10-15-2005, 11:54 AM
<b>1) மற்றவர்களை இருட்டடிப்புச் செய்தால் தங்களுடைய மதிப்பும் கௌரவமும் உயர்ந்து விடும் என்று எண்ணுவது.</b>
இங்கே சாத்தியமா சாத்தியமில்லையா என்பது இரண்டாவது விடயமே. மற்றவர்களை இருட்டடிப்பு செய்வதன்மூலம் தங்களுடைய மதிப்பையும் கெளரவத்தையும் உயர்த்திக்கொள்ள முடியும் என்கிற எண்ணம் இன்றைய தொழில்நுட்ப யுகத்திலும் பலரிடம் உள்ளது. சாதாரண மனிதரிலிருந்து கலைஞர்கள் வரை இந்த மனோநிலை வேரூன்றியுள்ளது. அன்றாகிலும் - இன்றாகிலும் - என்றாகிலும் யாரையும் யாரும் இருட்டடிப்பு செய்யமுடியாது என்கிற உண்மையை இவர்கள் உணர்ந்துகொள்வதாயில்லை. இன்று இவர்கள் அவர்களை இருட்டடிப்பு செய்தால் - நாளை ஒளிகொண்டு வெளித்தோன்றுவார்கள் - இது மானுட வரலாற்றில் பலமுறை நிரூபிக்கப்பட்ட ஒன்று. மண்ணுள் மூடிவைத்தாலும் விதை - மண்ணைப் பிளந்து வெளித்தோன்றும் என்பது தெரியாதா என்ன?
<b>2) மாற்ற முடியாத அல்லது திருத்த முடியாத விடயங்களுக்காக வீணாகக் கவலைப்பட்டுக்கொண்டிருப்பது.</b>
மாற்றம் ஒன்றே மாறாதது - மற்றெல்லாம் மாறும். ஆனால் மாற்றமுடியவில்லையே, திருத்தமுடியவில்லையே - மாறுகிறார்களில்லையே, திருந்துகிறார்களில்லையே என்று கவலைப்பட்டுக்கொண்டிருப்பதைக் காட்டிலும் நமது பணியை நாம் முன்னெடுப்பது சிறந்தது.
<b>3) தன்னால் செய்யமுடியவில்லை என்பதற்காக அந்தக் காரியத்தை எவரும் செய்ய முடியாது என்று சாதிப்பது.</b>
உண்மைதான். தன்னால் செய்யமுடியவில்லை என்பதால் மற்றவர்களாலும் செய்யமுடியாது என்று எண்ணுவோர் பலர் உள்ளார்கள். இது மற்றவர்களை குறைவாக எடைபோடும் மனநிலையைத்தான் வெளிப்படுத்துகிறது. "என்னாலேயே முடியேல - இவரால எப்பிடி முடியும்?" என்பது போன்ற மனநிலை. இது மனிதருள் இருக்கும் ஒருவகையான "ஈகோ" குணம். ஆனால் இவர்கள் இப்படி நினைத்துக் கொண்டிருக்கு இவர்கள் எதை அவர்களால் சாதிக்க முடியாது என்று நினைத்தார்களோ - அதை அவர்கள் இலகுவாக சாதித்துக் காட்டுவார்கள் - இது யதார்த்தம்! (சாதாரண மனித வாழ்விலிருந்து - மாபெரும் போராட்டங்கள் வரை இதுதான் நிதர்சனம்.)
<b>4) அற்ப விடயங்களை ஒதுக்கித் தள்ள மனமில்லாமல் சஞ்சலப்படுவது. </b>
இது அறிவு சார்ந்தது. ஒரு விடயம் அற்பமாகத் தோன்றுவதும், அற்புதமாகத் தோன்றுவதும் மனிதரின் அறிவுநிலை சார்ந்த விடயமே. மனிதர்களின் சிந்தனை எவ்வளவுக்கு எவ்வளவு வளப்பட்டிருக்கிறதோ - பக்குவமடைந்திருக்கிறதோ - அதனைப் பொறுத்தே அவர்கள் ஒன்றை அற்பமாகவோ அற்புதமாகவோ நோக்குகின்ற அவர்களது பார்வை அமைந்திருக்கிறது. எனவே (அப்படியான) மனிதர்களுக்குள் அறிவுசார்/சிந்தனைசார் மாற்றங்கள் நிகழவேண்டும் - அதன்மூலம் அவர்கள் பண்படவேண்டும் - அதற்கு முக்கியமாக அந்த மனிதர்கள் வாழ்கின்ற அவர்களது சமூகத் தளங்கள் மாற்றியமைக்கப்படவேண்டும்.
