11-19-2003, 01:27 PM
இப்போ பாருங்கள் Age of empires போன்றவற்றை சிறுவர்கள் விளையாடும் போது பழைய கால வாழ்வியல் முறைகள் போரியல் முறைகள் என்பனவற்றை அறிவதுடன் துரித திட்டமிடல் கற்பனைத்திறன் ஞாபக சக்தி இவற்றை மறைமுகமாகப் பெற்றுக் கொள்கின்றனர்...அதே போல் எமது கலாசாரத்தை வாழ்வியல் முறைகளாகியவற்றைப் புகுத்தி சீடிக்களை வெளியிடும் போது பிள்ளைகள் அவை பற்றிய அறிவைக் கொஞ்சம் கொஞ்சமாக உள்வாங்கிக் கொண்டு பெற்றோரின் பாதையில் குறிப்பிட்ட அளவேனும் பின்பற்ற வாய்ப்பளிக்கலாம்.....! இது ஒரு உதாரணம் இது போல் பலவடிவங்களில் திணிப்புகள் இன்றி பிள்ளைகளின் மனவோட்டத்தோடு சென்று சொல்லவேண்டியதைச் சொல்லும் போது அவர்கள் அதை தானாக விரும்பி எடுத்துக் கொள்வர்.....நாம் வளர்ந்த சமூகத்திலும் எத்தனையோ புற நடைகள் எம் பெற்றோருக்கு சவாலாக இருந்த போதும் அவர்கள் எப்படி எம்மை சரியாக வழி நடத்தினார்கள் அவர்களுக்கு பக்கபலமாக பாடசாலைகளும் சமூகமும் இருந்ததென்ற சூழல் இன்று புலத்திலும் சரி கொழும்பு போன்ற இடங்களிலும் தனித்து வாழும் எம்மவரிடத்தில் குறைவுதான்...ஆனால் கொழும்பைவிட புலத்தில் இதன் தாக்கம் தெளிவாக உணரப்படுகிறது....!
இன்று உடனடிக்கவனம் புலத்தை நோக்கியே இருக்க வேண்டும் காரணம்....இங்கு தான் நல்லவற்றைவிட தீயவற்றை விரைவில் தடையின்றி உள்வாங்கிக் கொள்ள வசதி இருக்கிறது......!சுதந்திரம் என்ற போர்வையில் சமூகம் சீரழிவது மேற்குலக சமூகவியலாளர்களையே தலையைப் பிக்க வைத்துள்ளது...அதற்காக அதைக் கட்டுப்படுத்த அவர்கள் செலவு செய்யும் பணமும் மனித வளமும் எம்மிடம் உண்டா......?! நாங்கள் அவர்களில் ஒருவராவதில் அவர்களுக்கு எந்தப் பாதிப்பும் இல்லை...அதனால் அவர்கள் எம்மில் எமது சமூக மாற்றம் பற்றி அலட்டிக் கொள்ளப் போவதும் இல்லை....!

<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>