Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
இன்னுமொரு தேர்தல் இனவாதிகளுக்கு வழியாகிவிடும்
#6
விரோதங்களை வளர்ப்பது இச்சமயத்தில் உசிதமல்ல.

அவர்களது , மூதாதையர் செய்த தவறுகள் அவர்களுக்கு புரியாமலில்லை.குடும்பத்தை பகிரங்கமாக விமர்சிக்கவும் , தமது கதிரைகளைத் துறக்கவுமே யோசிக்கிறார்கள்.

சந்திரிகா, தாம் செய்ததை, தவறென்று உணர்ந்த போதுதான்,கதையை மாற்றி , கூட்டு தேசிய அரசு பற்றி பேச முயல்வதாகச் சொல்லத் தலைப்பட்டார்.

பாராளுமன்றத்தை கலைக்கும் நோக்கம் சந்திரிகாவுக்கு இல்லை என்றும்,சந்திரிகாவின் கட்சி ,JVP யுடன் கூட்டு ஒன்றை அமைப்பதான நோக்க பேச்சுகள் பற்றிய ருபவாகினி செய்திகள், கட்சி பேச்சுகளே என்றும் சந்திரிகாவின் ஆலோசகர், மனோ தித்தவல்ல தற்போது கூறுகிறார்.

இந் நிலையில் , ரணில் பேச மறுத்தால் அதுவே சந்திரிகாவுக்கு வாய்ப்பாகி விடும் என்ற கருத்தில்,ரணில் இணைந்து செயல் ஆற்றுவது பற்றிய புரிந்துணர்வை நடைமுறைப்படுத்துவது குறித்து பேசுவதே இப்போது நல்லது என்ற நிலையைக் கொண்டுள்ளார்.

தவிரவும் பாராளுமன்றத்தை தடை செய்தது தவறு என்றும் ,அதை பிரதமருடன் கலங்தாலோசித்தே சந்திரிக்கா செய்திருக்க வேண்டும். தடை தொடர்ந்தால் அதை கண்டு கொள்ளாமல் பாராளுமன்றத்தைக் கூட்டுவேன் என்றும் சபாநாயகர் கூறியுள்ளார்.

இதேவேளை புலிகளின் ஆலோசகர் பாலசிங்கம் அவர்களின் வருகை மிக முக்கியமாக கருதப்படுகிறது.
ஆனாலும் தற்போதைய நிலவரங்கள் பற்றி விடுதலைப்புலிகள் கருத்துக் கூறுவதை தவிர்த்து வருகின்றனர்.

ரணில் பகுதி , பறிக்கப்பட்ட அமைச்சுகளை மீளப் பெறுவதிலே முக்கிய குறியாக தற்போது இருக்கிறது.அதனால்தான் இவ் அமைச்சுகள் தம்மிடம் வராத வரை பேச்சு வார்த்தை நடத்த முடியாதென்று கூறுகிறது.

தவிரவும் 500 லட்சம் 600 லட்சம் தருவதாக சந்திரிகாவின் கட்சியினர், ஏனைய பா.உறுப்பினர்களை பணம் கொடுத்து வாங்க முயன்றதை லஞ்ச ஒழிப்புக்கு முறையீடு செய்ய முயல்கிறது ரணில் பகுதி.

நோர்வே தரப்பும், தமது நிலைகளை அயல் நாடான இந்தியாவுக்கு விளக்கி மறைமுகமாக , இலங்கைக்கு அழுத்தங்களை கொடுக்க முயல்கிறது.

இந்நிலையில்தான் சந்திரிகா, தான் கையெழுத்திடாத சமாதான உடன்படிக்கை செல்லாது என்று கூறிவந்ததை விடுத்து, சமாதானப் பேச்சுகளை முன்னெடுத்துச் செல்ல தேசிய அரசு ஒன்றை அமைப்பதற்கான பேச்சை தொடங்கியுள்ளார்.

இங்கே மறைமுக பின் அழுத்தங்கள் இலங்கை அரசுக்கு அதிகரித்து வருவதையே இவை காட்டுகிறது.
Reply


Messages In This Thread
[No subject] - by P.S.Seelan - 11-18-2003, 12:29 PM
[No subject] - by AJeevan - 11-18-2003, 03:14 PM
[No subject] - by P.S.Seelan - 11-19-2003, 12:30 PM
[No subject] - by Mathivathanan - 11-19-2003, 01:10 PM
[No subject] - by AJeevan - 11-19-2003, 02:01 PM
[No subject] - by P.S.Seelan - 11-20-2003, 12:48 PM
[No subject] - by AJeevan - 11-20-2003, 02:12 PM
[No subject] - by Mathivathanan - 11-20-2003, 05:21 PM
[No subject] - by AJeevan - 11-20-2003, 05:53 PM
[No subject] - by P.S.Seelan - 11-22-2003, 12:46 PM
[No subject] - by Mathivathanan - 11-22-2003, 10:14 PM
[No subject] - by P.S.Seelan - 11-24-2003, 06:39 AM
[No subject] - by Mathivathanan - 11-24-2003, 10:57 AM
[No subject] - by P.S.Seelan - 11-24-2003, 01:20 PM
[No subject] - by P.S.Seelan - 11-24-2003, 01:23 PM
[No subject] - by P.S.Seelan - 11-25-2003, 11:46 AM

Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)