Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
யாழில் தொடங்கியிருக்கும் படுகொலைகள்
#5
அரச படைகளின் கட்டுப்பாட்டில் உள்ள பிரதேசங் களில் இருந்து விடுதலைப் புலிகளின் அரசியல் போராளி கள் விலகிக் கொண்டதை அடுத்து, யாழ்.குடாநாட்டில் தற் போது திடீரென அதிகரித்திருக்கும் வன்முறைகளும், கொலைகளும், அந்த வன்முறைகளைத் தனது பிரசாரத் துக்கு அரசுத் தரப்பு பயன்படுத்தும் நோக்கும் சில ஊகங் களை ஏற்படுத்துகின்றன. அரசுக் கட்டுப்பாட்டுப் பிரதேசத்தில் இடம்பெற்ற இரண்டு கல்லூரி அதிபர்களின் படுகொலைகளுக்குமே புலிகள் மீது குற்றம் சுமத்தியுள்ள அரசு, சிறுவர்களைப் படைக்குச் சேர்க்கும் புலிகளின் முயற் சிகளுக்கு இந்த இரு அதிபர்களும் தடையாக இருந்தார்கள் என்ற காரணத்தினாலேயே இந்த இருவரையும் புலிகளே "போட்டுத் தள்ளினார்கள்' என்று காரண காரியங்களோடு பெரும் பிரசாரத்தை சர்வதேச ரீதியில் முன்னெடுத்திருக் கின்றது.
இயல்பாகவே கல்வித்துறையின்பால் கரிசனையும், ஈடுபாடும் கொண்டவர்கள் தமிழர்கள். கல்வித்துறை மீது தமி ழர்களுக்கு உள்ள பற்றை சாதகமாகப் பயன்படுத்த எத்த னிக்கும் அரச இயந்திரம், இந்த இருகொலைகளையும் கல்வித்துறைக்கு எதிராகப் புலிகள் புரிந்த பெருஞ்செயல் எனக்காட்டி, அதன் மூலம் தமிழ் சமூகத்தை குறிப்பாகப் புலம்பெயர்ந்த நாடுகளில் வசிக்கின்ற கல்வித்துறையின் பால் மதிப்புக்கொண்ட ஈழத் தமிழ்ச் சமுதாயத்தை புலி களுக்கு எதிராகத் திருப்பிவிடும் கைங்கரியத்தை கனகச்சிதமாகச் செய்துகொண்டிருக்கின்றது.
அதிபர்கள் கொலைக்கு, சிறுவர்களை ஆட்சேர்ப்புக்கு விடாமல் அவர்களைத் தடுத்ததே காரணம் என்ற பாணி யில் "மொட்டைத் தலைக்கும் முழங்காலுக்கும் முடிச்சுப் போடுவது போல' அரசுத் தரப்பு செய்யும் பொய்ப் பிர சாரத்துக்கு புலம்பெயர்ந்த மக்களும் சர்வதேச சமூகமும் எடுபட்டுவிடக்கூடாது.
ஜனாதிபதித் தேர்தலை ஒட்டி தென்னிலங்கை இரண்டு அணிகளாகப் பிரிந்து நிற்கின்றது. பௌத்த, சிங்கள மேலாண்மைவாதக் கருத்தியலில் புதைந்த பேரினவாதிகள் ஒருபுறம். தமிழர்களுக்கு நியாயம்செய்யப்பட வேண்டும், பேச்சுமூலம் இனப்பிரச்சினைக்குத் தீர்வுகாணப்பட வேண் டும் என்றெல்லாம் சிந்திக்கும் ஒரு நடுநிலைப் போக்கு டைய மிதவாதச் சிங்களவர்கள் மறுபுறம்.
இந்த இரு தரப்பின் இழுபறிக்கு மத்தியில் மூன்றாவது தரப்பாக சிறுபான்மையினர் உள்ளனர். பெரும்பான்மைச் சிங்களவர்கள் தமக்குள் இரண்டுபட்டு நிற்பதால் இம்முறை ஜனாதிபதித் தேர்தலில் வெற்றி தோல்வியைத் தீர்மானிக் கப் போகின்ற முக்கிய சக்தியாக இந்த மூன்றாவது தரப் பினரான சிறுபான்மையினரே விளங்கப்போகின்றார்கள் என்பது திண்ணம்.
இதனை நன்கு புரிந்துகொண்டுள்ள பேரினவாத சக்தி கள், தமக்கு எதிரான அணிக்கு சிறுபான்மையினரின் வாக் குகள் கிடைத்து விடாமல் தடுக்கவும், அந்த வாக்குகளைத் தங்கள் பக்கத்துக்கு அள்ளிப்போட்டுச் சுருட்டிக்கொள்ள வும் தீட்டுகின்ற சதிமுயற்சிகளின் ஆரம்பம்தான் குடா நாட்டில் திடீர் குழப்ப நிலைகளுக்கான பின்னணியோ என்று சந்தேகிக்க வேண்டியுள்ளது.
கிழக்கு மாகாணம் போன்று வடக்கிலும் ஒட்டுப் படை களை உள்நுழைத்து, திரைமறைவு அராஜகங்களைப் புரியவைப்பதன் மூலம் மக்கள் மத்தியில் குழப்பம், பதற் றம், அச்சம் ஆகியவற்றை ஏற்படுத்தவும்
அதனை நன்கு பயன்படுத்தி, தேர்தலில் மக்கள் ஒன்று திரண்டு வாக்களிப்பதைத் தடுத்து, தமக்கு வசமான வகை யில் அந்த வாக்குகளைச் சுருட்டிக் கொள்ளவும்
செய்யப்படும் ஆயத்தங்களின் ஆரம்பத்தையே யாழ். குடாநாடு இப்போது எதிர்கொள்ளத் தொடங்கியிருக்கின் றது போலும்.
பேரினவாத சக்திகளின் உள்நோக்கம் சதி இலக்கு துர்எண்ணம் நாசகாரத்திட்டம் இதுதான் என்றால், வரும் வாரங்களில் குடாநாட்டின் நிலைமை இன்னும் மோசமாகும். கொலைகள், அச்சுறுத்தல்கள், வன்முறைகள் என்று அடக்குமுறை தலை விரித்தாடும். மக்களின் இயல்பு வாழ்க்கை முடங்கும். வாக்களிப்புத் தினத்தன்று வாக்குச் சாவடிக்கு மக்கள் செல்வதற்கே அஞ்சும் சூழ்நிலை உரு வாக்கப்படும்; உருவாகும். அதனைப் பயன்படுத்தி வாக்கு கள் சுருட்டப்படும்.
வன்முறைப் பீதிக்குள் மக்களை இழுத்துவிடும் இந்தத் திட்டத்தையும் அதன் சூத்திரதாரிகளையும் மக்கள் புரிந்து கொண்டு வாக்களிப்பு வாயிலாகவே அவர்களுக்கு உறைப் பான பதில் கொடுக்க முன்வரவேண்டும்.
அரசுத் தரப்பினதும் பேரினவாத சக்திகளினதும் பொய்ப் பிரசாரங்களுக்கு எடுபடாமல், உறுதியுடன் இருப்பதன் மூலம் தெளிவான முடிவு ஒன்றைத் தமது வாக்குகள் மூலம் சர்வதேச சமூகத்துக்கு சிறுபான்மை இன மக்கள் வெளிப் படுத்த முடியும். அதற்குத் தயாராக இருந்து, யாழ். குடா நாடு உட்பட இலங்கைத் தீவு முழுவதிலும் வாழும் தமிழர் களின் அபிலாஷைகளை இம்முறையும் அவர்கள் தேர் தலில் உறுதியாக வெளிப்படுத்தியாக வேண்டிய நிலைமை இப்போது மெல்ல மெல்ல ஏற்பட்டுவருகிறது.
தமது நியாயமான அபிலாஷைகளை வெளிப்படுத்தும் தீர்மானத்தை தமது வாக்குச் சீட்டுகள் மூலம் தமிழர்களால் அம்பலப்படுத்த முடியும். அதை வன்முறைகளைக் காட்டித் தடுத்து விடலாம் என அரசும், அதனோடு சேர்ந்து இயங் கும் ஒட்டுப்படைகளும் நினைத்தால் அவை ஏமாந்து போகும் என்பது நிச்சயம்.

