Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
மாணவிக்கு ஆபாச எஸ்.எம்.எஸ். : வாலிபர் கைது
#8
<!--QuoteBegin-->QUOTE<!--QuoteEBegin-->நிச்சயமா..இங்கு எது புதுமை புரட்சி எனப்படுகிறது என்பதற்கு வழங்கப்பட்ட கருத்துக்கள் பதில் சொல்லும்..! அதுபோல் இன்னொரு சமூகத்தின் நடைமுறைகளையே நாம் புதுமை என்று எமக்குள் புகுத்திக் கொள்வதால்...அது புதுமை புரட்சி என்று ஆகிவிடாது...!<!--QuoteEnd--><!--QuoteEEnd-->

எது புரட்சியில்ல, எது புதுமையில்லை என்று சொல்கிறீர்கள். அப்ப எது புரட்சி எது புதுமை என்றும் சொல்லுங்களேன். நான் புதுமையென்றும் புரட்சியென்றும் கருதாத ஒன்றை நீங்கள் புரட்சியென்றும் புதுமையென்றும் கருதுகிற போது அல்லது நான் கருதுவதாக நீங்கள் கருதுகிறபோது, அந்தச் சொற்களுக்கான உங்கள் வரையறையை தாருங்களேன். சிலவேளை உங்கள் கருத்துக்களில் இருந்து அதற்கான விளக்கத்தை எடுத்துக்கொள்ளலாம் என்று நீங்கள் கருதினால், அந்தளவுக்கு உங்கள் கருத்துக்கள் தெளிவானதாகவும், விளக்கமானதாகவும், நிலையானதாகவும் இருந்ததில்லை என்பதே எனது பதிலாகும்.

டிசே தனது கவிதையை புரட்சி என்றோ புதுமையென்றோ குறிப்பிடவில்லை. மற்றவர்களும் அதனைப் புரட்சியென்றோ புதுமையென்றோ கருதவில்லை - அப்படிக் கருதி யாரும் கருத்துக்கள் எழுதவுமில்லை. உங்கள் கருத்திலிருந்து அவை மாறுபடுவதால் நீங்கள் தான் அப்படிக் கருதிக்கொண்டு புதுமையென்றும் புரட்சியன்றும் எழுதுகிறீர்கள்.

<!--QuoteBegin-->QUOTE<!--QuoteEBegin-->நீங்கள் உச்சரித்தவை தனிச் சொற்களாக...தூசணமோ இல்லையோ என்பது தனிநபர் ஒவ்வொருவரினதும் சிந்தனையைப் பொறுத்தது...அதை எல்லோரும் அதே வடிவத்தில் ஏற்க வேண்டும் என்ற திணிப்பு அவசியமற்றது..!<!--QuoteEnd--><!--QuoteEEnd-->

உண்மைதான் தனிநபர் சிந்தனையைப் பொறுத்தது தான். முலைகள், யோனி, பிரஷ்டம் ஆகிய சொற்களை கவிதையின் கருத்தியல் தளத்திலிருந்து நோக்கும் சிந்தனைப்பக்குவத்தை பலர் பெறவில்லையென்பது உண்மைதான். தூசணம் என்பது ஒருவரைத் தூசிக்கப் பயன்படுவது. உடல் உறுப்புக்களைப் பிறரை தூசிப்பதற்கு பயன்படுத்திப் பழக்கப்பட்டுப் போனதால் உங்களால் அவ் வார்த்தைகள் கவிதையில் கருத்தோட்டத்துடன் இயல்பாக வரும்போது ஏற்றுக்கொள்ளமுடியவில்லை. அந்தளவுக்கு மனதளவில் பக்குவமடையவில்லை என்றே கருதவேண்டும்.

<!--QuoteBegin-->QUOTE<!--QuoteEBegin-->நீங்கள் கேட்கலாம் பாலியல் கல்வியை சிறுவயதிலையே வழங்கும் மேற்கு நாடுகள் போல நாங்கள் செய்தால் என்ன என்று...அப்படிச் செய்யும் மேற்குலக நாடுகளே திரைப்படங்களுக்கு வயதுக் கட்டுப்பாடு இடுகின்றன...ஏன்...???!<!--QuoteEnd--><!--QuoteEEnd-->

நான் ஏன் கேக்கப்போறன்? ஏன் நீங்களாகக் கற்பனை செய்துகொள்கிறீர்கள். <!--emo&Smile--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo-->

<!--QuoteBegin-->QUOTE<!--QuoteEBegin-->சமூகவியல் என்பது தனிநபர்கள் சார்ந்தது<!--QuoteEnd--><!--QuoteEEnd-->

<!--emo&Smile--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--> நகைச்சுவை தானே?

<!--QuoteBegin-->QUOTE<!--QuoteEBegin-->உங்கள் எண்ணங்களே சரி என்பதாக திணிக்க நினைக்கின்றீர்கள்..<!--QuoteEnd--><!--QuoteEEnd-->

நாம் சிந்திப்பதை, நாம் கருதுபவற்றை எங்கள் எண்ணங்களாக நாங்கள் முன்வைக்கிறோம். நாம் எதையும் திணிக்கவில்லையே.

