Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
யாழில் தொடங்கியிருக்கும் படுகொலைகள்
#6
வடக்கு,கிழக்கு வன்முறைச் சம்பவங்களின் பின்னணியில் அரச புலனாய்வுத் துறையும், தமிழ் ஆயுதக் குழுக்களும்

இயன் மார்ட்டினிடம் தமிழ்க் கூட்டமைப்பு தெரிவிப்பு

வடக்கு, கிழக்கு பிரதேசங்களில் அண்மைய காலங்களில் தொடர்ச்சியாக இடம்பெற்றுவரும் படுகொலைச் சம்பவங்களும் வன்முறைகளும் மிகவும் கவலையளிப்பதாக தெரிவித்துள்ள சர்வதேச மன்னிப்பு சபையின் முன்னாள் தலைவரும் ஐ.நா.வின் மனித உரிமை விவகாரங்களுக்கான ஆலோசகருமான இயன் மார்ட்டின், இத்தகைய சம்பவங்களின் பின்னணியில் செயற்படும் சூத்திரதாரிங்களை கண்டறிய ஐக்கிய நாடுகள் சபையின் உதவி தேவைப்படின், அது குறித்து ஆராய தாம் தயாராகவுள்ளதாக தமிழ்த் தேசிய கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர்களிடம் தெரிவித்துள்ளார்.

தமிழ்த் தேசிய கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர்களுக்கும் இயன் மார்ட்டினுக்குமிடையிலான சந்திப்பு நேற்று வெள்ளிக்கிழமை மாலை கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலத்தின் கொழும்பு கொள்ளுப்பிட்டி இல்லத்தில் நடைபெற்றது.

இச்சம்பவத்தில் தமிழ்க் கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர்களான இரா.சம்பந்தன், ஜோசப் பரராஜசிங்கம், சுரேஷ் பிரேமச்சந்திரன், கஜேந்திரகுமார் பொன்னம்பலம், பத்மினி சிதம்பரநாதன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

இச்சந்திப்பின் போது கலந்து கொண்ட இயன் மார்ட்டின் மேலும் தெரிவிக்கையில் கூறியதாவது;

மட்டக்களப்பு மற்றும் கிளிநொச்சி பிரதேசங்களுக்கு நேரடியாகச் சென்று அங்குள்ள நிலைமைகளை பார்வையிட்டேன். வட, கிழக்கில் தொடரும் வன்முறைச் சம்பவங்களும் படுகொலைகளும் மிகவும் கவலையளிப்பதாகவேயுள்ளன.

தொடர்ச்சியாக இடம்பெற்றுவரும் இவ்வாறான வன்முறைச் சம்பவங்கள் அமைதிச் சூழலை சீரழித்து சமாதான முயற்சிகளுக்கு பெரும் பாதகமாக அமைந்துவிடலாம். எனவே இதன் சூத்திரதாரிகளை இனங்காண்பதற்கு ஐக்கிய நாடுகள் சபையின் புலனாய்வுப் பிரிவின் உதவிகள் தேவையெனில், அது குறித்து ஆராய நாம் தயாராகவுள்ளோம்.

எந்தத் தரப்பினரும் வன்முறைகளை கைவிட்டு அமைதிச் சூழலை தொடர்ந்து பேண உதவ வேண்டுமென்பதே எனது விருப்பமாகும் என்றும் இயன் மார்ட்டின் தெரிவித்துள்ளார்.

இதேவேளை, தற்போதைய நிலைமைகள் தொடர்பாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பிரதிநிதிகள் இயன் மார்ட்டினுக்கு விளக்கமளிக்கையில் கூறியதாவது;

தமிழ் தாயகப் பிரதேசமான வடக்கு, கிழக்கில் போர் நிறுத்த உடன்படிக்கையை மீறும் வகையில் தென்னிலங்கை அரசு மறைமுகமான நிழல் யுத்தமொன்றை நடத்திக் கொண்டிருக்கிறது.

கிழக்கில் தொடர்ச்சியாக இடம்பெற்றுவரும் வன்முறைச் சம்பவங்களின் பின்னணியில் அரச உளவுப் பிரிவினரும் அவர்களுடன் இணைந்து செயற்படும் தமிழ்க் குழுக்கள், கருணா குழுவினர் செயற்படுகின்றனர்.

