10-15-2005, 10:46 PM
நா. பார்த்தசாரதியின் நாவல்களை யாராவது படித்ததுண்டா? இலட்சியக் கதாபாத்திரங்கள் தூக்கலாக இருக்கும், ஆனால் மனதில் ஒட்டாது. அந்நாவல்களில் வரும் களங்களும் இலட்சிய மாந்தர்களும் எங்காவது உள்ளார்களா என்று தேடிப் பார்த்ததுண்டு. கிடையாது என்றே நினைக்கின்றேன்.
எல்லோருக்குள்ளும் ஒரு நல்லவனும் ஒரு ஊத்தையனும் இருக்கின்றனர் என்று எஸ்.பொ எழுதியது உண்மையென்று கருதுபவன் நான். நல்லவன் மட்டும்தான் தன்னுள் இருக்கின்றான் என்று சொல்லுபவன் பொய் சொல்லுகின்றான். போலியாக வாழ்ந்த்து, போலியாக எழுதி போலி உலகத்தை உருவாக்க முயல்கின்றான்.
கலைகளில் யதார்த்தத்தைக் காட்டவேண்டும் என்பதற்காக, காலைக் கடன் கழிப்பதைக் காட்டுவதில்லை, விபரித்து எழுதுவதில்லை. எங்கும் ஒரு எல்லை உண்டு, அந்த எல்லை எதுவென்பதைப் படைப்பாளியே தீர்மானிக்கின்றான்; மற்றவர்களுக்காக தன்னுடைய கருத்துக்களை, வாசகங்களை படைப்பாளி மாற்றினால் அக்கணமே அவன் வியாபாரியாகின்றான்.

<b> . .</b>