Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
'முதலாம் விடிவெள்ளி'
#3
<i>காட்சி - மூன்று</i>

<b>இடம் :</b> யாழ் நகரில் மக்கள் சத்திரம்.
<b>பாத்திரங்கள் :</b> சிற்பி, பெரியவர்.
<b>நேரம் :</b> காலை.

(பெரியவர் தம் காலைச் சிற்றுண்டியை முடித்துவிட்டு, வெளியே முற்றத்தில் வந்து அமர்கின்றார். சிற்பியும் அவரைத் தேடி வந்துவிட்டார்.)


<b>சிற்பி :</b> (மகிழ்ச்சியோடு) ஐயா! பெரியவர் அவர்களே! காலைச் சிற்றுண்டியெல்லாம் முடிந்ததா?

<b>பெரியவர்:</b> ஆமாம்! முடிந்தது! இங்கே இளமுல்லையும், இளமல்லியும் என்னை நன்றாகவே கவனித்துக் கொண்டனர். பெயருக்கேற்ற குணமுள்ள மகளிர் இருவரும் பல்லாண்டு நலமே வாழ வேண்டும்!

<b>சிற்பி :</b> (சிரித்துவிட்டு) பெரியவர் ஆசி நலம் பெறட்டும்! ஆம்; வந்த வேலையை மறந்துவிட்டேன் பார்த்தீர்களா?
இன்று மாலை, உங்கள் நாடு திரும்புவதற்கான பணிகளைச் செய்து முடித்துவிட்டேன்!
மன்னார்த்துறையிலிருந்து கப்பல் மூலம் தங்கள் நாட்டிற்குச் செல்லலாம்! ம்! புறப்படுங்கள்! வெளியே பேருந்து நிலையத்திற்குச் செல்வோம்!

(இருவரும் பேசிக்கொண்டே நடக்கின்றனர்.)

<b>பெரியவர்:</b> சிற்பியாரே! உங்களின் இந்த உதவிக்காகப் பெரிதும் நன்றி நவில்கின்றேன்! உங்கள் அன்பான, கனிவான உபசரிப்பு என்னை மெய் சிலிர்க்க வைத்து விட்டது! ஆமாம்; நான் உங்கள் பெயரைத் தெரிந்து கொள்ளலாமா? என் பெயர் இளங்கோ!

<b>சிற்பி :</b> ஆமாம்; நானும் சொல்ல மறந்துவிட்டேன்! பொறுத்தருள வேண்டும்! என் பெயர் கதிரவன்!

<b>பெரியவர்:</b> நல்ல பெயர்! பெயருக்கேற்றவாறு உங்கள் பணியும் சுறுசுறுப்பாகவே இருக்கின்றது!

<b>சிற்பி :</b> அதிகம் புகழ்கின்றீர்கள்!
(இருவரும் "கொல்" லென்று சிரிக்கின்றனர்)

<b>பெரியவர்:</b> தமிழீழத்து விடுதலை வீரனை நேரில் பார்க்கும் வாய்ப்புக் கிடைத்தமைக்காகப் பெரிதும் மகிழ்கின்றேன்! அவ்வீரனை எப்படிப் பாராட்டுவதென்றே தெரியவில்லை!

<b>சிற்பி :</b> உங்கள் துடிதுடிப்பு எனக்குப் புரிகின்றது!

<b>பெரியவர்:</b> தமிழீழத்தின் விடுதலைப் போராட்ட வீரன். போரில் மட்டுமல்ல, பேச்சிலும் வல்லவர்! தம் கருத்துகளை மிகவும் ஆணித்தரமாக, நிதானத்தோடு, மக்கள் மனத்தில் விதையாகத் தூவிய விதம் மிகவும் பாராட்டுக்குரியது!

<b>சிற்பி :</b> இன்னும் சிலையமைப்பு முழுமைபெறாத காரணத்தால் பிறிதொரு நாளில் அச்சிலையின் திறப்பு விழா நடைபெறும்.

