Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
கோயிஞ்சாமி சுயசரிதை எழுதுகிறார்...
#1
பால்கணக்கு, பலசரக்குக் கணக்கு, பசங்களுக்கு பல்லிமிட்டாய் வாங்கிய கணக்கு எழுதியே அலுத்துப் போன கோயிஞ்சாமி (வயசு-ஏழு கழுதை வயசு. ஒரு கழுதைக்கு ஏழரை வயசுன்னு வைச்சுக்கோங்களேன்.) தன் சுயசரிதையை எழுத ஆசைப்பட்டார்.

"எவன் எவனோ வாழ்க்கையில ஒண்ணுமே சாதிக்காம சுயசரிதையை மட்டும் எழுதி பவுசா வுட்டுருதான். நாமளும் இத்தன வருஷம் இந்தச் சனநாயக நாட்டுல இன்கம்டாக்ஸ் கட்டாம வாழ்ந்துட்டோம்! கழுத, நம்மளைப் பத்தி எவனும், என்னிக்கும் பிட் நியூஸ்கூட எதுலயும் எழுதப் போறதில்ல. நம்மளா எழுதிக்கிட்டாத்தான் உண்டு!' என திங்க் பண்ணியதே கோயிஞ்சாமியின் இந்த மிரட்டலான முடிவுக்குக் காரணம்! தன் சொந்த, வியாபார வேலைகளையெல்லாம் ஓரமாய் உக்கார வைத்துவிட்டு, கொடைக்கானல் கெஸ்ட்-ஹவுஸ்க்கு கிளம்பி விட்டார் கோயிஞ்சாமி சுயசரிதை எழுத! உடன் உதவியாளர் வேறு!

நான்கு நாட்கள் ஓடியது. புல்வெளி, பூங்கா, டீக்கடை, மலை உச்சி, மரநிழல் எனப் பல இடங்களில் உட்கார்ந்து ஒரு கவிஞர் ரேஞ்சில் யோசித்தார் கோயிஞ்சாமி.

ஒரு மொட்டைப் பாறையில் உட்கார்ந்திருக்கும் கோயிஞ்சாமி தன் உதவியாளரிடம்

கோயிஞ்சாமி: "எப்பா நான் சொல்லச் சொல்ல கரீக்டா எழுதணும். ச்பெல்லிங் மிச்டேக்லாம் வர்க்கூடாது. ஆங்...எழுதிக்கோ!' (தொண்டையைச் செருமியபடி) "என் இனிய தமிழ் மக்களே! இந்தப் பாசத்திற்குரிய கோயிஞ்சாமி இந்த முறை மண்ணின் மைந்தனாக உங்கள் முன் ஒய்யாரமாக நிற்கிறேன். என் கதை ஒரு கடலைக்காட்டு காவியம். பனங்காட்டு ஓவியம்!'

உதவி:அண்ணே, சூப்பர்னே பாரதிராஜா ரேஞ்சுல பேசறீங்கண்ணே!

கோயிஞ்சாமி:ஏய். ..குறுக்க, மறுக்க பேசாத...அப்புறம் எனக்கு சொல்ல வராது. எழுதிக்கோ...

"இது ஒரு கதை. செக்காரப்பட்டியை ஒற்றைக் கோவணத்தோடு சுற்றிச் சுற்றி வந்த அன்றைய கோயிஞ்சாமி என்ற சிறுவன், எப்படி இன்று சென்னையிலும் அதே கோவணத்தை மறக்காமல் மெயின்டெய்ன் பண்ணுகிறான் என்பதை விளங்க வைக்கும் கதை! இது கதையல்ல...நேசம்!

உதவி:ஃபுல்லா அரிக்குதுண்ணே! மேட்டருக்கு வாங்க!

கோயிஞ்சாமி:நான் பள்ளியில் படித்தபோது...

உதவி:லவ் பண்ணுனீங்களா?!

கோயிஞ்சாமி:டேய் ...டெஞ்சன் ஆக்காத! நான் பள்ளிக்கூடம் போக நினைத்தேன். வாத்தியாருக்கும், எங்க அய்யாவுக்கும் வாய்க்காத் தகராறு. அதனால எதிரி "ஓரொன் ஒண்ணு' சொல்லிக் கொடுக்குற பள்ளிக்கூடத்துல என் நிழல்கூட நுழையாதுன்னு வைராக்கியத்தோட நான் வாய்ப்பாடே படிக்கல!

உதவி:ஏதாவது கிளுகிளுப்பா காதல் கதை சொல்லுங்கண்ணே!

கோயிஞ்சாமி: டேய் ...நான் சினிமாக்கா கதை சொல்லுறேன்.

உதவி:அண்ணே, உங்க வாழ்க்கையில் ஏதாவது "தேவத' கிராஸ் ஆகியிருக்கும்ல. அதைச் சொல்லுங்கண்ணே!

கோயிஞ்சாமி:அது ஒரு முன்பனிக்காலம். மக்கள் காலைக் கடன்கள் முடிக்கும் நேரம்...

உதவி:பின்னீட்டிங் கண்ணே!