<b>5) படித்து,பயின்று,மனத்தைப் பண்படுத்திக் கொள்ளாமல் காலத்தை விரயாமாக்குவது. </b>
படிப்பதும் பயில்வதும் உழைப்பதற்கே என்கிற மனப்பான்மை மாறி - நம் சிந்தனையைப் பண்படுத்துவதற்கும் நாம் படிக்கவும், பயிலவும் வேண்டும். அதற்கு முதலில் நம்மிடம் தேடல் உணர்வு நிறைய வேண்டும். தேடல் உணர்வு இருந்தால் - நிச்சயமாக நமது எதிரியிடமிருந்துகூட நிறைய விடயங்களை நம்மால் கற்றுக்கொள்ள முடியும்.
<b>6) தான் நம்புவதை மற்றவர்களும் நம்ப வேண்டும் என்றும் தான் வாழ்கின்ற படியே மற்றவர்களும் வாழவேண்டும் என்று கட்டாயப்படுத்துவது.</b>
(இங்கு தத்துவஞானியைப் பொறுத்தவரை மனிதர்களிடத்தே உள்ள குறைகளாகத் தான் எண்ணுபவற்றை அல்லது தான் கண்டவற்றை தனது எண்ணங்களாக வெளிப்படுத்தியிருக்கிறார். இங்கே கட்டாயப்படுத்தல்களோ திணிப்போ எதுவும் இல்லை.) ஆனால் இந்த சமூகத்தில் பலர் தாம் எண்ணுவதைத்தான் மற்றவர்களும் எண்ணவேண்டும் என்கிற கட்டாயப்படுத்தல்களையும், திணிப்புகளையும் மேற்கொள்வதில் மிக ஆர்வமாக செயற்படுகிறார்கள். தான் நம்புகிறவற்றை மற்றவர்களும் நம்பவேண்டும் என்றும், தான் வாழ்வது போன்று மற்றவர்களும் வாழவேண்டும் என்றும் எதிர்பார்க்கும் குணம் மனிதர்களுள் இயல்பானதே. ஆனால் அந்த எதிர்பார்ப்புக்களை நிறைவேற்றுவதற்காக கருத்தியல் அடிப்படையில் பிறரைக் கட்டாயப்படுத்துவதும் - அதுவே வன்முறை வழியிலான கட்டாயப்படுத்தல்வரை வளர்வதும் அன்றாடம் நம் சமூகத்தில் நிகழ்கின்ற ஒன்றுதான். கருத்தியல் அடிப்படையிலான கட்டாயப்படுத்தல்கள் என்று நாம் நோக்குவோமாயின் - தாம் நம்புகிறவற்றை மற்றவர்கள் நம்பாதபோது அவர்களை ஒதுக்கிவைப்பதும், அவர்களின் கருத்துக்களையும், அவர்களையும் புறக்கணிப்பதும், நையாண்டி செய்வதுவும், கீழ்த்தரமாக விமர்சிப்பதுவும் - தாம் வாழ்வதுபோன்று மற்றவர்கள் வாழாதுவிட்டால் அவர்கள் வாழ்வதற்கே வக்கற்றவர்கள் போன்றதான கருது்துக்களை வெளிப்படுத்துவதும் ஆகும்.இவையெல்லாம் கட்டாயப்படுத்துதலின் வெளிப்பாடுகள் தான். ஆனால் தான் எப்படி வாழவேண்டுமென்கிற தீர்மானகரமான எண்ணத்தோடும் - அதன்மீது உண்மையான பற்றுதலோடும் - நம்பிக்கையோடும் எவனொருவன்/எவளொருவள் இருக்கிறானோ/ளோ - அவன்/அவள் எந்தக் கட்டாயப்படுத்தல்களுக்கும் அஞ்சுவதில்லை - எந்தக் கட்டாயப்படுத்தல்களாலும் மாறிவிடப்போவதில்லை.
நன்றி வசந்தன் - இதனை இங்கிணைத்ததன் மூலம் எனது எண்ணங்களையும் வெளிப்படுத்துவதற்கான சந்தர்ப்பத்தைத் தந்தமைக்கு.