10-13-2005, 06:06 PM
நாங்கள் நேசித்த மண்ணில் சிறந்த பாடசாலைகளில் யாழ் மத்திய கல்லூரியும் ஒன்று..! யாழில் உள்ள வெகு சில தேசிய பாடசாலைகளில் அதுவும் ஒன்று..! அந்த வகையில் அரசியல் பின்னணிகளுக்கு அப்பால் ஒரு கல்விச் சமூகத்தின் உறுப்பினர் என்ற வகையில் அதிபரின் மறைவு வருத்தத்துக்குரியதே...! அதுமட்டுமன்றி... யுத்தத்தில் அதிகம் பாதிக்கப்பட்ட பாடசாலைகளில் யாழ் மத்திய கல்லூரியும் ஒன்று...அதை புதிய நூற்றாண்டு நோக்கி கட்டி எழுப்ப வேண்டிய பொறுப்பு மாணவர்களிடம் நிர்வாகத்திடமும் வந்த போது அத்தனை சவால்களையும் எதிர் கொண்ட அதிபர்களில் இவரும் ஒருவர்...! அவரின் தனிப்பட்ட செயற்பாடுகள் பின்னணிகள் எப்படியும் இருக்கலாம்...! அவர் கல்விச் சமூகத்துக்கு செய்த சேவைக்காக அவருக்கு மாணவர்கள் தங்கள் கன்ணீர் அஞ்சலிகளை செலுத்தியே தீருவர்..அவர்களுக்கும் அவர்களின் பாடசாலை அன்னைக்கு நிகர்த்ததுதான்...!
யாழ் மத்திய கல்லூரியின் பழைய மாணவர்கள் சார்பில் சின்னப்புவுடன் சேர்ந்து நட்புப் பாடசாலை மாணவர்கள் என்ற வகையில் எங்கள் எல்லோரினதும் அஞ்சலிகள்..!
யாழ் மத்திய கல்லூரியின் பழைய மாணவர்கள் சார்பில் சின்னப்புவுடன் சேர்ந்து நட்புப் பாடசாலை மாணவர்கள் என்ற வகையில் எங்கள் எல்லோரினதும் அஞ்சலிகள்..!
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>