http://www.uthayan.com/editor.html
" "


Messages In This Thread
[No subject] - by cannon - 10-14-2005, 10:28 PM
[No subject] - by cannon - 10-14-2005, 10:32 PM
[No subject] - by கறுணா - 10-14-2005, 10:56 PM
[No subject] - by cannon - 10-15-2005, 04:40 PM
[No subject] - by cannon - 10-15-2005, 04:45 PM
[No subject] - by cannon - 10-17-2005, 08:51 PM
[No subject] - by Vasampu - 10-17-2005, 11:56 PM
[No subject] - by cannon - 10-18-2005, 06:20 AM
[No subject] - by vasanthan - 10-18-2005, 01:23 PM
[No subject] - by Vasampu - 10-18-2005, 11:18 PM
[No subject] - by cannon - 10-19-2005, 06:15 AM
[No subject] - by Vasampu - 10-19-2005, 09:54 AM
[No subject] - by vasanthan - 10-19-2005, 02:27 PM
[No subject] - by தூயவன் - 10-19-2005, 02:50 PM
[No subject] - by Danklas - 10-19-2005, 02:59 PM
[No subject] - by Vasampu - 10-19-2005, 04:40 PM
[No subject] - by cannon - 10-19-2005, 05:36 PM
[No subject] - by Vasampu - 10-19-2005, 06:47 PM
[No subject] - by இராவணன் - 10-19-2005, 06:50 PM

Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)