10-19-2005, 04:07 AM
Vasampu Wrote:நன்றி அட்சரன் உங்கள் இணைப்பிற்கு!ஜப்பான், ஐரோப்பிய யூனியன், சீனா ஆகிய நாடுகள் ஏன் வறியநாடுகள் சார்பாக அமெரிக்காவை பகைக்க போகின்றன? இந்த நாடுகள், அமெரிக்காவின் நெருக்கமாக வணிக சகபாடிகள். இரண்டாம் உலக யுத்தத்தின் போது சரணடைந்த ஜப்பானை, உலகின் இரண்டாவது செல்வந்த நாடாக உயர வைத்தது அமெரிக்க பண உதவியும் வணிக கூட்டுறவும். இன்று உலகில் மிகவும் கூடுதலாக அமெரிக்க கடன்பத்திரங்களை வாங்கி, அமெரிக்காவுக்கு அதிக கடன் கொடுத்துள்ள நாடாக சீனா திகழ்கிறது. சீனாவில் தனது தொழிற்சாலையை கொண்டராத பெரிய அமெரிக்க நிறுவனங்கள் எதுவுமே இல்லை என்றே சொல்லலாம். ஐரோப்பியர் வந்து குடியேறித்தான் அமெரிக்கா உருவானது. இன்றும், என்றும் அமெரிக்காவின் நெருக்கமான உறவு ஐரோப்பாவுடன் தான்.
எல்லா வறிய நாடுகளும் ஒன்றிணைந்து ஒரு நிலையை அடைய யப்பான் ஐரோப்பிய ஒன்றியம் சீனா போன்றவை வழியமைக்க வேண்டும். அப்போதுதான் அமெரிக்காவின் கொட்டமும் அடங்கும்
.
சோவியத் யுூனியன் தோற்றுப்போன யுூனியன். இந்த உலகம், வறியவர்களுக்கும், தோற்றுப்போனவர்களுக்குமான உலகம் அல்ல. மாறாக, இந்த உலகம், வெற்றி பெற்றவர்களுக்கும், செல்வந்தர்களுக்குமான உலகம். வறியவர்களுக்கும், தோற்றுப்போனவர்களுக்கும் இரக்கம் காரணமாக பிச்சையிடலாம். ஆனால் அவர்கள் தாமும் செல்வந்தர்களுக்கும், வெற்றி பெற்றவர்களுக்கும் சமமாக கருதப்பட வேண்டும் என்று விரும்பினால், அவர்கள் தாமும் வெற்றி பெற்றவர்களாகவும், செல்வந்தர்களாகவும் மாற வேண்டும். உதாரணம் தேவையானால் அவர்கள் சிங்கப்புூரை பார்க்கலாம், தாய்வானையும், தென் கொரியாவையும், சீனாவையும் கூட பார்த்து தாமும் எவ்வாறு வெற்றி பெற்று, செல்வந்த நாடாகி, மற்றவர்களுக்கு சமமாக வரலாம் என்று சிந்திக்கலாம். அதை விட்டு விட்டு, வறிய நாடுகளுடன் சீனாவும், ஜப்பானும், ஐரோப்பிய யுூனியனும் அமெரிக்காவுக்கு எதிராக கூட்டு சேரும் என்று கனவு காணக்கூடாது. அப்படியான கனவு பயனற்றது.
''
'' [.423]
'' [.423]