<b>பெரியவர்:</b> (சற்று உணர்ச்சியுடன்) அவசரம் வேண்டாம்! நிதானமாக, சிறப்பாகச் செய்ய வேண்டும்.

கல்லிலே கலைவண்ணம் காணவேண்டாமா, என்ன? (இருவரும் சிரிக்கின்றனர்)

<b>சிற்பி :</b> சிலை திறப்புவிழாவில் நீங்களும் கலந்து கொள்ளலாம். அப்போது உங்கள் நாட்டுப் கடப்பிதழ் பயன்படுத்த வேண்டும்! மறவாதீர்கள்! ஒருவேளை, தமிழகமும், தமிழீழமும் அண்டை நாடுகளுக்கு மட்டும் சென்றுவர சிறப்புக் கடப்பிதழ் வெளியிடக்கூடிய சாத்தியமுண்டு.

<b>பெரியவர்:</b> (குறுக்கிட்டு) மலேசியாவிற்கும், சிங்கப்பூருக்கும் உள்ளதுபோல, என்று சொல்கிறீர்கள்?

<b>சிற்பி :</b> ஆமாம்! ஆமாம்! சரியாகவே தெரிந்து வைத்துள்ளீர்கள்! அழைப்பு உங்களைத் தேடி வரும். அவசியம் கலந்துகொள்ள வேண்டும்!

<b>பெரியவர்:</b> ஆகட்டும் நண்பரே! வல்லவன், நல்லவன் சிலை திறப்பு விழா! நானில்லாமலா?

(இருவரும் வாய்விட்டுச் சிரிக்கின்றனர்)
பல்லாயிரக்கணக்கான மக்களோடு நானும் கலந்து கொள்வேன்!

<b>சிற்பி :</b> 'புதியதோர் உலகம் செய்வோம்! - கெட்ட போரிடும் உலகத்தை வேரோடு சாய்ப்போம்!" என்று எங்கள் தலைவர் மிகவும் உணர்ச்சி மேலிட்டால் சொன்ன வரிகளைக் கேட்டீர்களா?

<b>பெரியவர்:</b> அதுமட்டுமல்ல! மிகவும் பெருந்தன்மையோடு
"இன்னாசெய் தாரை ஒறுத்தல் அவர்நாண நன்னயம் செய்து விடல்" - என்று சொல்லி உலகோர் மனத்தில் இடம் பிடித்தாரே அதை இன்னும் என்னால் மறக்கமுடியவில்லை!

<b>சிற்பி:</b> ஒன்றுபட்ட தமிழ் மக்களாக வாழ்வோம்! சரி நேரமாகிறது! சென்று வாருங்கள்! நன்றி!

___________x___________

<i>குறிப்பு:</i>
(கதையும், கதை மாந்தர்களும் கற்பனை)
(ஒருவேளை, நாளை உண்மையாகலாம்.)



ஆக்கியவர் : பெ.மு.இளம்வழுதி
நன்றி செம்பருத்தி.


----- -----
Reply


Messages In This Thread
[No subject] - by கரிகாலன் - 10-17-2005, 02:03 AM
[No subject] - by கரிகாலன் - 10-17-2005, 02:08 AM
[No subject] - by கரிகாலன் - 10-17-2005, 02:32 AM
[No subject] - by RaMa - 10-17-2005, 04:52 AM
[No subject] - by கரிகாலன் - 10-17-2005, 05:14 AM
[No subject] - by கரிகாலன் - 10-17-2005, 05:20 AM
[No subject] - by RaMa - 10-17-2005, 06:08 AM
[No subject] - by vasisutha - 10-17-2005, 12:44 PM
[No subject] - by poonai_kuddy - 10-17-2005, 03:04 PM
[No subject] - by Rasikai - 10-17-2005, 04:42 PM
[No subject] - by sabi - 10-17-2005, 08:42 PM
[No subject] - by adsharan - 10-17-2005, 10:32 PM
[No subject] - by கீதா - 10-18-2005, 08:23 PM
[No subject] - by கந்தப்பு - 04-21-2006, 06:26 AM

Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)