Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
ஜனாதிபதித் தேர்தல்.. தமிழர் கடமை என்ன?
#36
<b>ஒப்பந்தங்கள் கிழித்தெறியப்படுவது வரலாறு 4ம் கட்ட ஈழப்போர் உறுதி</b> <i>நன்றி: மட்டக்களப்பு ஈழநாதம்</i>

இலங்கையின் இனப் பிரச்சினையானது நீண்ட காலமாக நிலவி வருகின்ற ஓர் அரசியல் பிரச்சினையாகும். அதாவது 1921ம் ஆண்டிலிருந்து 80 வருடங்களுக்கு மேலாக நிலவி வருகின்றது. ஆனால்இ இப்பிரச்சினைக்குச் சரியானதொரு தீர்வு சிறிலங்காவின் சிங்கள அரசியல்வாதிகளால் இன்றுவரை வழங்கப்படவில்லை.

ஆனால்இ தமிழரின் பிரச்சினையைத் தீர்க்கும் முகமாகப் பல ஒப்பந்தங்கள்இ வட்டமேசை மாநாடுகள் நடைபெற்றன. இந்த ஒப்பந்தங்களும்இ வட்ட மேசை மாநாடுகளும் சிங்கள இனவாதிகளின் எதிர்ப்பால் ஒப்பந்தங்கள் கிழித்தெறியப்பட்டது. மாநாடுகள் கலைக்கப்பட்டன.

இது சிறிலங்காவைப் பொறுத்தவரையில் வரலாறாகி விட்ட விடயம். அடுத்தடுத்து வந்த சிங்களத் தலைவர்கள் அனைவரும் அதே தவறை மீண்டும்இ மீண்டும் தமிழர்களுக்கு எதிராகச் செய்து வருகின்றனர்.

அதாவதுஇ கடந்த காலங்களில் நிறைவேற்று அதிகாரம் மிக்க ஜனாதிபதியானவர்களில் எவருமே தமிழர் பிரச்சினைக்கு உருப்படியான முடிவு காணவில்லை. மாறாகத் தமிழர்களின் உரிமைகளைப் பறித்தனர். திட்டமிடப்பட்ட சிங்களக் குடியேற்றம் மூலம் தமிழர் தாயகத்தைத் துண்டாடினர். பொதுவாகக் குறிப்பிடுவதாயின் தமிழ்த் தேசிய இனத்திற்கான பண்புகள் அனைத்தையும் அழிப்பதற்கான முயற்சிகளையே சிங்கள அரசாங்கம் மேற்கொண்டு வந்தது. சிறிலங்காவின் 01வது நிறைவேற்று அதிகாரம் மிக்க ஜனாதிபதி ஜே.ஆர்.ஜெயவர்த்தனா ஆவார். இவர் தமிழர்களின் விடுதலைப் போராட்டத்தைச் சிதைப்பதற்கானஇ தன்னாலான அனைத்து வழி முறைகளையும் கையாண்டார். இவரையடுத்து 1989ல் ஜனாதிபதியான ஆர்.பிரேமதாஸா ஜே.ஆர்.ஜெயவர்த்தனாவை விடத் தீவிரமாக விடுதலைப் போராட்டத்திற்கு முற்றுப் புள்ளி வைக்க முயன்றார்.



1993ல் பிரேமதாஸா மனித தற்கொலைத் தாக்குதலுக்கு உள்ளாகினார். அதனைத் தொடர்ந்து ஜனாதிபதியாகிய டி.பி.விஜயதுங்க தன்னால் முடிந்தளவு இனவாதத்தைக் கக்கினார். ஒரு வருடத்திற்குப் பின் 1994ம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தல் நடைபெற்றது.