கோயிஞ்சாமி:நான் ஒரு பஸ்-ஸ்டாப்பில் நிற்கிறேன். எனக்கு திருமண வயது! கிளிப்பச்சை நிறத்தில் ஒரு முழுக்கால் சட்டை, பஞ்சு மிட்டாய்க் கலரில் ஒரு முழுக்கைச் சட்டை. அரைஞாண் கயிறையே பெல்ட்டாக அணிந்துகொண்டு ஒரு மன்மதன் போல் நின்று கொண்டிருந்தேன். அப்போது அந்தச் சம்பவம்...என் இதயத்தை விட்டு நீங்காத அந்தச் சம்பவம் நடந்தது...

உதவி:பரபரப்பா இருக்குதுண்ணே! மேல போங்க!

கோயிஞ்சாமி:தேவ தைபோல் வெள்ளை உடை அணிந்து வந்த அந்தப் பெண் என்னைக் கிராஸ் செய்தாள்!

உதவி:சுப்பர்ணே! அப்புறம் உங்க கண்ணும், அந்தப் பொண்ணு கண்ணும் மோதிச்சு.."தம்தன தம்தன தம்தன'ன்னு பின்னணில இளையராசா மியூசிக் கேட்டுச்சா!?'

கோயிஞ்சாமி:என் ன விஷயம்னு எனக்கு இன்னமும் புரியல.. எதைப் பார்த்து பயப்பட்டுச்சுன்னு தெரியல! ஆறேழு வயசு இருக்கும் அந்தப் பொண்ணுக்கு, என்னைப் பாத்து மிரண்டு "மம்மீ'ன்னு அலறி அடிச்சு ஓடிடுச்சு. அன்னைக்கிருந்து நான் என்னோட கிளிப்பச்சை கலர் பேன்ட்டுக்கு, பஞ்சு மிட்டாய்க் கலர் சட்டை போடுறதை வுட்டுடேன். மஞ்சச் சொக்காய்தான் போடுறேன்.

உதவி:ரொம்ப சென்டிமெண்டால இருக்கண்ணே! உங்க கலையுலக வாழ்க்கையைப் பத்திச் சொல்லுங்கண்ணே!

கோயிஞ்சாமி:அது ரொம்ப நீண்ட..சரித்திரம்! சொல்லுறேன். என்னோட அஞ்சு வயசுலேயே நாடக மேடை...

உதவி:ஏறி நடிக்க ஆரம்பிச்சுட்டீங்களா!

கோயிஞ்சாமி:இல்ல ..நாடக மேடையில எல்லாரும் நடிக்கறத ஒரு ஓரமா உக்காந்து முறுக்கு தின்னுக்கிட்டே நல்லா வேடிக்கை பாப்பேன். என்னோட 14 வயசுல முதன் முதலா சினிமா..

உதவி:சினிமாவுல நடிக்க வாய்ப்பு வந்துச்சா?

கோயிஞ்சாமி:முத ன் முதலா கொட்டாய்க்குப் போயி சினிமா பாத்தேன். குறிச்சுக்கோ "ஒüவையார்'தான் நான் பார்த்த முதல் படம். இப்படித்தான் என் கோலிவுட் வாழ்க்கை ரம்பமாச்சு.

உதவி:அற்புதமா இருக்குண்ணே! உங்களுக்கும் பல பெரிய மனுசங்களுக்கும் தொடர்பு இருந்திருக்குமே, அதைப் பத்திச் சொல்லுங்க!

கோயிஞ்சாமி:செக் காரப்பட்டியில ராமசாமின்னு ஒரு பெரிய மனுசன் இருந்தார். ஏழு அடி உயரம். அவ்ளோ பெரிய மனுசன். சோடாக் கடை வைச்சிருந்தாரு. அவர்கிட்ட நான் ஒரு நாள் பீடி பத்த வைக்க வத்திக்குச்சி கடன் வாங்கினேன். அவரும் தாராள மனசோட தந்தாரு. அப்புறம் ஒரு நாள் சந்தையில வெத்தலைக்கு சுண்ணாம்பு கேட்டாரு. நானும் பக்கத்துல இருந்த ஆயாகிட்ட கடன் வாங்கிக் கொடுத்தேன். அவ்வளவு நெருக்கமான, புனிதமான நட்பு எங்களுக்குள்ள இருந்துச்சு. அப்புறம் எம்.ஜி.ஆரும் நானும் ஒரே ரோட்டுல...

உதவி:ஒண்ணா தேர்தல் பிரச்சாரம் பண்ணினீங்களாண்ணே!

கோயிஞ்சாமி:அவரு தேர்தல் பிரச்சாரம் பண்ணிட்டுப் போன அதே ரோட்டுல நானும் ஒருவாரம் கழிச்சு டவுன்பஸ்ல போனேன். அப்புறம் ரஜினிகாந்தும் நானும் ஒரே மாசத்துல ஒரே தேதியிலதான் பொறந்தோம். அந்தப் பந்தத்துலதான் என்னோட ஒவ்வொரு பொறந்த நாளையும் தன்னோட பொறந்தநாள் மாதிரியே கொண்டாடுறாரு ரஜினி.

