Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
தகட்டுப் பதக்கம் கொடுத்த இந்து கலாச்சார அமைச்சு
#1
தங்கப் பதக்கம் என தகட்டுப் பதக்கம் கொடுத்த இந்து கலாச்சார அமைச்சு

இந்து கலாச்சார அமைச்சினால் நடத்தப்பட்ட போட்டியொன்றில் வெற்றி பெற்ற மாணவர்களிற்கு தங்கப் பதங்கம் வழங்கப்படுமென அறிவித்துவிட்டு தகட்டினால் செய்யப்பட்ட பதக்கங்களே வழங்கப்பட்டுள்ளன.
ஈபிடிபி தேசவிரோதக் கும்பலின் தலைவர் டக்கிளசின் கட்டுப்பாட்டில் உள்ள இந்து கலாச்சார அமைச்சினால் நடத்தப்பட்ட போட்டியொன்றில் வெற்றி பெற்றவர்களுக்கு தங்கப்பதக்கம் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டு இருந்து. இப் போட்டியில் பல பாடசாலை மாணவர்கள் கலந்து கொண்டு முதலாம் இடத்தையும் பெற்றுக் கொண்டனர்.

இவர்களுக்கான பரிசளிப்பு விழா கடந்த வாரம் கொழும்பில் இந்து கலாச்சார அமைச்சினால் மிகவும் விமர்சையாகக் நடத்தப்பட்டது. இதில் யாழ்ப்பாணத்தில் இருந்தும் மற்றும் ஏனைய வடக்குக் கிழக்கு மாகாணங்களில் இருந்தும் பல மாணவர்கள் தமக்கு கிடைத்த பரிசில்களைப் பெற பல ஆயிரம் ரூபா நிதியை செலவு செய்து பலத்த சிரமத்தின் மத்தியில் கொழும்புக்கு சென்று இந்து கலாச்சார அமைச்சரிடம் பரிசில்களையும் பதக்கங்களையும் பெற்று வந்துள்ளனர்.

ஆனால் தங்கப்பதக்கம் என வழங்கப் பட்டவைகள் அனைத்தும் தகட்டில் செய்யப்பட்டு தங்க முலாம் பூசப்பட்டவையென தற்போது பரிசில்கள் பெற்றவர்கள் தெரிவிக்கின்றனர். பல ஆயிரம் ரூபாக்களைச் செலவு செய்து இதனைப் பெற்றதிலும் பார்க்க செல்லாமலே இருந்திருக்கலாம் எனவும் அவர்கள் கூறுகின்றார்கள்

சுட்டது சங்கதியிலிருந்து
Reply


Messages In This Thread
தகட்டுப் பதக்கம் கொடுத்த இந்து கலாச்சார அமைச்சு - by வன்னியன் - 10-18-2005, 01:17 PM
[No subject] - by கரிகாலன் - 10-18-2005, 02:18 PM
[No subject] - by தூயவன் - 10-18-2005, 02:21 PM
[No subject] - by vasisutha - 10-18-2005, 11:01 PM
[No subject] - by Danklas - 10-18-2005, 11:12 PM
[No subject] - by vasisutha - 10-18-2005, 11:24 PM

Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)