அத்தேர்தலில் ஐக்கிய தேசியக் கட்சியின் ஜனாதிபதி வேட்பாளரும்இ சிங்கள தேசத்தின் முக்கிய இனவாதியுமான காமினி திஸாநாயக்க மனிதக் குண்டுக்குப் பலியாகஇ போலிச் சமாதானப் புறாவான சந்திரிகா அம்மையார் ஜனாதிபதியானார்.

இவர் இன்று வரை சிறில ங்காவின் நிறைவேற்று அதிகாரம் மிக்க ஜனாதிபதியாகப் பதவி வகித்து வருகின்றார். தற்போது 5வது நிறை வேற்று அதிகாரம் கொண்ட ஜனாதி பதிக்கான தேர்தலும் நடைபெறவுள் ளது.
மேற்குறிப்பிட்ட சிறிலங்காவின் அடுத்தடுத்து வந்த சிங்களத் தலைவர்கள் எவருமே தமிழ் மக்களின் உரிமை என்ற பெயரில் ஒரு எள்ளைக் கூடத் தமிழர்களுக்குக் கொடுக்கவில்லை. எனவேஇ சிங்கள அரசியல் தலைவர்கள் எவரையுமே தமிழ் மக்கள் நம்புதவற்குத் தயார் இல்லை.

அதேபோல்இ சிங்களத் தலைமைகளால் மேற்கொள்ளப்பட்ட ஒப்பந்தங்களை நம்புவதற்கும் தயாராக இல்லை எனலாம். அதாவதுஇ 1920ம் ஆண்டு முதல் இன்று வரை தமிழ்த் தலைவர்களுக்கும்இ சிங்கள அரசியல் தலைவர்களுக்கும் இடையில் பல ஒப்பந்தங்கள் ஏற்படுத்தப்பட்டுக் கிழித்தெறியப்பட்டுள்ளது.
ஆரம்ப காலத்தில் சட்ட சபையில் தமிழர் பிரதிநிதித்துவம் தொடர்பாக ஏற்பட்ட பிரச்சினையைத் தீர்க்கும் முகமாக 1920ம் ஆண்டு சிங்களத் தலைவர் ஒருவரான சேர். ஜேம்ஸ் பீரிசுக்கும்இ தமிழ்த் தலைவர் ஒருவரான சேர்.பொன். அருணாசலத்திற்குமிடையில் மேல் மாகாணப் பிரதிநிதித்துவம் பற்றிய ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டது. ஆனால்இ இந்த ஒப்பந்தம் சிங்களப் பேரினவாதிகளின் எதிர்ப்பால் கிழித்தெறியப்பட்டது.


இதன் பின்னர் 1924ம் ஆண்டு அதே சட்ட சபைப் பிரச்சினையைத் தீர்க்கும் முகமாக அன்றைய சட்டசபை உறுப்பினரான வைத்தியலிங்கம் துரைசாமிக்கும்இ அன்றைய சிங்களத் தலைவரான பாரன் ஜெயத்திலக்காவுக்கும் இடையில் ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டது.

இது "மகேந்திரா ஒப்பந்தம்" எனப்பட்டது. இவ் ஒப்பந்தம் சிங்களப் பயங்கரவாத எதிர்ப்பால் கிழித்தெறியப்பட்டது. இதன் பின்னர் அப்போதைய சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் தலைவரான எஸ்.டபிள்யூ.ஆர்.டி.பண்டாரநாயக்கா 1956 யூன் 5ம் திகதி "சிங்களம் மட்டும்" சட்டத்தை நிறைவேற்றினார்.

இதற்கு எதிராக அப்போது எஸ்.ஜே.வி.செல்வநாயகம் தலைமையில் சத்தியாக்கிரகப் போராட்டம் நடைபெற்றதை அடுத்து 1957ம் ஆண்டு யூலை மாதம் 26ம் திகதி தமிழ்த் தலைமையுடன் பண்டாரநாயக்கா ஓர் ஒப்பந்தம் செய்து கொண்டார். இது "பண்டா - செல்வா" ஒப்பந்தம் எனப்பட்டது. இந்த ஒப்பந்தத்திற்குப் பேரினவாதிகள் கடும் எதிர்ப்பைக் காட்டினார்கள். இதற்குப் பண்டாரநாயக்கா அஞ்சி அவ் ஒப்பந்தத்தைக் கிழித்தெறிந்தார்.

