Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
வேவு விமானம் புலிகள் பகுதியில் தற்கொலை
#3
புலிகளின் பகுதியில் வீழ்ந்து நொறுங்கியது சிறிலங்காவின் ஆளில்லா வேவு விமானம்!
ஜபுதன்கிழமைஇ 19 ஒக்ரொபர் 2005இ 15:59 ஈழம்ஸ ஜகிளிநொச்சிலிருந்து செ.தனோஜன்ஸ
தமிழீழ விடுதலைப் புலிகளின் நிர்வாகப் பகுதியில் சிறிலங்காவின் ஆளில்லா வேவு விமானம் இன்று புதன்கிழமை பிற்பகல் 1.50 மணியளவில் வீழ்ந்து நொறுங்கியது.


வவுனியா நகரிலிருந்து 30 கிலோ மீற்றர் தொலைவில் கனகராயன்குளத்துக்கு கிழக்காக உள்ள விஞ்ஞானகுளத்துக்கும் 9 ஆம் கட்டைக்கும் இடையில் இந்த வேவு விமானம் வீழ்ந்ததாக அப்பகுதி மக்கள் தெரிவித்தனர்.

வவுனியா சிறிலங்கா விமானப்படைத்தளத்திலிருந்து இந்த விமானம் புறப்பட்டு கிளிநொச்சி வான்பரப்பில் பறந்து வேவுப்படங்களை எடுத்துக்கொண்டிருந்தது.

அப்போது விமானம் கட்டுப்பாட்டை இழந்து வீழ்ந்தது. வவுனியா விமானப்படைத்தளத்திலிருந்து தொலை இயக்கி மூலம் இந்த விமானம் கட்டுப்படுத்தப்பட்டுக் கொண்டிருந்தது.

விமானம் வீழ்ந்து நொறுங்கிய பகுதிஇ தமிழீழ விடுதலைப் புலிகளின் நிர்வாகப்பகுதி என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த விமானம் மூலமே போர் இல்லாத காலத்தில் தமிழீழ விடுதலைப் புலிகள் குறித்த பல தகவல்களை சிறிலங்கா இராணுவம் சேகரித்து வந்தது.

முன்னைய போர்க் காலங்களிலும் தமிழர் குடியிருப்புப் பகுதிகளின் மீது குண்டு வீசி அப்பாவித் தமிழர்கள் ஆயிரக்கணக்கில் படுகொலை செய்யப்பட்டதிலும் இந்த ஆளில்லா வேவு விமானம் பாரிய பங்கு வகித்தது என்பது குறிப்பிடத்தக்கது.

1990-களில் இது போன்ற 6 விமானங்களை கிளிநொச்சி பிராந்தியத்தில் சிறிலங்கா விமானப் படை பயன்படுத்தி வந்தது. இவற்றில் பெரும்பாலானவை விபத்தினாலும் தீப்பிடித்தும் நாசமடைந்துவிட்டதாக அப்போதே சிறிலங்கா ஊடகங்கள் குற்றம் சாட்டியிருந்தன. இந்த விமானங்கள் அனைத்தும் இஸ்ரேலிய தயாரிப்பு ஆகும்


சுட்டது புதினத்திலிருந்து
<img src='http://img337.imageshack.us/img337/9450/tamil6zd.gif' border='0' alt='user posted image'>[img][/img]
Reply


Messages In This Thread
[No subject] - by vasanthan - 10-19-2005, 10:40 AM
புலிகளின்பகுதியில் இலங்கை ஆளில்லாவிமானம் தற்கொலை - by வியாசன் - 10-19-2005, 11:20 AM
[No subject] - by Danklas - 10-19-2005, 11:24 AM
[No subject] - by MUGATHTHAR - 10-19-2005, 12:33 PM
[No subject] - by narathar - 10-19-2005, 12:57 PM
[No subject] - by Danklas - 10-19-2005, 02:31 PM
[No subject] - by vasisutha - 10-19-2005, 04:11 PM
[No subject] - by AJeevan - 10-19-2005, 05:53 PM
[No subject] - by kurukaalapoovan - 10-19-2005, 06:25 PM
[No subject] - by வியாசன் - 10-19-2005, 08:16 PM
[No subject] - by tamilini - 10-19-2005, 08:22 PM
[No subject] - by kurukaalapoovan - 10-19-2005, 08:27 PM
[No subject] - by narathar - 10-19-2005, 10:22 PM
[No subject] - by RaMa - 10-20-2005, 05:00 AM
[No subject] - by AJeevan - 10-20-2005, 07:35 PM

Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)