உதவி:அண்ணே! நீங்க லேசுப்பட்ட ஆளு இல்லண்ணே! ரொம்பப் பெரிய ஆளுண்ணே! உங்க அரசியல் வாழ்க்கையைப் பத்திச் சொல்லுங்கண்ணே!

கோயிஞ்சாமி:அது ரொம்ப விசேஷமானது. கண்டிப்பா என்னோட அரசியல் வாழ்க்கை நாட்டு மக்கள் எல்லாருக்கும் ஒரு பாடம்! ஒவ்வொரு தேர்தல் வர்றப்பவும் என் வீடு தேடி எல்லாக் கட்சிக்காரங்களும் பதறி அடிச்சி ஓடி வருவாங்க!

உதவி:ஆதரவு கேட்டாண்ணே?!

கோயிஞ்சாமி:இல்ல , எல்லாரும் வந்து என் முன்னாடி பவ்யமா நின்னு கெஞ்சுற தொனியில "அய்யா, தயவு செஞ்சு எனக்கு, எங்க கட்சிக்கு ஓட்டுப் போட்டுறாதீங்க! எதிர்க்கட்சிக்காரரு ரொம்ப நல்லவரு! அவங்களுக்கே உங்க ஓட்டைப் போடுங்க'ன்னு பணமெல்லாம் கொடுத்துவிட்டுப் போவாங்க!

உதவி:அப்படியாண் ணே! ஆச்சர்யமால்ல இருக்கு! ஏன் அப்படி?

கோயிஞ்சாமி:ஏன்னா , நான் யாருக்கு ஓட்டுப்போடுறனோ, அந்த ஆளு எவ்ளோ பெரிய்ய ஆளாயிருந்தாலும் சரி, டெபாசிட் காலியாயிரும்! அந்தப் பயம்தான்!

உதவி:செம மசாலாவா இருக்குண்ணே! வேற ஏதாவது சுவாரசியமா சொல்லுங்கண்ணே!

கோயிஞ்சாமி:நான் பொறந்ததுல இருந்து ரெட்டைக் கிளி பல்பொடியிலதான் ஒரு நாள் விட்டு ஒரு நாள் பல் தேய்க்கிறேன். குரங்கு மார்க் சீயக்காய்த் தூள் போட்டுத்தான் குளிக்கிறேன். தாத்தா சலவை சோப்பு வைச்சுத்தான் என் உள்ளாடைகளைத் துவைக்கிறேன். என் அழகின் ரகசியம் வாரம் ஒருக்கா வெளக்கெண்ணைய் தேய்ச்சுக் குளிக்கிறேன்.

உதவி:ரொம்ப அறிவுப்பூர்வமான தகவல்களா சொல்லுறீங்கண்ணே! வேற ஏதாவது...

கோயிஞ்சாமி:இது க்கு மேல வேற என்ன...சொல்ல ஒண்ணுமே இல்லீயே! இதுவரைக்கும் நான் சொன்னதை வைச்சு டெவலப் பண்ணி எழுதி ஒரு 150 பக்கத்துல கெட்டி அட்டை போட்டு, அட்டையில சிரிச்சாப்ல என் படத்தைப் போட்டு பொஸ்தகமா கொண்டு வந்துரலாமா!?

உதவி:ரொம்பத்தா ன் ஆசைப்படுறீங்கண்ணே! இதுவரைக்கும் நீங்க சொன்னதை ஒரு நாலு பக்க நோட்டீசா அடிச்சு வேணும்னா ஜனங்ககிட்ட விநியோகிக்கலாம். இல்ல, அப்படியே மொத்தமா மிக்சர் கடையில் போட்டு சீனி முட்டாய் வாங்கித் திங்கலாம்ணே! எப்படி நம்ம ஐடியா!

(கோயிஞ்சாமி கொலை வெறியோடு தன் உதவியாளரைத் துரத்த ஆரம்பிக்கிறார்.)
Thnaks dinamani....
oru sila samaiyam uyir vida ninaiththeen.....unakkee uyir sumantheen............
Reply


[-]
Quick Reply
Message
Type your reply to this message here.

Image Verification
Please enter the text contained within the image into the text box below it. This process is used to prevent automated spam bots.
Image Verification
(case insensitive)

Messages In This Thread
கோயிஞ்சாமி சுயசரிதை எழுதுகிறார்... - by SUNDHAL - 10-19-2005, 03:21 PM
[No subject] - by SUNDHAL - 10-19-2005, 03:23 PM
[No subject] - by sabi - 10-19-2005, 10:30 PM
[No subject] - by vasisutha - 10-19-2005, 10:39 PM
[No subject] - by RaMa - 10-20-2005, 05:42 AM
[No subject] - by கரிகாலன் - 10-20-2005, 08:02 AM
[No subject] - by Rasikai - 10-20-2005, 07:18 PM
[No subject] - by கரிகாலன் - 10-24-2005, 02:13 AM

Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)