அடுத்துஇ 1965ம் ஆண்டு ஐ.தே.கட்சி பொதுத் தேர்தலில் வெற்றி பெற்றது. அதன் தலைவர் டட்லி சேனாநாயக்காவும்இ தந்தை செல்வாவும். தேசிய இனப்பிரச்சினை தொடர்பாக 1965ம் ஆண்டு பங்குனி 24ம் திகதி உடன்படிக்கையில் கைச்சாத்திட்டனர். இது "டட்லி - செல்வா" ஒப்பந்தம் எனப்பட்டது. ஆனால் இந்த உடன்படிக்கையும் கிழித் தெறியப்பட்டது.
அடுத்த முயற்சியாக 1985ம் ஆண்டு இந்தியாவின் அனுசரணையுடன் இலங்கையின் இனப்பிரச்சினைக்குத் தீர்வு காணும் பொருட்டு பூட்டான் தலைநகரான திம்புவில் மாநாடு கூட்டப்பட்டது.

இதன் போது தமிழ் அமைப்புக்களால் நான்கு அம்சக் கோரிக்கைகளை (திம்புக் கோரிக்கைகள்) முன்வைத்தனர்.

ஆனால்இ இக்கோரிக்கைகள் ஒரு தனி நாட்டிற்கான கோரிக்கைகளாக இருக்கின்றமையினால் அதனை ஏற்க முடியாது என ஜெயவர்த்தனாவின் குழு கூறியது. இதனைத் தொடர்ந்து இந்தியாவின் நிர்ப்பந்தத்தினால் அன்றைய இந்தியப் பிரதமர் ராஜூவ் காந்திக்கும்இ இலங்கை ஜனாதிபதி ஜே.ஆர்.ஜெயவர்த்தனாவுக்கும் இடையில் "இலங்கை - இந்திய ஒப்பந்தம்" கைச்சாத்திடப்பட்டது.



இந்த ஒப்பந்தத்தின் அடிப்படையில் மாகாண சபைகள் உருவாக்கப்பட்டன. ஆனால் இம்மாகாண சபைகள் தமிழர்களின் அரசியல் அபிலாசைகளைத் தீர்க்கவில்லை. இதனால் தமிழர்களின் 2ம் கட்ட ஈழப்போரை நடாத்த வேண்டி ஏற்பட்டது.

மேலும்இ அமைதிப் பேச்சுக்களின் போது அமைக்கப்பட்ட அவசர மனிதாபிமானஇ மற்றும் புனர்வாழ்வுத் தேவைகளுக்கான உப குழுக்களைக் கூட இனவாதப் பௌத்த மதங்களும்இ சிங்களப் பயங்கரவாதிகளும் தடுத்து நிறுத்தினர். உதாரணமாக அன்று "சிரான்" இன்று "பொதுக்கட்டமைப்பு" போன்றவற்றைக் குறிப்பிடலாம்.

எனவேஇ மேற்குறிப்பிடப்பட்ட பந்திகளில் உள்ள வரலாற்று விடயங்களைப் படிப்பினையாகக் கொள்வோமானால்இ தமிழ் மக்கள் சிங்களத் தலைவர்கள் மீதோஇ சிங்களத் தலைவர்களின் ஒப்பந்தங்கள் மீதோ நம்பிக்கைவைக்க முடியாது என்பதைத் தெளிவாக எடுத்துக் காட்டுகின்றது.

