Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
யாழில் தொடங்கியிருக்கும் படுகொலைகள்
#7
தேர்தல் நெருங்கும் சூழ்நிலையில் உருவாக்கப்படும் அச்சநிலை!

* கிழக்கில் கருணாவின் பெயரில் தொடரும் தாக்குதல்கள்!

* வடக்கில் அச்சமூட்டும் வகையில் தொடரும் படுகொலைகள்

வடக்கு - கிழக்கில் நிலைமை மிக மோசமடைந்துள்ளது. கிழக்கில் இடம்பெற்று வந்த படுகொலைகள் தற்போது வடக்கிலும் பரவிவிட்டது. கிழக்கில் இராணுவப் புலனாய்வுப் பிரிவுடன் இணைந்து தமிழ்க் குழுக்கள் தாக்குதல்களில் ஈடுபடும் அதேநேரம், வடக்கிலும் இந்தத் தமிழ்க் குழுக்கள் ஊடுருவி விட்டனவா என்ற சந்தேகம் எழுந்துள்ளது.

அண்மைக் காலங்களில் கிழக்கில் படுகொலைகள் நடைபெற்று வந்தபோதும் ஜனாதிபதித் தேர்தல் நெருங்க நெருங்க வன்முறைகள் அதிகரித்து வருகின்றன. புலிகள் மீதும் பொதுமக்கள் மீதும் தாக்குதல்கள் அதிகரித்து வருகின்றன. இடையிடையே படைத் தரப்பு மீதும் இந்தத் தாக்குதல்கள் நடைபெறுகின்றன.

இம்முறை ஜனாதிபதித் தேர்தலில் பிரதான இரு வேட்பாளருக்கும் இடையே மிகக் கடும்போட்டி நிலவுமென்பது வெளிப்படை. இந்தத் தேர்தலின் முடிவுகளை மாற்றும் வல்லமை சிறுபான்மையின மக்களின் கைகளிலுள்ளதால் அவர்களது வாக்குகளைப் பெறுவதில் முக்கிய இரு வேட்பாளர்களுக்கும் இடையே கடும்போட்டி நிலவுகிறது. இதற்காக வடக்கு - கிழக்கில் தங்கள் அதிகாரப் பலத்தைப் பயன்படுத்தி வாக்குகளைக் கவர்ந்துவிட வேண்டுமென்பதில் இவர்கள் உறுதியாயிருக்கின்றனர்.

வடக்கு - கிழக்கைப் பொறுத்தவரை, புலிகளின் கட்டுப்பாட்டுப் பகுதிகளைச் சேர்ந்தவர்கள் இந்தத் தேர்தலில் பெரிதும் ஆர்வம் காட்டமாட்டார்களென்பது தெரிந்ததே. அந்த வாக்குகளை இவர்களால் எவ்விதத்திலும் வலிந்துபெறவும் முடியாது. அதேநேரம், இராணுவக் கட்டுப்பாட்டுப் பகுதியில் பல லட்சம் வாக்குகளுள்ளன. அவற்றைப் பெறுவதிலேயே இந்தப் போட்டா போட்டி நிலவுகிறது.

இந்தப் போட்டியின் அடிப்படையில், அதிகார பலமுள்ளவர்கள் வடக்கு - கிழக்கில் பெரும் குழப்பத்தையும், அச்சம் மற்றும் பீதிநிலையையும் உருவாக்கி அதற்குள் வாக்குகளை சூறையாடும் நோக்கிலும் செயற்படுவதாக கடுமையான குற்றச்சாட்டுக்கள் எழுந்துள்ளன. இதன் ஒரு அம்சமாக, தற்போதைய அரசியல் மற்றும் இராணுவச் சூழ்நிலைகளைப் பயன்படுத்தி இப்பகுதிகளில் குழப்பங்களை ஏற்படுத்தி அவற்றின் மூலம் அச்சம் நிறைந்ததோர் சூழ்நிலையை ஏற்படுத்திவிட்டால் தேர்தல் தினத்தன்று வாக்களிக்கச் செல்வோரின் எண்ணிக்கை பெருமளவில் குறைந்து விடுமெனவும் இந்தச் சந்தர்ப்பத்தைத் தங்களுக்கு வாய்ப்பாகப் பயன்படுத்திவிடலாமெனவும் ஒரு தரப்பு திட்டமிட்டுள்ளதாகத் தகவல்கள் கசிகின்றன.

