Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
வேவு விமானம் புலிகள் பகுதியில் தற்கொலை
#10
<b>இலங்கை அரசின் ஆளில்லா வேவு விமானம் விபத்துக்குள்ளானது</b>
<img src='http://www.bbc.co.uk/worldservice/images/2005/10/20051019150710uav203a.jpg' border='0' alt='user posted image'>
<i>வேவு விமானம்</i>

வவுனியா விமானப்படைத்தளத்தின் கட்டுப்பாட்டில் பயிற்சியில் ஈடுபட்டிருந்த ஆளில்லாத வேவு விமானம் ஒன்று இன்று பிற்பகல் 1.30 மணியளவில் காணாமல் போயுள்ளதாக கொழும்பில் உள்ள இராணுவ ஊடகத்துறை அலுவலகத்தைச் சேர்ந்த அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

காணாமல் போயுள்ள இந்த வேவு விமானத்திற்கு என்ன நடந்தது என்பதைக் கண்டறிவதற்கான நடவடிக்கையில் விமானப்படையினர் ஈடுபட்டுள்ளதாகவும் அந்த அதிகாரி கூறினார்.

இதேவேளை, விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டில் உள்ள கனகராயன்குளம் - கரப்புக்குத்தி விஞ்ஞானகுளம் கிராமப் பகுதியில் இன்று பிற்பகல் இந்த விமானம் விழுந்து நொறுங்கியுள்ளதாக கிராமவாசிகள் தெரிவித்திருப்பதாக வன்னித்தகவல்கள் தெரிவிக்கின்றன; இதனை விடுதலைப் புலிகள் வட்டாரங்கள் உறுதி செய்துள்ளன.

ரிமோட் கண்ரோலினால் இயக்கப்படும் இந்த சிறிய ரக விமானம் நவீன தொழில்நுட்பம் மிக்க கமராக்கள் பொருத்தப்பட்டது.

<img src='http://www.bbc.co.uk/worldservice/images/2005/10/20051019150647uav203.jpg' border='0' alt='user posted image'>
<i>காட்சிக்கு வைக்கப்பட்ட வேவு விமானம்</i>
முப்பதாயிரம் அடி உயரத்தில் பறந்து தெளிவாக படங்களைப் பிடித்து தளத்திற்கு அனுப்பக்கூடிய வல்லமை கொண்டது.

இந்த விமானத்தின் மூலம் போர்நிறுத்த ஒப்பந்தம் அமுலுக்கு வந்தபின்னரும், இராணுவத்தினர் தமது பிரதேசங்களை நோட்டம் விட்டு வருவதாக விடுதலைப்புலிகள் போர்நிறுத்த சர்வதேச கண்காணிப்பு குழுவினருக்குப் புகார் செய்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இதற்கிடையில் செட்டிகுளம் கந்தன்குளம் பகுதியில் இன்று மாலை 4.45 மணியளவில் அடையாளம் தெரியாதவர்களினால், அப்பிரதேசத்திற்குப் பொறுப்பான கிராம சேவை அதிகாரி ஒருவர் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளதாக செட்டிகுளம் பொலிசார் தெரிவித்தனர்.
இறந்தவர் 53 வயதுடைய பெரேரா வீரசிங்கம் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.

சம்பவ இடத்திற்கு விரைந்த செட்டிகுளம் பொலிசார் விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.

இதேவேளை, யாழ்ப்பாணத்தில் இரண்டு பாடசாலை அதிபர்கள் கொல்லப்பட்டதைக் கண்டித்து கடந்த ஒரு வாரகாலமா வகுப்பு புறக்கணிப்பில் ஈடுபட்டிருந்த யாழ் குடாநாட்டு மாணவர்களின் புறக்கணிப்புப் பேராட்டம் முடிவுக்கு வந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இதனையடுத்து யாழ் பல்கலைக்கழகம், பாடசாலைகள் உட்பட சகல கல்வி நிறுவனங்களும் இன்று முதல் செயற்படத் தொடங்கியுள்ளதாக கல்வித்திணைக்கள அதிகாரிகள் தெரிவித்தனர்.
-BBC tamil
Reply


Messages In This Thread
[No subject] - by vasanthan - 10-19-2005, 10:40 AM
[No subject] - by Danklas - 10-19-2005, 11:24 AM
[No subject] - by MUGATHTHAR - 10-19-2005, 12:33 PM
[No subject] - by narathar - 10-19-2005, 12:57 PM
[No subject] - by Danklas - 10-19-2005, 02:31 PM
[No subject] - by vasisutha - 10-19-2005, 04:11 PM
[No subject] - by AJeevan - 10-19-2005, 05:53 PM
[No subject] - by kurukaalapoovan - 10-19-2005, 06:25 PM
[No subject] - by வியாசன் - 10-19-2005, 08:16 PM
[No subject] - by tamilini - 10-19-2005, 08:22 PM
[No subject] - by kurukaalapoovan - 10-19-2005, 08:27 PM
[No subject] - by narathar - 10-19-2005, 10:22 PM
[No subject] - by RaMa - 10-20-2005, 05:00 AM
[No subject] - by AJeevan - 10-20-2005, 07:35 PM

Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)