10-17-2005, 06:38 AM
Vasampu Wrote:அந்த குழந்தைக்கு இருவரும் ஒரே நேரத்தில் பறக்கும் முத்தங்கள் வழங்கினீர்களா???
இல்லை. காதலர்கள் சண்டை போட்டு பேசாமல் அமர்ந்திருந்த போது தூரத்தில் எச்சில் வடிய விளையாடிக்கொண்டிருக்கும் சின்னக் குழந்தையை ரசிக்கிறார்கள். இருவருக்கும் குழந்தைகள் என்றால் பிரியம். அந்தவகையில் தங்கள் கோபம் மறைந்து மறுபடியும் ராசியாகி விடுவதுதான் கவிதை....
காதல் கவிதைக்கு இது மாதிரி விளக்கம் சொல்வதே தவறு..
எப்படி பார்க்கிறீர்களோ அதே அளவிற்கு ரசிக்கலாம்...
.