இதன்படி தேசியத் தலைவர் மேதகு வே.தலைவர் பிரபாகரன் - ரணில் ஒப்பந்தம் குறுகிய காலத்தில் கிழித்தெறியப்படும் என்பதும்இ தெளிவாகின்றது. அத்துடன் நடைபெறவுள்ள ஜனாதிபதித் தேர்தலில் ஐ.தே.கட்சியின் ஜனாதிபதி வேட்பாளர் ரணில் வெற்றி பெற்றாலும் சரிஇ பொதுஜன ஐக்கிய முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளர் மகிந்த ராஜபக்ஷ வெற்றி பெற்றாலும் சரி தமிழர்களைப் பொறுத்தவரையில் இருவரும் முன்னைய இனவாதத் தலைவர்களைப் போன்றே இருப்பார்கள் என்பதில் எவ்வித சந்தேகமும் இல்லை.

எனவேஇ தமிழர்கள் தங்கள் தமிழர் தாயகத்தைப் பெறுவதற்கும்இ சுயநிர்ணய உரிமையைப் பெற்றுக் கொள்வதற்கும் தொடர்ந்து போராட வேண்டியுள்ளது. அதாவது 4ம் கட்ட ஈழப்போரை நடத்த வேண்டியுள்ளது எனலாம்.
ஆனால்இ எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலைப் பொறுத்து 4ம் கட்ட ஈழப் போரைத் தொடங்குவதற்கான கால மாற்றம் ஏற்பட வாய்ப்பு உள்ளது.

அதாவதுஇ மகிந்த ராஜபக்ஷ வெற்றி பெறுவாரானால் 4ம் கட்ட ஈழப்போர் மிக விரைவில் தொடங்கப்படும். காரணம் ஜே.வி.பிஇ ஹெல உறுமய போன்ற இனவாதக் கட்சிகளின் இனவாதக் குப்பைகளைச் சுமந்து கொண்டு களமிறங்குகின்றார். வெற்றி பெற்றவுடன் இந்த இனவாதக் குப்பைகளுக்குச் செயல் வடிவம் கொடுப்பார்.

இதைப் பார்த்துக் கொண்டு தமிழ் மக்கள்இ புலிப்படை பொறுமை காக்க முடியாது. அத்துடன் சர்வதேச சமூகம் மறைமுகமாகச் சண்டையைத் தொடங்குவதற்காக ஒத்துழைப்பைத் தரக்கூடும். எனவேஇ தமிழ் மக்கள் தமது தாயக விடுதலைக்கான 4ம் கட்ட ஈழப் போரை உடனே தொடங்குவர்.

ஆனால்இ ரணில் வெற்றி பெறுவாரானால் பேச்சு என்று காலத்தை இழுத்தடிப்புச் செய்வார். இதன் போது சர்வதேச சமூகம் சண்டையைத் தொடங்குவதற்கு சொற்பமேனும் ஒத்துழைப்புத் தரமாட்டாது. சர்வதேசத்தின் ஒத்துழைப்பு கிடைக்காமல் சண்டையைத் தொடங்கவும் முடியாது.

எனவே 4ம் கட்ட ஈழப் போருக்கான காலம் நீண்டு செல்லக் கூடிய வாய்ப்பு உள்ளது. எதிர்கொள்ள வேண்டிய 4ம் கட்ட ஈழப் போரானது தமிழீழம் வென்றெடுப்பதற்கான இறுதிப் போராகவே அமையக் கூடும்.

எனவேஇ இப்போரை வெற்றி கொள்வதற்கு விடுதலைப் புலிகளைப் பொறுத்தவரை விரிவாக்கப்பட்ட பெறுமதி வாய்ந்த வெற்றிகளைக் குவிப்பதற்கான தாக்குதல்; திட்டங்களைத் தீட்டியுள்ளனர். அத்துடன் புலிப்படையின் சகல துறைகளும் பலப்படுத்தப்பட்டுள்ளன.

