Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
அமெரிக்க (அரக்கனின்) மறுபக்கம்
#3
நன்றி அட்சரன் உங்கள் இணைப்பிற்கு!

இப்படி எத்தனையோ வாக்குமூலங்களை ஏற்கனவே பல ஞானோதயம் பிறந்த அமெரிக்கர்கள் கூறிவிட்டார்கள். ஆனால் அமெரிக்க பணபலத்தாலும் டொலரின் ஆதிக்கத்தாலும் அமெரிக்காவை ஒன்றும் செய்ய முடியாமல் ஐ.நா சபையே அடிபணிந்து போகின்றது. ஆனால் தற்போது சற்று ஆறுதலாக ஐரோப்பிய அறிமுகமான எயுரோ நாணயம் உலகளவில் முன்னோக்கி வருவது குறிப்பிடத்தக்கது. எல்லா வறிய நாடுகளும் ஒன்றிணைந்து ஒரு நிலையை அடைய யப்பான் ஐரோப்பிய ஒன்றியம் சீனா போன்றவை வழியமைக்க வேண்டும். அப்போதுதான் அமெரிக்காவின் கொட்டமும் அடங்கும்

முன்பு இப்படித்தான் கர்மவீரர் காமராஜர் தனது ரஷ்ய பயணத்தின் பின்பு சோசலிசக் கொள்கைகள் பிடித்து விட இந்தியாவிலும் அதனைக் கொண்டுவர விரும்பினார்..
அதனால் அப்போது தமிழ்நாட்டில் நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் அதையே தனது தேர்தல் பிரச்சாரத்திலும் அதனைத் தெளிவாகக் கூறினார். ஏற்கனவே கியுபா சீனா போன்ற நாடுகளில் சோசலிசம் தளைத்திருக்க இந்தியாவிலும் அது பரவினால் தனக்கு ஆபத்து என்று கருதிய அமெரிக்கா உடனடியாக களமிறங்கியது. தமிழ்நாட்டுத் தமிழர்களின் பலவீனத்தை சரியாகக் கணித்து பணமழை பொழிந்தது.. அதனால் சாதாரண வேட்பாளரிடம் கர்மவீரர் தோல்வியைத் தழுவினார்.
Reply


Messages In This Thread
[No subject] - by Birundan - 10-17-2005, 12:31 PM
[No subject] - by Vasampu - 10-17-2005, 01:11 PM
[No subject] - by கரிகாலன் - 10-18-2005, 10:37 AM
[No subject] - by Jude - 10-19-2005, 04:07 AM

Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)