11-19-2003, 12:30 PM
உண்மைதான் இவர்களிடம் பேரினவாத எண்ணமும் அகம்பாவமும் இருக்கும் வரை தமிழர் பிரச்சனைகள் முடிவுக்குக் கொண்டுவருவது அத்தனை சுலபமல்ல. அஜீவன் அ வர்களே இப்படி எண்ணிப் பார்ப்போமா? இனவாதிகளின் எண்ணிக்கை அதிகமாக அதிகமாக எமது பக்த்திற்கு பலங்கள் கூடும் என நான் நினைக்கின்றேன். இவர்கள் என்ன தான் காட்டுக்கூச்சல் கத்தி மன்று வந்தாலும் நாட்டின் பொருளாதாரத்ததை சீர்ப்படுத்த முடியாது. அதற்கு நிச்சயம் வெளிநாட்டு உதவிகள் தேவை. இவர்கள் மன்றம் நுழைந்தால் வெளிநாடுகள் உதவ முன் வருவார்களா? மாட்டார்கள். ஏனேனில் இவர்கள் இப்போது சமாதானத்திற்கு விரோதமாக ஆடும் ஆட்டங்களை அவர்கள் கண்காணித்துக் கொண்டுதானே உள்ளார்கள். ஆச்சியின் தற்போதைய ஆட்டத்தினால் பொருளாதாரம் பின் நோக்கிப் போகும் வேகம் புரிகிறதல்லவா? எமக்கு அதுவும் ஒரு பலமாக இருக்கும் அல்லவா?
அன்புடன்
சீலன்
அன்புடன்
சீலன்
seelan