அண்மைக் காலங்களில் நடைபெற்ற பொதுத் தேர்தலை விட ஜனாதிபதித் தேர்தல்களில் வடக்கு - கிழக்கில் ஐக்கிய தேசியக் கட்சியே செல்வாக்குச் செலுத்தி வருகிறது. இதனால் அக்கட்சியின் ஜனாதிபதி வேட்பாளரை விடுதலைப் புலிகளுடன் தொடர்புபடுத்தி மிகமோசமான பிரசாரங்கள் மேற்கொள்ளப்படுவது வழமை.

தெற்கைப் போலன்றி வேறு வேட்பாளர்களை நிறுத்தி வாக்குகளை அங்கு பிரித்துவிடவும் முடியாது. இதனால் அங்கு அச்சம் நிறைந்த குழப்பமான சூழ்நிலையொன்றை உருவாக்க வேண்டியது சிலரது வெற்றிக்கு அவசியமாகிறது.

வடக்கு- கிழக்கு மக்களின் வாக்குகள் ஐ.தே.க.வுக்குக் கிடைப்பதை எப்படியாவது தடுக்க வேண்டுமென்பதில் பலரும் மிகுந்த அக்கறை காட்டுகின்றனர். இந்தத் தேர்தலில் விடுதலைப் புலிகள் இதுவரை எவ்வித நிலைப்பாட்டையும் எடுக்கவில்லை. தமிழ் மக்கள் தங்கள் சுயவிருப்பின் பேரில் வாக்களிக்கலாமென அவர்கள் கூறியுள்ளபோதிலும், இறுதிநேரத்தில் அவர்களது மறைமுக சமிக்ஞை ஐ.தே.க.பக்கமிருக்குமென தென்பகுதிக் கட்சிகள் கருதுகின்றன.

இதனால், அந்த வாக்குகள் ரணில் விக்கிரமசிங்கவுக்குச் செல்வதை தடுக்க வேண்டிய கட்டாய நிலையிலிருக்கின்றனர். அங்கு சுமுக சூழ்நிலை நிலவினால் கணிசமான அளவினர் வாக்களிக்கச் செல்வர். அவர்கள் ரணிலுக்கே வாக்களிப்பரென்பதும் தெரியும். இதனால் மக்கள் வாக்களிக்கச் செல்ல முடியாதளவிற்கு அங்கு மோசமானதொரு சூழ்நிலையை உருவாக்கும் முயற்சிகள் திட்டமிட்டு மேற்கொள்ளப்படுவதாகவும் எச்சரிக்கப்பட்டுள்ளது.

வடக்கு, கிழக்கில் இராணுவக் கட்டுப்பாட்டுப் பகுதிகளுக்குள் அரசியல் பணிகளுக்காக வந்த விடுதலைப் புலிப் போராளிகள், நிழல் யுத்தத்தால் அங்கிருந்து முற்றாக வெளியேறிவிட்டனர். இது, இப்பகுதிகளில் குழப்பங்களை உருவாக்க முயல்வோருக்கு பெரும் வாய்ப்பாகிவிட்டது. இராணுவக் கட்டுப்பாட்டுப் பகுதிகளுக்குள் புலிகளிருந்தால் இந்தக் குழப்ப முயற்சிகளுக்கு அவர்கள் பெரும் தடையாக இருப்பரென்பதும் சம்பந்தப்பட்டோருக்கு நன்கு தெரியும்.

