10-18-2005, 06:46 AM
<b>இலங்கையிலும் பறவைக்காய்ச்சல் நோய் பரவுவம் அபாயம்</b>
இலங்கையிலும் பறவைக் காய்ச்சல் நோய் பரவும் ஆபத்து உள்ளதாக கால்நடை உற்பத்தி மற்றும் சுகாதாரத்துணைத் திணைக்களம் தெரிவித்துள்ளது. கிழக்கு நாடுகளில் இருந்து தற்போது பறவைகள் கூட்டம் கூட்டமாக பெருமளவில் வருவதாலும், இந்நோய் பரவுவதற்கான வாய்ப்புகள் அதிகரித்துள்ளதாகவும் மேற்படி திணைக்களத்தின் பணிப்பாளர் அமரசேகர தெரிவித்துள்ளார்.
பறவைக் காய்ச்சல் மனிதர்களின் ஊடாகப்பரவ ஆரம்பித்தால் அது தொற்றி விரைவில் பெரும் தொற்றுநோயாக மாறக்கூடும் எனவும், உலக சுகாதார அமைப்பு சுட்டிக்காட்டியுள்ளது.
இதேவேளை இலங்கையில் இந்தப் பறவைக் காய்ச்சல் நோய் பரவாமல் தடுப்பதற்காக முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தொடர்பாக அமைச்சரவை யோசனைப் பத்திரம் ஒன்றை சுகாதார அமைச்சு முன்வைத்துள்ளது எனவும் தெரிவிக்கப்படுகிறது.
இந்த யோசனைகளின் படி இதற்காக தேசிய மற்றும் பிரதேச மட்டங்களில் சிறப்புக் குழுக்கள் நியமிக்கப்படவுள்ளன எனவும், பறவைக் காய்ச்சல் பரவும் நாடுகளில் இருந்து பறவை இனங்கள் இங்கு கொண்டுவரப்படுவதை தடுக்க ஏற்ற நடவடிக்கைகள் எடுக்கப்படவுள்ளது எனவும், கால் நடை மற்றும் சுகாதாரத்திணைக்களம் அறிவித்துள்ளது.
தகவல் - சங்கதி..! மேலுள்ள தகவல் - பிபிசி.கொம்

<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>