தமிழர் தாயகத் தமிழ் மக்களைப் பொறுத்தவரையில் இச்சண்டையை எதிர் கொள்வதற்குத் தங்களைப் பலப்படுத்த வேண்டிய தேவையுள்ளது. அதாவதுஇ ஒன்றுபட்ட தற்காப்புப் பயிற்சியில் தங்களை ஈடுபடுத்த வேண்டியுள்ளது. மேலும் புலனாய்வு ரீதியிலான விழிப்புணர்வைப் பெறவேண்டும்.

ஒவ்வொருவரும் தமிழீழப் பற்று தங்களிடமிருந்து குறைந்துவிடாமல் பாதுகாத்துக் கொள்ள வேண்டும். மேற்படி தமிழ் மக்களின் ஒன்றுபட்ட இச்செயற்பாடுகள் தமிழீழத்திற்காக ஆயுதமேந்திப் போராடும் தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு வலுச் சேர்க்கும்.

இதனால்இ 4ம் கட்ட ஈழப் போரில் விடுதலைப் புலிகளுடன் இணைந்து தமிழ் மக்களாகிய நாம் சிங்களப் பேரினவாதத்திற்கு எதிராகப் போரிட்டுத் தமிழீழத்தைத் துரித கதியில் பெற்றெடுக்கலாம் என்பது உறுதி.

http://www.battieezhanatham.com/weeklymatt...1410/pawan.html
Reply


Messages In This Thread
[No subject] - by sri - 10-08-2005, 11:44 AM
[No subject] - by கோமதி - 10-08-2005, 01:17 PM
[No subject] - by kurukaalapoovan - 10-08-2005, 01:28 PM
[No subject] - by kurukaalapoovan - 10-08-2005, 01:44 PM
[No subject] - by Thala - 10-08-2005, 02:29 PM
[No subject] - by Mathan - 10-08-2005, 05:50 PM
[No subject] - by Mathan - 10-08-2005, 06:02 PM
[No subject] - by Thala - 10-08-2005, 06:05 PM
[No subject] - by Mathan - 10-08-2005, 07:07 PM
[No subject] - by Mathan - 10-08-2005, 07:32 PM
[No subject] - by cannon - 10-08-2005, 10:09 PM
[No subject] - by Mind-Reader - 10-08-2005, 10:34 PM
[No subject] - by kurukaalapoovan - 10-08-2005, 10:36 PM
[No subject] - by இவோன் - 10-08-2005, 10:46 PM
[No subject] - by Netfriend - 10-08-2005, 10:54 PM
[No subject] - by Mind-Reader - 10-08-2005, 10:59 PM
[No subject] - by Thala - 10-08-2005, 11:15 PM
[No subject] - by kurukaalapoovan - 10-08-2005, 11:17 PM
[No subject] - by Thala - 10-08-2005, 11:28 PM
[No subject] - by Mind-Reader - 10-08-2005, 11:50 PM
[No subject] - by Thala - 10-08-2005, 11:59 PM
[No subject] - by இவோன் - 10-09-2005, 12:13 AM
[No subject] - by Thala - 10-09-2005, 12:17 AM
[No subject] - by Mind-Reader - 10-09-2005, 08:25 AM
[No subject] - by Thala - 10-09-2005, 08:47 AM
[No subject] - by yarlpaadi - 10-09-2005, 08:53 AM
[No subject] - by kurukaalapoovan - 10-09-2005, 10:00 AM
[No subject] - by Vaanampaadi - 10-09-2005, 07:21 PM
[No subject] - by Thala - 10-09-2005, 07:51 PM
[No subject] - by sinnakuddy - 10-09-2005, 09:07 PM
[No subject] - by Thala - 10-10-2005, 10:18 AM
[No subject] - by kurukaalapoovan - 10-10-2005, 01:53 PM
[No subject] - by Thala - 10-10-2005, 10:23 PM
[No subject] - by kurukaalapoovan - 10-14-2005, 11:33 PM

Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)