இவ்வாறே வடக்கில் குறிப்பாக யாழ்ப்பாணத்தில் அண்மைய காலங்களில் இடம்பெற்றுவரும் வன்முறைச் சம்பவங்களுடன் ஆளும் கட்சியில் அங்கம் வகிக்கும் ஈழமக்கள் ஜனநாயகக் கட்சி (ஈ.பி.டி.பி.)யும் அரச புலனாய்வுத் துறையினரும் நேரடியாக சம்பந்தப்பட்டுள்ளனர். அத்துடன், வெளிவிவகார அமைச்சர் லக்ஷ்மன் கதிர்காமரின் கொலைச் சம்பவத்தையடுத்து மீண்டும் அமுலுக்கு கொண்டு வரப்பட்டுள்ள அவசரகாலச் சட்டம் தமிழ் மக்களை பாதுகாப்புப் படையினரின் கெடுபிடிக்கும், கைது, காணாமல் போதல் போன்ற சம்பவங்களுக்கும் வழிவகுத்துள்ளது.

கடந்த காலங்களில் அவசர காலச் சட்டம் நடைமுறையிலிருந்த வேளையிலேயே நூற்றுக்கணக்கான தமிழ் மக்கள் வகை தொகையின்றி கைது செய்யப்பட்டு காணாமலும் போயுள்ளனர். அவசர காலச் சட்டம் மீண்டும் அமுலுக்கு கொண்டு வரப்பட்டதையடுத்து தலைநகர் கொழும்பில் தமிழ் இளைஞர்கள் பலர் கைது செய்யப்பட்டு புறநகர்ப்பகுதிகளில் படுகொலை செய்யப்பட்ட நிலையில் மீட்கப்பட்டுள்ளனர்.

எனவே, அரச படையினரின் துணையுடன் மேற்கொள்ளப்பட்டு வரும் இவ்வாறான மனித உரிமை மீறல் சம்பவங்களை கட்டுப்படுத்த சர்வதேச மனித உரிமைகள் அமைப்பு உடன் நடவடிக்கையெடுக்க வேண்டும்.

அத்துடன், வடக்கு, கிழக்கில் தொடரும் வன்முறைச் சம்பவங்களை உடன் கட்டுப்படுத்தி போர் நிறுத்த உடன்படிக்கையை தொடர்ந்து பேண வேண்டுமெனில் தடைப்பட்டுள்ள சமாதான முயற்சிகளை உடன் ஆரம்பிக்க வேண்டும். இதற்கு சர்வதேச சமூகத்தின் ஒத்துழைப்பு மிகவும் அவசியம் என்றும் தமிழ்க் கூட்டமைப்பு பிரதிநிதிகள் தெரிவித்துள்ளனர்.

http://www.thinakural.com/New%20web%20site...Important-2.htm
" "


Messages In This Thread
[No subject] - by cannon - 10-14-2005, 10:28 PM
[No subject] - by cannon - 10-14-2005, 10:32 PM
[No subject] - by கறுணா - 10-14-2005, 10:56 PM
[No subject] - by cannon - 10-15-2005, 04:40 PM
[No subject] - by cannon - 10-15-2005, 04:45 PM
[No subject] - by cannon - 10-17-2005, 08:51 PM
[No subject] - by Vasampu - 10-17-2005, 11:56 PM
[No subject] - by cannon - 10-18-2005, 06:20 AM
[No subject] - by vasanthan - 10-18-2005, 01:23 PM
[No subject] - by Vasampu - 10-18-2005, 11:18 PM
[No subject] - by cannon - 10-19-2005, 06:15 AM
[No subject] - by Vasampu - 10-19-2005, 09:54 AM
[No subject] - by vasanthan - 10-19-2005, 02:27 PM
[No subject] - by தூயவன் - 10-19-2005, 02:50 PM
[No subject] - by Danklas - 10-19-2005, 02:59 PM
[No subject] - by Vasampu - 10-19-2005, 04:40 PM
[No subject] - by cannon - 10-19-2005, 05:36 PM
[No subject] - by Vasampu - 10-19-2005, 06:47 PM
[No subject] - by இராவணன் - 10-19-2005, 06:50 PM

Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)