வடக்கு -கிழக்கில் குழப்பங்களை உருவாக்கும் அதேநேரம், அந்தக் குழப்பங்களுக்கான பழியை புலிகள் மீது சுமத்திவிடுவதும் இவர்களது நோக்கமாகும். புலிகள் மீதான ஐரோப்பிய ஒன்றியத்தின் பயணத்தடையானது இவர்களுக்கு வாய்ப்பாக அமைந்துள்ள அதேநேரம், கிழக்கில் புலிகள் மீதான தாக்குதல்களுக்குக் கருணா குழுவின் பெயரைப் பயன்படுத்துவதும் வடக்கில் இடம்பெறும் கொலைகளுக்கு புலிகளின் பெயரைப் பயன்படுத்துவதும் இவர்களது நோக்கமாகும்.

கிழக்கில் இராணுவக் கட்டுப்பாட்டுப் பகுதிகளில் புலிகள் அரசியல் பணிகளில் ஈடுபட்டபோது, நிராயுதபாணிகளான அவர்கள்மீது அடுத்தடுத்து தாக்குதல் நடத்தப்பட்டது. இந்தத் தாக்குதல்களையடுத்து புலிகள் அங்கிருந்து விலகவே, இடையிடையே அவர்களது கட்டுப்பாட்டுப் பகுதிகளுக்குள்ளும் ஊடுருவி அவர்கள் மீது தாக்குதல்கள் நடத்தப்பட்டு வருகிறது.

இராணுவக் கட்டுப்பாட்டுப் பகுதிகளில், படைமுகாம்களிலிருந்தும் அவற்றுக்கு அருகிலிருந்துமே தமிழ்க் குழுக்கள் செயற்படுவதாக புலிகள் குற்றஞ்சாட்டுகின்றனர். இதனால்தான் இவர்கள் இராணுவ புலனாய்வுப் பிரிவின் வழிநடத்தலில் இராணுவக் கட்டுப்பாட்டுப் பகுதிகளினுள் தங்கள் மீது தாக்குதல்களைத் தொடுப்பதாகவும் புலிகள் கூறுகின்றனர்.

<b>ஆனாலும், புலிகளின் பகுதிகளுக்குள் ஊடுருவித் தாக்குதல்களை நடத்துவதன் மூலம், இந்தத் தமிழ்க் குழுக்கள் புலிகளின் கட்டுப்பாட்டுப் பகுதிக்குள்ளேயே இருப்பது போன்றதொரு தோற்றப்பாட்டை ஏற்படுத்த படைத்தரப்பு மேற்கொண்ட முயற்சிகளெல்லாம் அம்பலத்துக்கு வந்துவிட்டன.

இந்த நிலையில் தான் ஜனாதிபதித் தேர்தல் காலத்தில் வடக்கு - கிழக்குப் பகுதிகளில் பெரும் குழப்ப நிலைகளை உருவாக்கும் முயற்சிகள் துரிதமடைந்துள்ளன. இதன் மூலம் இரு நோக்கங்களை நிறைவேற்றவும் திட்டமிடப்பட்டுள்ளதாகவும் கருதப்படுகிறது.</b>

அதாவது, கிழக்கில் புலிகளின் பகுதிகளுக்குள் ஊடுருவித் தாக்குவதன் மூலம் அங்கு கருணா குழுவின் கை ஓங்கிவருவதாகக் காட்ட முற்படும் அதேநேரம், வடக்கில் இடம்பெறும் படுகொலைகள் மூலம் புலிகள் மீது அபகீர்த்தியை ஏற்படுத்தவும் திட்டமிடப்பட்டுள்ளது. ஒரே கல்லில் இரு மாங்காய்களை விழுத்துவதுபோல் ஒரே நேரத்தில் வடக்கில் ஒரு திட்டத்தையும், கிழக்கில் இன்னொரு திட்டத்தையும் செயற்படுத்தும் முயற்சிகள் துரிதமடைந்துள்ளன.

வடக்கைப் பொறுத்தவரை கிழக்கைப்போன்று தமிழ்க் குழுக்கள் இல்லாவிட்டாலும், அங்கு சந்தர்ப்பத்தைப் பயன்படுத்தி புலிகள் மீது அபகீர்த்தியையும், மக்கள் மத்தியில் அச்சத்தையும் ஏற்படுத்தும் முயற்சிகளும் நடைபெறுகின்றன.

