10-17-2005, 02:51 PM
இருவர்', `ஜீன்ஸ்' போன்ற தமிழ்ப்படங்களில் நடித்து தமிழ் மக்களை தன் கவர்ச்சியான நடிப்பில் கட்டிப்போட்டவர் உலக அழகி பட்டம் வென்ற ஐஸ்வர்யா ராய். மீண்டும் அவரை சூப்பர் ஸ்டார் ரஜினியுடன் `சிவாஜி' படத்தில் நடிக்க வைக்க இயக்குநர் ஷங்கரும், தயாரிப்பாளரும் பகீரத முயற்சி மேற்கொண்டனர். ஆனால் அது பலிக்கவில்லை. ஐஸ்வர்யா ராய் தற்போது ஹாலிவுட் படங்களில்தான் நடிக்கிறார். அதனால்தான் ரஜினியுடன் நடிக்க முடியவில்லை என்கிறார்கள்.
தற்போது ஐஸ்வர்யாராய் வெளிநாட்டில் தங்கி படப்பிடிப்பில் கலந்து கொள்கிறார். பிரவோக்ட், `தி மிஸ்ட்ரஸ் ஆப் ஸ்பைசஸ்', தி லாஸ்ட் லீஜியன்' என்ற ஆங்கில படங்களிலும், "உம்ரோ ஜான்'', `ஜாட்கா அக்பர்', "சாம்னா'', தூம்-மிமி ஆகிய இந்தி படங்களிலும் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார்.
இதில் சஞ்சய் காட்வியின் "தூம்-மிமி'' என்ற படத்தில் ஐஸ்வர்யா மிகவும் கவர்ச்சி காட்டி ரசிகர்களை சூடேற்ற இருக்கிறார். தன் அங்கங்களை மிகவும் எடுப்பாக காண்பிப்பதற்காக விசேஷ பயிற்சிகளையும் மேற்கொண்டு வருகிறார்.
இப்படத்தை பற்றி இதன் இயக்குநர் காட்லி கூறும்போது, நீங்கள் இதுவரை எந்த படங்களிலும் பார்க்காத அளவு கவர்ச்சியில் ஐஸ்வர்யாராயை இப்படத்தில் காணலாம் என்கிறார்.
ஆனாலும் ஆங்கில படங்களில் கவர்ச்சி காட்டி நடிக்க ஐஸ்வர்யா ராய் மறுத்து விட்டார்.
நடிப்பிற்காக வெளிநாட்டில் தங்கியிருந்தாலும் தன் சொந்த வீட்டிற்கு வருவதையே மிகவும் ஆர்வமாக கொண்டிருக்கிறார். அதனால்தான் சில இந்தி படங்களில் நடிக்கவும் ஒப்புக் கொண்டுள்ளார்.
இதுபற்றி ஐஸ்வர்யா ராய் கூறியதாவது:-
நான் தற்போது தி லாஸ்ட் லீஜியன் என்ற ஆங்கில படத்தில் நடித்து வருகிறேன். இப்படத்தில் என்னுடன் காலின் பெர்த்-ம், காந்தி படத்தில் நடித்த பென் கிங்சிலியும் நடிக்கிறார்கள்.
இதற்காக நான் உலகின் பல்வேறு இடங்களுக்கும் சென்றுள்ளேன். ஆனாலும் எனக்கு பிடித்தமான நாடு இந்தியாதான். இங்கு இருப்பதையே மிகவும் நேசிக்கிறேன்.
நான் இவர்களுடன் நடிக்கும் போதும் என் வீட்டில் இருப்பது போன்றே உணர்கின்றேன். இதுபோன்ற நடிகர்களுடன் நடிக்க எனக்கு வாய்ப்பு கிடைத்திருப்பதை மிகவும் அதிர்ஷ்டமானதாகவே கருதுகிறேன் என்றார்.
எப்படியோ உலக ரசிகர்களை கவர்ந்தாலும் இந்தியர்களுக்கு மட்டும் கவர்ச்சி காட்டி குஷிப்படுத்தும் ஐஸ்வர்யாராய் பாராட்டப்பட வேண்டியவர்தான்.
Thnaks:malar..............

oru sila samaiyam uyir vida ninaiththeen.....unakkee uyir sumantheen............