6) தான் நம்புவதை மற்றவர்களும் நம்ப வேண்டும் என்றும் தான் வாழ்கின்ற படியே மற்றவர்களும் வாழவேண்டும் என்று கட்டாயப்படுத்துவது.
(இங்கு தத்துவஞானியைப் பொறுத்தவரை மனிதர்களிடத்தே உள்ள குறைகளாகத் தான் எண்ணுபவற்றை அல்லது தான் கண்டவற்றை தனது எண்ணங்களாக வெளிப்படுத்தியிருக்கிறார். இங்கே கட்டாயப்படுத்தல்களோ திணிப்போ எதுவும் இல்லை.) ஆனால் இந்த சமூகத்தில் பலர் தாம் எண்ணுவதைத்தான் மற்றவர்களும் எண்ணவேண்டும் என்கிற கட்டாயப்படுத்தல்களையும், திணிப்புகளையும் மேற்கொள்வதில் மிக ஆர்வமாக செயற்படுகிறார்கள். தான் நம்புகிறவற்றை மற்றவர்களும் நம்பவேண்டும் என்றும், தான் வாழ்வது போன்று மற்றவர்களும் வாழவேண்டும் என்றும் எதிர்பார்க்கும் குணம் மனிதர்களுள் இயல்பானதே. ஆனால் அந்த எதிர்பார்ப்புக்களை நிறைவேற்றுவதற்காக கருத்தியல் அடிப்படையில் பிறரைக் கட்டாயப்படுத்துவதும் - அதுவே வன்முறை வழியிலான கட்டாயப்படுத்தல்வரை வளர்வதும் அன்றாடம் நம் சமூகத்தில் நிகழ்கின்ற ஒன்றுதான். கருத்தியல் அடிப்படையிலான கட்டாயப்படுத்தல்கள் என்று நாம் நோக்குவோமாயின் - தாம் நம்புகிறவற்றை மற்றவர்கள் நம்பாதபோது அவர்களை ஒதுக்கிவைப்பதும், அவர்களின் கருத்துக்களையும், அவர்களையும் புறக்கணிப்பதும், நையாண்டி செய்வதுவும், கீழ்த்தரமாக விமர்சிப்பதுவும் - தாம் வாழ்வதுபோன்று மற்றவர்கள் வாழாதுவிட்டால் அவர்கள் வாழ்வதற்கே வக்கற்றவர்கள் போன்றதான கருது்துக்களை வெளிப்படுத்துவதும் ஆகும்.இவையெல்லாம் கட்டாயப்படுத்துதலின் வெளிப்பாடுகள் தான். ஆனால் தான் எப்படி வாழவேண்டுமென்கிற தீர்மானகரமான எண்ணத்தோடும் - அதன்மீது உண்மையான பற்றுதலோடும் - நம்பிக்கையோடும் எவனொருவன்/எவளொருவள் இருக்கிறானோ/ளோ - அவன்/அவள் எந்தக் கட்டாயப்படுத்தல்களுக்கும் அஞ்சுவதில்லை - எந்தக் கட்டாயப்படுத்தல்களாலும் மாறிவிடப்போவதில்லை.

<!--QuoteBegin-->QUOTE<!--QuoteEBegin-->அதானால் தான் தனி நபர் தாக்குதலாக உங்கள் கருத்துக்கள் விரிகின்றன...!<!--QuoteEnd--><!--QuoteEEnd-->

நீங்கள் இப்படிச் சொல்வது தனிநபர் மீதான பழிசுமத்தலாகவே கருதமுடிகிறது. இப்ப நான் எங்க தனிநபர் தாக்குதலாக எனது கருத்தை முன்வைத்தேன்? மற்றவர்கள் தான் வந்து பதில் சொல்லவேண்டும் <!--emo&Sad--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/sad.gif' border='0' valign='absmiddle' alt='sad.gif'><!--endemo-->

மன்னிக்கவும் இங்கே நான் டிசே இன் கவிதை பற்றி ஆராய வரவில்லை. இரட்டைவேடத்தனத்தை பற்றி மட்டுமே சொல்லியுள்ளேன். <!--emo&Smile--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo-->




Messages In This Thread
[No subject] - by kuruvikal - 10-15-2005, 06:49 AM
[No subject] - by இளைஞன் - 10-15-2005, 12:03 PM
[No subject] - by kuruvikal - 10-15-2005, 12:42 PM
[No subject] - by இளைஞன் - 10-15-2005, 12:59 PM
[No subject] - by kuruvikal - 10-15-2005, 01:22 PM
[No subject] - by narathar - 10-15-2005, 01:51 PM
[No subject] - by இளைஞன் - 10-15-2005, 02:18 PM
[No subject] - by vasisutha - 10-15-2005, 02:34 PM
[No subject] - by nallavan - 10-15-2005, 02:34 PM
[No subject] - by nallavan - 10-15-2005, 02:36 PM
[No subject] - by இளைஞன் - 10-15-2005, 02:47 PM
[No subject] - by nallavan - 10-15-2005, 03:01 PM
[No subject] - by இளைஞன் - 10-15-2005, 03:09 PM
[No subject] - by kuruvikal - 10-15-2005, 08:04 PM
[No subject] - by kurukaalapoovan - 10-15-2005, 10:29 PM
[No subject] - by kirubans - 10-15-2005, 10:46 PM
[No subject] - by Vasampu - 10-15-2005, 10:50 PM
[No subject] - by kuruvikal - 10-15-2005, 10:56 PM
[No subject] - by kirubans - 10-15-2005, 11:08 PM

Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)