10-17-2005, 02:03 AM
<i>காட்சி இரண்டு</i>
<b>இடம் :</b> யாழ் நகரத்து சமுதாய வீதி!
மாபெரும் விழா மேடை!
<b>பாத்திரங்கள் :</b> வெற்றித்திருமகன் பிரபாகரன், மாவண்கிள்ளி, கரிகாலன், இளமாறன், நெடுஞ்சேரலாதன், இளமதி போன்ற முக்கிய தலைவர்கள்.
<b>நேரம் :</b> மாலை ஐந்து மணி.
(மேடையின் முன்புறம் மக்கள் கடல் அலையென திரண்டு கூடியுள்ளனர்.)
(ஒலிபெருக்கி அறிவிப்பு! 'இப்பொழுது வெற்றித்திருமகன் பிரபாகரன் அவர்கள் பேசுவார்கள்'.)
<b>பிரபாகரன்:</b> எங்கள் வாழ்வும் எங்கள் வளமும் மங்காத தமிழென்று சங்கே முழங்கு! எங்கள் பகைவர் எங்கோ மறைந்தார், இங்குள்ள தமிழர்கள் ஒன்றாதல் கண்டே!
எம் அன்பிற்கும், மரியாதைக்குமுரிய தமிழீழத்துத் தமிழ்ப் பெருங்குடி மக்களே!
(நா-தழுதழுக்கிறது - கண்களில் கண்ணீர் குளம் கட்டுகிறது. சற்றே அமைதி) எல்லோருக்கும் எம் இனிய வணக்கம்!
(கை கூப்பிச் சொல்கின்றார் - கூட்டத்தில் ஒரே அமைதி)
இன்று நாம் சுதந்திரத் தமிழீழத்தின் மக்கள்!
இப்போது நாம் மகிழ்ச்சியில் திளைத்திருந்தாலும், ஒரு புறம் வேதனையையும் தாங்கிக்கொண்டு இங்கே நிற்கின்றோம்!
ஆயிரங்கணக்கான வீரர்கள் , வீரமகளிர் வடித்திட்ட குருதியின் மேல்தான் இந்தச் சுதந்திரத் தமிழீழம் அமைக்கப்பட்டுள்ளது! என்பதை நினைவில் கொண்டு அவர்களுக்காக இரண்டு நிமிடங்கள் மௌனப் பிராத்தனை செய்வோம்!
(எல்லோரும் அமைதியாக எழுந்து நிற்கின்றனர்! , இரண்டு நிமிடங்கள் கழிந்து)
நன்றி! நன்றி!
'எம் இனிய தமிழ்மக்களே!
நாம் பட்ட துன்பங்கள் கொஞ்சநஞ்சமல்ல! எதிரியின் கொடுமைகளுக்கு ஆளான தாய்மார்கள்! மகனை, மகளை வீரப்போருக்கனுப்பி இழந்துவிட்ட பெற்றோர்கள், பசியால், பட்டினியால் மடிந்தவர்கள், எதிரியின் வல்லுறவுக்கு ஆளாகி, மானத்தைக் காக்க மாண்டு போனவர்கள், - எதிரியின் சிறைச் சாலைகளில் வீரர்கள் பட்ட கொடுமைகள் பச்சிளங் குழந்தைகளின் கொலை! நாடிழந்து, வீடிழந்து, உறவிழந்து புலம் பெயர்ந்துபோன மக்கள் இப்படிச் சொல்லொண்ணாத் துன்பங்களை நம் மக்கள் அனுபவித்து விட்டனர்.
இவ்வளவுக்கும் எந்தக் கெடுதலும் செய்யவில்லை.
சிறுபான்மை மக்களென நம்மை வாட்டி வதைத்ததோடு, உரிமைகளையும் பறித்துக்கொண்டனர். பிறந்த மண்ணிலே சொந்தத் தாயகத்தில் அழுத்தப்பெற்ற மக்களாக ஆக்கப்பட்டோம்.
ஒரு காலத்தில் ஆண்டிருந்த மக்கள் மீண்டும் தங்கள் தாயகத்தை ஆள நினைப்பதில் என்ன தவறு? உரிமைகளை நிலைநாட்டுவதில் என்ன தவறு?
<b>கூட்டத்தில் ஒருவர் :</b> தவறில்லை! தலைவா! தவறில்லை! கடந்த காலக் கசப்பினை மறப்போம்! இனி நமது சுதந்திரத் தமிழீழத்தைக் கட்டிக் காப்பதோடு, சீர்கேடுகளையெல்லாம் களைந்து புதுமைத் தமிழீழத்தைச் அமைப்போம்!
மக்கள் கடுமையாக உழைக்க வேண்டும்! இழந்தவற்றை மீட்போம்; அவற்றைச் செப்பனிடுவோம்!
