம் தயாராகி வருகிறது.
எதிர்வரும் அக்டோபர் 26ம் தேதி கஸாகஸ்தானில் உள்ள பைகானார் விண்வெளி தளத்தில் இருந்து ரஷிய ராக்கெட் ஒன்றின் மூலமாக வீனஸ் எக்ஸ்பிரஸ் என்கிற இந்த விண்கலம் விண்ணில் ஏவப்பட இருக்கிறது.
அதன் பின்னர் அடுத்த ஆண்டு வெள்ளி கிரகத்தின் சுற்றுப்பாதையில் இந்த ஆய்வு விண்கலம் செல்லும்.
அதி உயர் உபகரணங்களைக் கொண்டு வெள்ளி கிரகத்தின் பல்வேறு தன்மைகளை இந்த விண்கலம் ஆய்வு செய்யும்.
வெள்ளியின் உஷ்ணம் அதிகரிக்க காரணமான கீரின் ஹவுஸ் வாயுக்கள் எந்த மாதிரியான தாக்கத்தை ஏற்படுத்தின என்பதை ஆராய்ந்தால், பூமியில் ஏற்படும் மாறுதல்களைக் கண்காணிக்க உதவியாய் இருக்கும் என விஞ்ஞானிகள் நம்புகின்றனர்.
<img src='http://www.bbc.co.uk/worldservice/images/2005/10/20051018112812venus203.jpg' border='0' alt='user posted image'>
<b>விண்கலம்</b>
வெளிப்புறமாக பார்க்கையில் வெள்ளியும், பூமியும் ஒரே போலத் தோற்றமளிக்கும், ஏறக்குறைய ஒரே அளவு, எடை மேலும் இவை உருவான விதமும் ஒரே மாதிரிதான் என்று கூறப்படுகிறது.
ஆனால், வெள்ளி கிரகத்தில் கடும் வெப்பம் நிலவுகிறது. அங்குள்ள வெப்ப நிலை 460 டிகிரி செண்டிகிரேட்.
இது தவிர அதனுடைய அடர்த்தியான வளி மண்டலத்தில், கடலின் அடியில் ஒரு கிலோமீட்டர் ஆழத்தில் இருக்கும் அழுத்தம் போல, கடும் அழுத்தம்.
இதற்கு முன்னதாக அமெரிக்காவின் மெகல்லன் விண்கலம் வெள்ளி கிரகத்தின் அமைப்பினை விரிவாக ஆராய்ந்து வரைபடம் தயாரித்தது.
வெள்ளி கிரகத்தில் எரிமலைக் குழம்புகள் ஓடுவதாகவும் சென்ற முறை செய்த ஆய்வில் தெரிய வந்துள்ளது.
ஐரோப்பிய விண்கலமானது வெள்ளி கிரகத்தில் இருக்கும் எரிமலைகளைப் பற்றி விரிவாக ஆராய இருக்கிறது.
பிபிசி தமிழ்

<span style='font-size:20pt;line-height:100%'>Success is not the key to happiness. Happiness is the key to success. If you love what you are doing, you will be successful.</span>