Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
இலங்கையின் சட்டங்களின்படி கருணா செயற்பாடு சட்டவிரோதமானது
#1
<span style='font-size:25pt;line-height:100%'><b>இலங்கையின் சாதாரண சட்டங்களின்படி கருணா குழுவின் செயற்பாடு சட்டவிரோதமானது</b> </span>

<b>கண்காணிப்புக் குழுவின் தலைவர் கூறுகிறார்

இலங்கையின் சாதாரண சட்டங்களின் படி கருணா குழுவின் செயற்பாடுகள் சட்ட விரோதமானவை என யுத்த நிறுத்த கண்காணிப்புக் குழுவின் தலைவர் ஹக்ரப் ஹொக்லண்ட் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் மேலும் கூறுகையில்,

ஆயுதக் குழுவொன்று அப்பகுதிகளில் இயங்குவது சட்ட விரோதமானது. இது குறித்து எவ்வித சந்தேகமுமில்லை.

இக் குழுக்களே முழு நிலைவரத்திற்கும் பாதிப்பை ஏற்படுத்தி வருகின்றன.

இக் குழுக்களில் உருவாக்கப்பட்டுள்ள பாதுகாப்பற்ற சூழ்நிலைகளிலேயே விடுதலைப் புலிகள் கிழக்கில் உள்ளூர் பேச்சுவார்த்தைகளில் கலந்து கொள்ள முடியாத சூழ்நிலை காணப்படுகிறது.

துரதிர்ஷ்டவசமாக இரு தரப்பினதும் உள்ளூர் தளபதிகள் மத்தியிலான நேரடி சந்திப்புகள் கூட இடம்பெறுவதில்லை. நாங்கள் இதற்கான முயற்சிகளை மீண்டும் மீண்டும் மேற்கொண்டுள்ளோம்.

உயர் மட்ட சந்திப்புகள் இடை நிறுத்தப்பட்ட பின்னரும் கூட உள்ளூர் தளபதிகள் நடைமுறை பிரச்சினைகள் குறித்து நேரடியாக சந்தித்து ஆராய்ந்து வந்தனர்.

கிழக்கிலேயே இவ்வாறான சந்திப்புகள் அதிகம் இடம்பெற்று வந்தன. இவ்வாறான சந்திப்பு இறுதியாக இரண்டு மாதத்திற்கு முன்னர் யாழ்ப்பாணத்தில் இடம்பெற்றது.

தற்போது சகல தொடர்பாடல்களும் யுத்த நிறுத்த கண்காணிப்பு குழு நோர்வே பிரதிநிதிகள் ஊடாக இடம்பெறுகின்றன.

யுத்த நிறுத்த உடன்படிக்கையை பாதிக்கும் விடயங்களுக்கு தீர்வு காண்பதற்கு உள்ளூர் பேச்சுவார்த்தைகளை ஆரம்பிப்பது மிக முக்கியம்.

கிழக்கு மாகாணத்தில் காணப்படும் ஆயுதக் குழுக்களால் விடுதலைப் புலிகளின் அரசியல் பிரிவினருக்கு அச்சுறுத்தல் காணப்படுகின்றது. இதுவே உள்ளூர் பேச்சுவார்த்தைகளில் விடுதலைப் புலிகள் கலந்து கொள்வதை தடுக்கின்றது.

வட, கிழக்கில் இடம்பெறும் படுகொலைகள், முழு சமாதான முயற்சியையும் பலவீனப்படுத்துவதுடன் சகலருக்கும் பாதுகாப்பற்ற சூழலை உருவாக்குகின்றன.

இவ்வாறான கொலைகள் தொடர்வது விரக்தியளிக்கின்றது. இக் கொலைகள் அச்சத்தையும் விரக்தியையும் உருவாக்கியுள்ளது. இவை இடம்பெற கூடாது.

பதற்ற நிலை அதிகரித்துள்ள போதிலும் யுத்தத்திற்கான சாத்தியக் கூறுகள் இல்லை.

அரசாங்கமும் விடுதலைப் புலிகளும் தாம் யுத்த நிறுத்த உடன்படிக்கையில் உறுதியாக உள்ளதாக தெரிவித்துள்ளனர்.

இரண்டு தரப்பும் யுத்தத்திற்காக தம்மை தயார்ப்படுத்தி வருகின்ற போதிலும் இரு தரப்பும் மோதலை முதலில் ஆரம்பிக்கப் போவதில்லை. யுத்தம் உடனடியாக சாத்தியமில்லை. இருதரப்பிற்கும் இதனை தங்களால் தாங்கிக் கொள்ள முடியாது என்பது தெரியும்.

யுத்த நிறுத்த உடன்படிக்கையில் இரு தரப்பும் மீண்டும் தம்மை உடன்பாட்டிற்கு அர்ப்பணிப்பதற்கான ஏற்பாடுகள் உள்ளன.

உள்ளூர் மட்டத்தில் பேச்சுவார்த்தைகளை மேற்கொள்வது என்பது இதன் ஒரு பகுதி.

பொது மக்களுக்கு பாதுகாப்பு வழங்கப்பட வேண்டியதுடன், தற்போதைய சூழ்நிலையை மாற்றியமைப்பதற்காக இருதரப்பும் நம்பிக்கையை கட்டியெழுப்பும் செயற்பாடுகளில் ஈடுபட வேண்டுமென்றார். </b>

http://www.thinakural.com/New%20web%20site...r/17/news-2.htm
[b]<span style='font-size:25pt;line-height:100%'>
</span>
Reply


Messages In This Thread
இலங்கையின் சட்டங்களின்படி கருணா செயற்பாடு சட்டவிரோதமானது - by வினித் - 10-17-2005, 12:34 PM

Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)