இன்னும் நாட்டின் சட்டதிட்டங்கள் வரையப்படவில்லை. சட்டதிட்டங்கள் முழுமை பெற்றவுடன், பொதுத்தேர்தல் வழி மக்கள் நாடாளுமன்றப் பேராளர்களைத் தேர்ந்தெடுக்கலாம்! பின்னர், அமைச்சரவை அமைக்கப் பெற்று, நாட்டு நிருவாகம் முறையாகச் செயல்படும், தமிழ் ஆட்சிமொழியாகும்; ஆங்கிலம் தொடர்பு மொழியாகவும் இயங்கும்.
அதுவரை, நாட்டின் மூத்த அறிஞர்களைக் கொண்டு ஐவர் அடங்கிய குழு நாட்டின் நிருவாகத்தை நடத்தி செல்லும். மக்கள் யாவரும் முழுமையாக முழுமையான ஆதரவை வழங்கி காக்க வேண்டும்!
மக்கள் எவ்வித அச்சமுமின்றி நிம்மதியாக அன்றாட வாழ்க்கையைத் தொடரலாம்! எல்லைப் பகுதி, முக்கிய இடங்களில் எம் தலைமையின் கீழ் போர் வீரர்கள் சேவையில் ஈடுபட்டு, காத்து வருவர்!
நமது நாட்டின் தேசியக்கொடி புலிச்சின்னம் பொறித்த சிவப்புநிறக்கொடி. அதோ! அந்தக் கம்பத்தில் மிகவும் கம்பீரமாகப் பறக்கிறது. தாய் மணிக்கொடியை வணங்கிக் காப்போம்! நன்றி! நன்றி! வாழ்க! தமிழீழம்!
<b>அறிவிப்பாளர் :</b> (ஒலிபெருக்கி வழி) அடுத்து மூத்த அறிஞர்களில் ஒருவரான உயர்திரு. கரிகாலன் அவர்கள் பேசுவார்!
<b>கரிகாலன் :</b> எம் அன்பு சுதந்திர தமிழீழத்துத் தமிழ் மக்களே! வணக்கம்.
இங்கே அமைக்கப்பெற்ற ஐவர் கொண்ட குழுவில் எனக்குப் பொதுத்துறை வழங்கப்பட்டுள்ளது.
பொதுவாக மக்களின் பிரச்சினை, தொடர்பு வசதிகள், தண்ணீர், மின்சாரம் பொதுப் போக்குவரத்து முதலியவற்றைக் கவனித்துக்கொள்வேன்!
குறிப்பாகச் சுதந்திரத் தமிழீழத்திற்கென்று ஒரு புதிய தலைநகரம் உருவாக்கப்படவேண்டும். வளர்ச்சி அடைந்த நாடுகளில் உள்ளது போல, சகல நவீன வசதிகளையும், விசாலமான சாலைகளையும், நவீன வீடுகளையும் அந்நகரம் கொண்டிருக்கும்!
இயற்கையோடு கூடிய பூங்கா நகராக, எழில் மிகுந்த நகரமாக அமைக்கப்படும். மக்களுக்கு சுமையில்லாத வகையில், உறவு நாடுகளிலிருந்து பொருளுதவிப் பெற்று, அந்நகரம் அமைக்கப்படும். அதுவே நம் தாயகத்தின் நினைவுச்சின்னம்! வணக்கம்!
<b>அறிவிப்பாளர் :</b> தொடர்ந்து கவிஞர் மாவண்கிள்ளி அவர்கள் உரையாற்றுவார்கள்!
<b>மாவன்கிள்ளி :</b> மதிப்பிற்குரிய தமிழ்க்குடிமக்களே!
வணக்கம். சுதந்திரத் தமிழீழத்தில் எனக்கு வழங்கப்பட்டிருக்கும் பொறுப்பு கல்வித்துறையாகும்!
இத்துறையே ஒரு நாட்டின் கண்களெனப் போற்றப்படும். நவீன காலத்திற்கேற்பப் புதிய பாடத்திட்டங்கள் தயாரிக்கப்படும். சைவமும்
தமிழும் தழைத்தோங்கிய நமது நாட்டின் கல்வியில் மீண்டும் இவை
இடம்பெறுவதோடு, காலத்திற்கேற்ப அறிவியல், பொறியியல், மருத்துவ இயல், கணிதவியல், ஆகியவற்றோடு கணினி தொழில் நுட்பத்துறை, குறிப்பாகத் தொழிலியற்கல்வி போன்றவை இடம் பெறும்; தமிழே ஆட்சிமொழி!
