11-20-2003, 02:12 PM
சிங்கள கட்சிகள் எப்போதுமே தமது வாக்கு வங்கிகளை நிரப்ப போட்ட ஒரு முத்தாப்புதான் சிங்கள இனவாதமும்,பெளத்தவாதமும்.
S.W.R.D.பண்டாரநாயக்க( சந்திரிகாவின் தந்தை) தொடக்கி வைத்து விட்டு , ஆட்சிக்கு வந்த பின்னர் அதை மாற்றியமைக்க முற்பட்டார். ஆனால் அவர் ஒரு புத்த பிக்குவால் கொலை செய்யப்பட்டார். பலர் பண்டாரநாயக்க அரசியல் காரணமாக கொலை செய்யப் பட்டதாக எண்ணுகின்றனர்.ஆனால் பண்டாரநாயக்கவுக்கும் , சோமாராமாவுக்கும் (பண்டாவை துப்பாக்கியால் சுட்டுக் கொன்ற பிக்கு) இடையேயான வியாபார - அரசியல் தகராரே அக் கொலைக்கு காரணம் என்பது பலர் அறியாத உண்மை.
உண்மைகளை மறைத்து ஒருவரை தியாகியாக்க ஒரு சிலர் ஆடிய திரைமறைவு நாடகம் , தொடர் இனவாதமாகியது.
இது பின்னர் தொடர் கதையானது யாவரும் அறிந்ததே.
தமிழ் கட்சிகள் அரசுக்கு கை உயர்த்த தேவைப்படும் நிலையிலேயே இருக்கிறார்கள்.இவர்கள் அரச கொடுப்பனவுகளை நம்பி வாழும் , பேட்டிக் கதாநாயகர்கள்.
செல்வநாயகம், ஜீ.ஜீ , திருச்செல்வம் , அமிர்தலிங்கம் ,தொண்டமான் போன்றோருக்கு இருந்த வன்மையும், உலக அரங்கின் அங்கிகாரமும் தற்போதைய தமிழ் கட்சியினருக்கு இல்லையென்பதை தெரிந்தவர்கள் அறிவார்கள்.
ஆகவேதான் உலகம் விடுதலைப்புலிகளுடன் பேசுகிறது.
பேச வேண்டியவர்களுக்கு , யாரோடு பேச வேண்டும் என்று தெரியும். இல்லாவிடில் இவர்கள் வன்னிக்கு போக வேண்டிய தேவையில்லை.
தமிழ் பகுதிகளில் நடைபெற்ற அரசியல் கொலைகள்,சதிகள்,கலவரங்கள்,.......................இவை கூட பலருக்கு பீதியை உருவாக்கியது.
இதனால்தான் பாதுகாப்பும், சட்டமும் விடுதலைப் புலிகள் வசமானால் பலரது நிலை மோசமாகிவிடும் என்ற கருத்தை டக்ளஸ் போன்றோர் கூறினார்கள். இக் கருத்து சிங்கள தரப்புகளை யோசிக்க வைத்தது.
இதன் பின்னரே சில நடவடிக்கைகள் குறைந்தன.எனவேதான் சந்திரிகா விடுதலைப்புலிகள் மாறியுள்ளனர் என்று கூறுமளவுக்கு வந்தார்.
JVP எப்போதுமே வெளிநாட்டு சக்திகளுக்கு எதிரானவர்கள். கடந்த காலத்தில் இந்தியாவுக்கு எதிராக இருந்தது போலவே நோர்வே தரப்பினருக்கு எதிராக சந்திரிகாவோடு கைகோர்க்க முடிவெடுத்தனர்.
இவர்களது முன்னைய தேசியவாதமும்(விஜயவீரா காலத்து) தற்போதைய தேசியவாதமும் வித்தியாசமான போர்மூலாவைக் கொண்டது.
JVPயையும், சிகள உருமயவையும் வளர விடாமல் தடுப்பதும் ,சந்திரிகாவை திசை திரும்ப விடாது சிறிது காலத்துக்கு குழப்புவதையும் ரணில் பகுதியினர் தற்போது செய்யத் தொடங்கியுள்ளனர்.எனவேதான் எந்தவொரு கோரிக்கையையும் முன் வைக்காமல் ரணில் மீண்டும் சந்திரிகாவை சந்தித்தார்.
இந்த நாடகம் சந்திரிகாவின் அதிபர் பதவி இழக்கும் வரை தொடருமா?இல்லையா என்பது கேள்விக் குறியே?
இதை பயன்படுத்தி சில சிங்கள இனவாதக் கட்சிகள் ஆதாயம் தேட முயல்கின்றனர்.ஆகவேதான் ஒரு தேர்தல் வருவதை ரணிலும், சந்திரிகாவும் தற்போது விரும்பவில்லை.
வெளி நாடுகளின் தாக்கங்கள்தான் நிழல் ஆட்சிக்கு பின்னணியில் நிற்கிறது என்பதை வல்லுணர்கள் தெரிந்தே வைத்திருக்கின்றனர்.
கையேந்தி நிற்போர் , எதிர்த்தால் கிடைப்பதும், கிடைக்காமல் போகலாம். இதுவே பிரச்சனை.
ஆனால் உடனடி யுத்தமொன்று வர வாய்ப்பில்லை.
புலம் பெயர்ந்து அகதிகளாக விண்ணப்பித்துள்ள பலருக்கு ஒரு ஆறுதல்.
_____________________________________________________________________________________அஜீவன்