<b>சமூக விரோதச் செயல்கள், காட்டிக் கொடுப்புகள், துரோகத்தனங்களில் ஈடுபடுவோருக்குக் கடும் தண்டனை என சுவரொட்டிகள் ஒட்டப்பட்ட பின்னர் அங்கு அடுத்தடுத்து கொலைகளும், தாக்குதல் சம்பவங்களும் இடம்பெற்றன.

இந்தச் சந்தர்ப்பத்தைப் பயன்படுத்தி சிலர் கொல்லப்பட, அதற்கான பழியைப் புலிகள் மீது சுமத்தும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. ஆனாலும், இதன் சூத்திரதாரிகள் படையினரே என, இதற்குக் காரணமான படையினரின் விபரங்களுடன் போர்நிறுத்தக் கண்காணிப்புக் குழுவுக்கு புலிகளின் யாழ்.மாவட்ட அரசியல் துறைப்பொறுப்பாளர் இளம்பரிதி சுட்டிக்காட்டியுள்ளார்.</b>

<b>இதேநேரம், தமிழ்த் தேசிய வாதியும், விடுதலைப் புலிகளின் நெருங்கிய ஆதரவாளருமான கோப்பாய் கிறிஸ்தவக் கல்லூரி அதிபர் என்.சிவகடாட்சத்தை கொன்றதன் மூலம், தமிழ்த் தேசியப் போராட்டங்களில் ஈடுபடுவோருக்கு எச்சரிக்கை விடப்பட்டதுடன், அதன் தாக்கத்தை மூடிமறைக்க மறுநாள் யாழ். மத்திய கல்லூரி அதிபர் கே.ராஜதுரையின் படுகொலை மூலம் மக்கள் மத்தியில் புலிகளுக்கெதிரான பெரும் பிரசாரத்தை முன்னெடுக்கும் முயற்சிகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

சிறுவர்களைப் படையில் சேர்ப்பதற்கு எதிராகக் குரல் கொடுத்துவந்த இரு அதிபர்களையும் புலிகளே சுட்டுக்கொன்றுவிட்டதாகக் கூறுவதன் மூலம் இந்தக் கொலைகளின் நோக்கமும், அதன் பின்னணியிலிருப்பவர்களும் இனங்காணப்பட்டுள்ளனர்.

யாழ்ப்பாணக் குடாநாட்டில் சிறுவர்களைப் புலிகள் தங்களுடன் சேர்ப்பதாகக் குற்றச்சாட்டுகளே எழாத நிலையில் இவ்வாறானதொரு பிரசாரம் அரச ஊடகங்களிலும், சிங்கள, ஆங்கில ஊடகங்களிலும் முன்னெடுக்கப்படுகிறது. அத்துடன், சர்வதேச சமூகத்தின் முன்னால் புலிகளின் பெயருக்கு களங்கம் ஏற்படுத்தும் வகையிலும் பிரசாரங்கள் முன்னெடுக்கப்படுகின்றன.

ஒருபுறம் அதிபர் சிவகடாட்சத்தின் கொலைகளின் மூலம் மக்கள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தவும், மறுபுறம் அதிபர் ராஜதுரையின் கொலையின் மூலம் கல்விச் சமூகத்தின் மத்தியில் பெரும் குழப்பத்தை ஏற்படுத்தவும் திட்டமிடப்பட்டு காரியங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளதாகக் கடும் குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ளன.</b>

இவ்வாறு வடக்கில் குழப்பங்கள் உருவாக்கப்படும் அதேநேரம், கிழக்கில் கருணா குழுவின் பெயரில் பல்வேறு நாடகங்கள் அரங்கேறுகின்றன. வவுணதீவில் அண்மையில் நடைபெற்ற தாக்குதலில் மட்டு. - அம்பாறை மாவட்ட சிறப்புத் தளபதி கேணல் பானு கொல்லப்பட்டுவிட்டதாகப் பெரும் பிரசாரங்கள் செய்யப்பட்டன.

