10-17-2005, 08:08 PM
நோர்வே அபிவிருத்தி அமைச்சரானார் எரிக்சொல்ஹெய்ம்!
[செவ்வாய்க்கிழமை, 18 ஒக்ரொபர் 2005, 00:27 ஈழம்] [கொழும்பு நிருபர்]
நோர்வேயின் புதிய அரசாங்கத்தின் அபிவிருத்தி அமைச்சராக இலங்கைக்கான விசேட தூதர் எரிக் சொல்ஹெய்ம் நியமிக்கப்பட்டுள்ளார்.
நோர்வே நாட்டின் புதிய பிரதமரான ஜ்கென்ஸ் ஸ்டோடென்பெர்க் திங்கட்கிழமை தமது அரசாங்கத்தின் அமைச்சரவைப் பட்டியலை நோர்வே மன்னர் ஐந்தாம் ஹரால்ட்டிடம் ஒப்படைத்தார்.
நோர்வே புதிய வெளிவிவகார அமைச்சராக ஜோனஸ் கர் ஸ்டோர் (வயது 45) நியமிக்கப்பட்டுள்ளார். இவர் நோர்வே செஞ்சிலுவைச் சங்கத்தின் தலைவர் பொறுப்பில் உள்ளார்.
இலங்கைக்கான விசேட தூதுவரான எரிக் சொல்ஹெய்ம் (வயது 50) அந்நாட்டின் புதிய அபிவிருத்தி அமைச்சராக்கப்பட்டுள்ளார்.
நோர்வே தேர்தலில் எரிக் சொல்ஹெய்ம் சார்ந்துள்ள சோசலிஸ்ட் இடதுசாரி கட்சி இரண்டாவது பெரும்பான்மை பெற்ற கட்சியாக வென்றது.
தற்போது அறிவிக்கப்பட்டுள்ள அமைச்சர்களில் 10 பேர் தொழிலாளர் கட்சி, 5 பேர் சோசலிஸ்ட் இடதுசாரி கட்சி, மற்றும் 4 பேர் அக்ரேரியன் கட்சியிலிருந்து இடம்பெற்றுள்ளனர்.
சோசலிஸ்ட் இடதுசாரிக் கட்சியின் தற்போதைய தலைவரான கிறிஸ்டின் ஹல்வோர்சென் நோர்வேயின் புதிய நிதி அமைச்சராகியுள்ளார்.
சோசலிஸ்ட் இடதுசாரிக் கட்சியின் தலைவராக 1987 ஆம் ஆண்டு முதல் 1997ஆம் ஆண்டுவரை 10 ஆண்டுகள் எரிக் சொல்ஹெய்ம் அப்பதவியில் இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது
http://www.eelampage.com/?cn=20920

[b]<span style='font-size:25pt;line-height:100%'>
</span>
</span>