Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
கோழிமுட்டை சைவமா?அசைவமா?
#2
முட்டை சைவமா? அசைமா?
கோழிமுட்டை சைவமா? அசைமா? என்ற சர்ச்சை நீண்ட நெடுங்காலமாக இருந்து வருகிறது. உயிருள்ள கோழியின் வயிற்றில் இருந்து வருவதால் அசைவம் என்று சிலர் சொல்கின்றனர்.

சைவமாக இருந்து கொண்டு முட்டை சாப்பிடும் சிலர் அப்படியானால் பாலும் அசைவமாகத்தானே இருக்க வேண்டும். அதுவும் உயிருள்ள மாட்டின் மடியிலிருந்து தானே கறக்கப்படுகிறது. அதை யாரும் அசைவம் என்று சொல்வதில்லையே! அதைப்போல் தான் முட்டையும் சைவமே! என்று சொல்லி வந்தனர்.

இந்த சர்ச்சை வழக்காக மாறி சட்டீஸ்கர் மாநில உயர்நீதிமன்றத்தில் விசாரிக்கப்பட்டு வந்தது. இதனை விசாரித்த ஆனந்த குமார் பட்நாயக், திலிப் ராங் சாகிப் தேஷ்முக் ஆகியோரைக் கொண்ட டிவிசன் பெஞ்ச் "'முட்டை அசைவமே"' என்று தீர்ப்பளித்து, பொது இடங்களில் முட்டை விற்கக் கூடாது. இறைச்சி விற்பதற்கு லைசென்ஸ் கொடுப்பது போல் முட்டை விற்பதற்கும் உரிய முறையில் லைசென்ஸ் வழங்கப்பட வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளது.

பொது இடங்களில் பீடி விற்கலாம், சிகரெட் விற்கலாம், பான்பராக் விற்கலாம், மூக்குப் பொடி விற்கலாம். என் மது வகைகளைக் கூட விற்கலாம். ஆனால், முட்டை மட்டும் விற்கக் கூடாது. முட்டை மனித உடலுக்குத் நல்லது. ஆனால், புகையிலை பொருட்களும், மது வகைகளும் மனித உடலுக்கு தீங்கானது.

இப்படி மனித உடலுக்கு தீங்கு விளைவிக்கும் பொருட்களை பொது ஆடங்களில் தாராளமாக விற்க அனுமதித்து விட்டு முட்டைக்கு மட்டும் கட்டுப்பாடு விதிப்பதை விநோதம் என்று சொல்வதா? அல்லது விபரீதம் என்று சொல்வதா?

புலியின் வயிறு சைவத்தை ஏற்றுக் கொள்ளாது. முயலின் வயிறு அசைவத்தை ஏற்றுக் கொள்ளாது. ஆனால் மனிதனின் வயிறு இரண்டையும் ஏற்றுக் கொள்ளும். சைவத்தையும், அசைவத்தையும் ஏற்றுக் கொள்ளும் வகையில் மனிதனின் வயிற்றை இறைவன் இயற்கையாய் படைத்திருக்க இயற்கைக்கு மாற்றமாய் முட்டையை உதாசீனப்படுத்துவது இறைவனின் அருளை உதாசீனப்படுத்துவதாகும் என்பதை சம்பந்தப்பட்டவர்கள் உணர வேண்டும்.

அதுவும் இதை பொது இடங்களில் வைத்து விற்கக் கூடாது என்று சொல்பவர்கள் கண்டிப்பாக சிந்தித்தே ஆக வேண்டும்.

நன்றி: எப்படி முட்டை "சைவமாகும்"?

பண்ணை அறிவியல் துறையின் டாக்டர்.அஜீத் ரானடே அவர்கள் பண்ணைக் கோழி முட்டைகள் நிச்சயம் சைவம் என்றும் நாட்டுக் கோழி முட்டைகள் அசைவமாக இருக்க வாய்ப்புள்ளது என்கிறார்.மேலும் சொல்கிறார், "ஒரு பெட்டைக் கோழி முட்டையிட சேவலின் துணை தேவையில்லை. குறிப்பிட்ட பருவத்திற்குப் பின் சேவல் துணையின்றி முட்டை போட முடியும். இவ்வகையான முட்டைகள் சைவம். இவை உயிரற்ற முட்டைகள் (Non-fertile eggs.) என அறியப்படுகின்றன.இவை பண்ணைக் கோழிகளில் (English Hens) மிகப்பொதுவானவை.