அதுபொய்யெனத் தெரிந்ததும் அவர் இந்தத் தாக்குதலில் படுகாயமடைந்ததாகப் பிரசாரம் செய்யப்பட்டது. அதுவும் பொய்யெனத் தெரிந்ததும் புலிகளின் புலனாய்வுப் பிரிவுப் பொறுப்பாளர் கீர்த்தியே கொல்லப்பட்டதாகப் பிரசாரம் செய்யப்பட்டது. அதுவும் பொய்யெனத் தெரிந்ததும் பலர் கொல்லப்பட்டதாக இப்போது கூறப்படுகிறது.

வடக்கில் குழப்பங்களை ஏற்படுத்தித் தேர்தலில் ஒரு தரப்பின் வெற்றி வாய்ப்பை இல்லாது செய்யத் திட்டமிடப்பட்டுள்ளதோ அதேபோன்று கிழக்கிலும் கருணா குழுவின் பெயரில் அச்சத்தையும் குழப்பத்தையும் ஏற்படுத்தும் முயற்சிகள் தீவிரமடைந்துள்ளன.

இதனாலேயே, கேணல் பானுபோன்ற முக்கிய தளபதிகளை இலக்கு வைத்து தாக்குமளவிற்கு கருணா குழு பலம்மிக்கதொரு சக்தியாக விளங்குவதுபோல் காட்டும் முயற்சிகள் நடைபெறுகின்றன. அதேநேரம், கருணா குழுவின் பெயரிலும் இன்னும் பல திட்டங்களை அரங்கேற்றவும் சில அரசியல்வாதிகள் திட்டமிட்டுள்ளனராம்.

தமிழ் - முஸ்லிம்களிடையே மோதலை ஏற்படுத்துவது, கருணாவின் பெயரில் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் வேட்பாளருக்கான சுவரொட்டிகளை ஒட்டுவது, முடிந்தால் கருணாவின் குரலில், பிரதேசவாதத்தைக் கிளறும் பிரசாரங்களைச் செய்யவும் திட்டமிடப்பட்டுள்ளதாகவும் இதில் சில அரசியல்வாதிகள் முன்னின்று செயற்படுவதாகவும் கூறப்படுகிறது.

அதேநேரம், இராணுவத்தினர் மீது தாக்குதல்களை நடத்துவதுபோல் மக்கள் மீது தாக்குதல்களை நடத்தி அதற்கான பழியை புலிகள் மீது சுமத்தும் நடவடிக்கைகளும் இடம்பெற்று வருகின்றன. கடந்த இரு வாரகாலங்களில் இராணுவத்தினர் மீதான தாக்குதலெனக் கூறி பொதுமக்கள் தாக்கப்பட்ட சம்பவங்கள் பல மட்டக்களப்பில் அரங்கேறியுள்ளன.

தற்போது திருகோணமலையில் பொங்கு தமிழ் நிகழ்வு நடைபெறவுள்ள நிலையில் திருகோணமலை மாவட்ட தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு எம்.பி.க்கள் இருவர் மீது தாக்குதல் தொடுத்து குழப்பங்களை ஏற்படுத்த பெரும் சதித்திட்டம் தீட்டப்பட்டுள்ளதாக அஞ்சப்படுகிறது. வெள்ளிக்கிழமையும் நேற்று சனிக்கிழமையும் இது தொடர்பான செய்திகளை அரச ஊடகங்கள், படையினரை ஆதாரங்காட்டி வெளியிட்டுள்ளன.

இவ்விருவரையும் புலிகள் படுகொலை செய்துவிட்டு அதனைப் படையினரே செய்ததாகக் கூறி திருகோணமலையில் குழப்பங்களை ஏற்படுத்தத் திட்டமிட்டுள்ளதாகவும் அரச ஊடகங்கள் தெரிவித்துள்ளமை மக்களைப் பெரும் அதிர்ச்சியடையச் செய்துள்ளது.

பொங்குதமிழ் நிகழ்வும் ஜனாதிபதித் தேர்தலும் அடுத்தடுத்து வரவிருக்கையில் பெரும் குழப்பங்களை ஏற்படுத்தி புலிகளுக்கு அபகீர்த்தியை ஏற்படுத்தும் முயற்சிகள் தொடர்வதையே இது காட்டுவதாகக் கூட்டமைப்பு வட்டாரங்கள் தெரிவித்தன.