தாய்த் தமிழீத்திற்காகப் போராடி உயிர்கொடுத்த வீரர்களின் வரலாறும் தவறாமல் பாடநூல்களில் இடம் பெறும், மக்கள் வழங்குகின்ற கருத்துகளையும் மனதிற் கொண்டு கல்வித்துறை இயங்கும் நன்றி!
சுதந்திரத் தமிழீழம் வாழ்க!
<b>அறிவிப்பாளர் :</b> இதோ! வருகிறார் உயர்திரு இளமாறன் அவர்கள்.
<b>இளமாறன் :</b> என் அன்புக்குரிய பழங்குடித் தமிழ்ப்பெரு மக்களே! வணக்கம்.
வேளாண்மைத்துறையும், மக்கள் நலத்துறையும் எமக்களிக்கப்பட்டவை. மக்கள் தொடர்ந்து வேளாண்மையில் ஈடுபட வேண்டும். போதிய உதவிகளை இத்துறை வழங்கும்.
தானிய உற்பத்தியில் நமது நாடு தன்னிறைவு பெற்றால், யாரிடமும் உணவிற்காகக் கையேந்தும் நிலை வராது. மேலும் நவீன தொழில் நுட்பங்கள் பயன்படுத்தப்பட வேண்டும்.
மக்கள் உடல் நலத்துறை எல்லா விதமான உதவிகளையும் வழங்கி நோயிலிருந்து விடுபட்டு வாழ உதவி செய்யும், குழந்தைகள் நலனில் அதிக அக்கறை செலுத்த திட்டமிட்டுள்ளோம்,
சுதந்திர மண்ணின் எதிர்காலத் தலைவர்கள் அவர்கள் தாமே! குழந்தை பிறப்பை ஊக்கப்படுத்தி உதவி நிதிகள்
வழங்குவோம்! நன்றி! நன்றி!
<b>அறிவிப்பாளர் :</b> ஏனையத் துறைத்தலைவர்கள் தங்கள் பொறுப்பின் விளக்கங்களைத் தமிழீழத்துச் சுதந்திர வானொலியில் வெளியிடுவார்கள்! இப்போது தலைவர் பிரபாகரன் அவர்கள்...... மீண்டும் பேசுவார்!
<b>பிரபாகரன் :</b> (எழுந்து மேடைக்கு முன்னால் வந்து - தம் கைகளை மேலே உயர்த்தி - உரத்த குரலில்)
தமிழீழம் வாழ்க!
<b>மக்கள் கூட்டம் :</b> தமிழீழம் வாழ்க! வாழ்க!
தமிழ் மக்கள் வாழ்க!
<b>மக்கள் கூட்டம் :</b> தமிழ் மக்கள் வாழ்க! வாழ்க!
<b>பிரபாகரன் :</b>இதுகாறும் சீர்குலைந்து வாழ்க்கையில் மனம் வெதும்பிப்போய் எப்படியோ வாழ்ந்து கொண்டிருந்த மக்கள், இப்போது மகிழ்ச்சியாய் இருப்பதைக் காண்கிறேன்; இது தொடர வேண்டும்!
விடுதலைப் போராட்ட உணர்வுகள் மதிக்கப்பட, போற்றப்படவேண்டியவை!
எம் மக்களுக்கு ஒன்றைச் சொல்வேன்: நாளை விடியலில் கிழக்கே தோன்றும் விடிவெள்ளியே சுதந்திரத் தமிழீழத்தின் முதலாம் விடிவெள்ளி! அது தோன்றும்போது நமக்கும் விடிவு பிறந்து விட்டது அல்லவா? நாளைய விடியலில் அந்த முதல் விடிவெள்ளியைக் காணத் தவறாதீர்கள்!
<b>மக்கள் கூட்டம் :</b> (மகிழ்ச்சி பொங்க) ஆகட்டும் தலைவா!
<b>பிரபாகரன் :</b> உங்களுக்கு எம் சிந்தனை விருந்தை அளித்துள்ளேன்! ஆய்ந்தறிந்து
தெரிந்து கொள்வது மக்களைப் பொறுத்தது. விடிவெள்ளி முளைக்கும்போது நம் மனத்தும் மறுமலர்ச்சி எண்ணங்கள் உதயமாக வேண்டும்; அதுவே நம் வெற்றியின் அடித்தளமாக அமைந்து விடும். அடக்குமுறையால் மக்களின் உணர்வை அடக்கி, ஒடுக்க முடியாது என்பதை உலகோர் உணரட்டும்! பறவைகளுக்குச் சுதந்திரமாகப் பறந்து திரிந்து வாழ்கின்ற உரிமை இருக்கும்போது, அது ஏன் மக்களுக்கு இருக்கக் கூடாது? சிந்தியுங்கள்! வணக்கம்! வாழ்க!

----- -----