Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
ராஜீவ் கொலையாளிகளுக்கு மன்னிப்பு அளிக்கலாம்;அப்துல்கலாம்
#4
ராஜீவ் வழக்கில் மரண தண்டனை விதிக்கப்பட்ட மூவருக்கும் மன்னிப்பு: இந்திய அரச தலைவர் பரிந்துரை!!
ஜதிங்கட்கிழமைஇ 17 ஒக்ரொபர் 2005இ 17:11 ஈழம்ஸ ஜபுதினம் நிருபர்ஸ
ராஜீவ் கொலை வழக்கில் முருகன்இ பேரறிவாளன்இ சின்ன சாந்தன் ஆகியோருக்கு விதிக்கப்பட்ட மரண தண்டனையை மறுபரிசீலனை செய்யுமாறு இந்திய அரசாங்கத்தை இந்திய அரச தலைவர் அப்துல் கலாம் வலியுறுத்தியுள்ளார்.


இந்த வழக்கில் முருகன்இ பேரறிவாளன்இ சின்ன சாந்தன் கடந்த 14 வருடங்களாக சிறையில் உள்ளனர். 3 பேரும் இந்திய அரச தலைவருக்கு கருணை மனு அனுப்பி உள்ளனர்.

இவர்களுடன் இந்தியா முழுவதும் மொத்தம் மரண தண்டனை விதிக்கப்பட்ட 50 பேரும் இந்திய அரச தலைவருக்குக் கருணை மனுக்களை அனுப்பியுள்ளனர்.

1993 ஆம் ஆண்டு 21 காவல்துறையினர் இறந்த வழக்கில் சத்தியமங்கலம் வீரப்பன் குழுவைச் சேர்ந்தவர்கள் எனக் கூறப்படும் ஞானபிரகாசம்இ மாதையாஇ பிலவேந்திரன் மற்றும் இளைஞர் காங்கிரஸ் தலைவர் மனீந்தர்சிங் பிட்டா மீது வெடிகுண்டு வீசிய வழக்கில் சீக்கியர்களுக்கான தனிநாடு கோரும் காலிஸ்தான் விடுதலை முன்னணியைச் சேர்ந்த தேவிந்தர்சிங் புல்லார் ஆகியோரும் மரண தண்டனையை ரத்து செய்யக்கோரி கருணை மனு அளித்துள்ளவர்களில் குறிப்பிடத்தக்கவர்கள்.

கருணை மனுக்களை பரிசீலனை செய்த இந்திய அரச தலைவர் அப்துல் கலாம் இது தொடர்பாக பல்வேறு யோசனைகளை இந்திய அரசுக்கு தெரிவித்துள்ளார்.

அதில் மரண தண்டனையில் இருந்து முருகன்இ பேரறிவாளன்இ சின்ன சாந்தன் ஆகியோருக்கு மன்னிப்பு அளிக்கலாம் என்று யோசனை தெரிவித்துள்ளார்.

இதுபோல் மற்ற மரண தண்டனை கைதிகளுக்கும் மன்னிப்பு வழங்குவது குறித்து பரிசீலனை செய்யுமாறும் கூறியுள்ளார்.

மரண தண்டனை விதிக்கப்பட்டோர் அனுப்பிய கருணை மனுக்கள் இந்திய உள்துறை அமைச்சகம் மூலம் இந்திய அரச தலைவருக்கு அனுப்பி வைக்கப்பட்டன. 8 ஆண்டுகளுக்கும் மேலாக அவை பரிசீலனையில் இருந்து வந்தது.

இந்த மனுக்கள் குறித்து மறுபரிசீலனை செய்யுமாறு கடந்த மாதம் உள்துறை அமைச்சகத்துக்கு இந்திய அரச தலைவர் அப்துல்கலாம் பரிந்துரை செய்து இருந்தார். ஆனால் அனைத்து மனுக்கள் மீதும் பரிசீலனை முடிவுற்ற நிலையில் இந்திய அரசின் முடிவில் மாற்றம் இல்லை என்றும்இ இந்த மனுக்கள் அரச தலைவரின் பொது மன்னிப்புக்கு தகுதியற்றவையாக உள்ளன என்றும் இந்திய அரசு தெரிவித்து விட்டது.

இதையடுத்து உள்துறை அமைச்சர் சிவராஜ் பட்டீலுக்கு அரச தலைவர் அப்துல் கலாம் மீண்டும் கடிதம் எழுதினார்.

அதில்இ "கருணை மனுக்கள் அனைத்தும் நீண்ட நாட்களாக நிலுவையில் உள்ளன. மரண தண்டனை கைதிகளை கருணை அடிப்படையில் பரிசீலனை செய்து அவர்கள் வாழ்வதற்கான முயற்சியில் ஈடுபட வேண்டும். அவர்களுக்கு ஆலோசனை நடத்தி ஆன்மீக வழிகாட்டு நெறிகளை போதிக்க வேண்டும்'' என்று குறிப்பிட்டு இருந்தார்.

மேலும்இ "மரண தண்டனை கைதிகளில் ஒருவருக்கு 75 வயதாகி விட்டது. அவர் விடுதலை செய்யப்பட்டால் எந்தவிதமான குற்றச் செயல்களிலும் ஈடுபடுவதற்கான வாய்ப்பு இல்லை. எனவே இது போன்ற கைதிகளை சுமையாக கருதாமல் மனித சொத்தாக பாவித்து நல்வழிப்படுத்த அரசு முயற்சி மேற்கொள்ள வேண்டும். இவர்கள் வாழ்வின் மீதம் உள்ள நாட்களை தங்கள் குடும்பத்தினருடன் சேர்ந்து வாழ அனுமதிக்க வேண்டும்'' என்றும் குறிப்பிட்டு இருந்தார்.

கருணை மனுவை உள்துறை அமைச்சகம் தகுதியவற்றவை என்று கூறி ஏற்க மறுத்து விட்ட நிலையில் இந்திய அரச தலைவர் கடிதம் எழுதியுள்ளதால் கருணை மனுக்களை இந்திய அரசு நிராகரித்துவிட இனி வாய்ப்பில்லை என்று கூறப்படுகிறது.

இதனால் கருணை மனுவை பரிசீலிப்பது குறித்து ஆலோசித்து வருகிறது

http://www.eelampage.com/?cn=20908
[b]<span style='font-size:25pt;line-height:100%'>
</span>
Reply


Messages In This Thread
[No subject] - by aathipan - 10-17-2005, 10:55 AM
[No subject] - by Vasampu - 10-17-2005, 12:17 PM
[No subject] - by வினித் - 10-17-2005, 12:21 PM
[No subject] - by AJeevan - 10-17-2005, 01:20 PM
[No subject] - by poonai_kuddy - 10-17-2005, 02:51 PM
[No subject] - by kuruvikal - 10-17-2005, 03:44 PM
[No subject] - by Vasampu - 10-17-2005, 05:33 PM
[No subject] - by Mathan - 10-19-2005, 07:23 PM
[No subject] - by Vasampu - 10-19-2005, 07:27 PM
[No subject] - by Mathan - 10-19-2005, 07:33 PM
[No subject] - by AJeevan - 10-27-2005, 01:30 PM

Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)