இவ்வாறு ஜனாதிபதித் தேர்தலுக்கு முன்னர் அச்சம் நிறைந்ததொரு சூழலை ஏற்படுத்தம் முயற்சிகள் திட்டமிட்டு மேற்கொள்ளப்பட்டு வருவது சுட்டிக் காட்டப்பட்டுள்ளது. இதற்கு அரசு தரப்பும் துணைபோவதாகப் புலிகள் சுட்டிக் காட்டியுள்ளனர்.

தமிழ்க் குழுக்களின் ஆயுதங்கள் களையப்பட வேண்டுமெனப் பல தடவைகள் வற்புறுத்தப்பட்டும் அரச தரப்பு அதனைக் கருத்திலெடுக்கவில்லை. சர்வதேச சமூகம்கூட, உடனடியாக நிழல் யுத்தத்தை அரசு நிறுத்தவேண்டுமென வற்புறுத்தியிருந்தும் அரசு அதனை உதாசீனம் செய்துவிட்டு முழுப் பழியையும் தமிழ்த் தரப்பின் மீதே சுமத்த முற்பட்டுவருகிறது.

வடக்கு - கிழக்கில் அச்சமும் குழப்பமும் நிறைந்த சூழ்நிலையொன்று தோற்றுவிக்கப்பட்டுள்ள அதேநேரம், தென்பகுதியில் பெருமளவு தற்கொலைக் குண்டுதாரிகளைப் புலிகள் அனுப்பியுள்ளதாகவும் முழு அளவில் பிரசாரங்கள் முடுக்கிவிடப்பட்டுள்ளன. தமிழ் ஊடகங்களில் வெளியாகும் ஒவ்வொரு செய்திகளுக்கும் வித்தியாசமான விளக்கங்கள் கொடுக்கப்பட்டு மோசமானதொரு நிலைமை உருவாக்கப்பட்டு வருகிறது.

போர்நிறுத்த காலத்தில் கூட வடக்கு -கிழக்கு மக்களை நிம்மதியாக இருக்கவிடாது அவர்கள் மீது நிழல் யுத்தம் தொடுக்கப்பட்டு அதன் பழியை வேறொரு தரப்பு மீது சுமத்தி குழப்பங்களை உருவாக்கும் நடவடிக்கைகள் முடுக்கிவிடப்பட்டுள்ளன. இந்த நிலைமை நாட்டை மிக மோசமான நிலைக்குத் தள்ளிவிடுமென்பதில் ஐயமில்லை.

http://www.thinakural.com/New%20web%20site...16/vithuran.htm
" "


Messages In This Thread
[No subject] - by cannon - 10-14-2005, 10:28 PM
[No subject] - by cannon - 10-14-2005, 10:32 PM
[No subject] - by கறுணா - 10-14-2005, 10:56 PM
[No subject] - by cannon - 10-15-2005, 04:40 PM
[No subject] - by cannon - 10-15-2005, 04:45 PM
[No subject] - by cannon - 10-17-2005, 08:51 PM
[No subject] - by Vasampu - 10-17-2005, 11:56 PM
[No subject] - by cannon - 10-18-2005, 06:20 AM
[No subject] - by vasanthan - 10-18-2005, 01:23 PM
[No subject] - by Vasampu - 10-18-2005, 11:18 PM
[No subject] - by cannon - 10-19-2005, 06:15 AM
[No subject] - by Vasampu - 10-19-2005, 09:54 AM
[No subject] - by vasanthan - 10-19-2005, 02:27 PM
[No subject] - by தூயவன் - 10-19-2005, 02:50 PM
[No subject] - by Danklas - 10-19-2005, 02:59 PM
[No subject] - by Vasampu - 10-19-2005, 04:40 PM
[No subject] - by cannon - 10-19-2005, 05:36 PM
[No subject] - by Vasampu - 10-19-2005, 06:47 PM
[No subject] - by இராவணன் - 10-19-2005, 06:50 PM

Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)