தேசிய முட்டை ஒருங்கிணைப்புக் கமிட்டியின் சேர்மன் M.B.தேசாய் அவர்களுக்ம் இதை ஆமோதிக்கிறார். மேலும் வர்த்தகரீதியில் கோழிப்பண்ணைகள் இவற்றை அதிகம் உற்பத்தி செய்ய வேண்டும் என்கிறார்.அண்ணல் காந்தி அடிகளும் முட்டையை சைவம் என ஏற்றுக் கொண்டுள்ளார். " சுத்தமான பால் சைவமாக இருக்கும் போது நிச்சயம் முட்டையும் சைவம்தான் என்றார்.

என்ன வேறுபாடு?

நாட்டுக் கோழி பிறந்து 22-28 நாளிலிருந்து முட்டையிடும். இவை சேவலுடன் இணைந்த பிறகே முட்டையிடுகின்றன. இத்தகைய முட்டையின் வளர்ச்சியானது சேவலுன் இணைந்த மூன்றாவது நாள் முதல் தொடங்குகிறது. நாட்டுக் கோழி முட்டையை 37 டிகிரி செல்சியஸ் வெப்ப நிலையில் இருபத்து ஒரு நாட்களுக்கு வைத்தால் கோழிக்குஞ்சு உருவாகி விடும் இத்தகைய கருவுள்ள முட்டைகள் அசைவம். ஆனால் பண்ணைக் கோழிகள் பிறந்த 18 நாளிலிருந்தே முட்டையிடத் தொடங்கி விடுகின்றன. இதனால் இவை உயிரற்ற முட்டைகளாதலால் சைவம் என்கிறார். டாக்டர்.ராணடே.

முட்டையின் சிறப்புகள்

ஒரு 100 கிராம் எடையுள்ள முட்டையில் புரோட்டீன் 12.04 கிராம், கொழுப்பு 11.15 கிராம் மற்றும் 158 கலோரி தாதுச்சத்து மற்றும் கார்போஹைடிரேட் 1.2 கிராம். மேலும் 74.57 அளவுக்கு உயர் வளப்புத்தன்மையானது.

மேலும் டாக்டர்.ராணடே "இதனால்தான் மருத்துவர்கள் முட்டையை சிறந்த ஆகாரமாக பரிந்துரைகின்றனர்." என்கிறார்.

மருத்துவக் குறிப்பு

டாக்டர்.ராணடே, தொடர்ந்து முட்டை சாப்பிடுவதால் உடலின் கொழுப்பின் அளவு அதிகரிக்கும் என்ற கூற்றை ஆதாரங்களுடன் மறுத்துள்ளார். உடலுக்குத் தேவையான தாதுச்சத்தையும் விட்டமின்-சி தவிர்த்த அனனத்து விட்டமின்களையும் முட்டை வழங்குகிறது" என்கிறார்.

சைவமுட்டையை எப்படி அறிவது?

ஒரு முட்டையை மின்சார பல்பின் அருகில் வைத்துப்பார்த்தால் முட்டையின் உள்ளே வெள்ளைக் கோடுகள் படலமாக தெரிந்தால் அது அசைவம். தெரியாவிட்டால் சைவம். நன்றி: மிட்டே

...உண்ணுங்கள், பருகுங்கள். எனினும் வீண் விரயம் செய்யாதீர்கள்... (குர்ஆன்7:31)

நன்று>எதிரொலி
.

.
Reply


Messages In This Thread
கோழிமுட்டை சைவமா?அசைவமா? - by Birundan - 10-16-2005, 09:03 AM
[No subject] - by RaMa - 10-16-2005, 05:34 PM
[No subject] - by vasisutha - 10-16-2005, 05:48 PM
[No subject] - by vasisutha - 10-16-2005, 05:52 PM
[No subject] - by sabi - 10-16-2005, 10:15 PM
[No subject] - by RaMa - 10-17-2005, 03:57 AM

Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)