10-13-2005, 04:45 AM
தாலாட்டுக் கேட்காத தொட்டில்கள்
கனவுகளின் நூலிழையில்
கைராட்டை சுற்றுகிறாள்
தங்கத் துகளெடுத்துக்
தரைnழுகிப் பாடுகிறாள்
ஆசைகளின் வான்வெளியில்
ஆயிரமாய்ப் பு மலர
ஒசைகளால் வீடு கட்டி
உயிர்த்தோட்டம் போடுகிறாள்......
வாலிபத்தின் புங்கொத்தில்
வருடல்கள்
தாலிகட்டும் முன்பு சில
தரிசனங்கள்
வேலியிலா இள நிலத்தில்
விதைகள்
மதிமயக்கும் பளபளப்பில்
மனம்மறந்து வேளைகளில்
பாய்விரித்த தோணியின் மேல்
பருவத்தின் ஊர்வலங்கள்.....
பன்னீர் மரக்கிளையில்
பாச இலை உதிர்காலம்
கண்ணீர் மர வயிற்றில்
கர்ப்ப இலை உதயம்
தேவ சுகக்கதைகள்
சேகரித்துத் தந்த
சேவல் சிறகடிப்பு
சேயிழையின் எதிர்பார்ப்பு
மாதக் கலண்டர்
மார்பில் கனம்குறைய
மாது மணிவயிற்றில்
மடியில் கனம் வளர
வாசலிலே கோலம்
வரையா திருந்த மகள்
ஆசைகளின் கோலம்
அழிந்தாள்
அதிர்வடைந்தாள்
நம்பிக்கை வானில்
நட்சத்திரம் உதிர
கோபுரத்தின் பொற்கலசம்
குடையோடு சாய்ந்து விழ
தன்னந் தனிப்பறவை
தாய்ப்பறவையாகிவிட
ஆலமரத்தடியில்
ஆளுயரக் குப்பைத் தொட்டி
ஆளுயரக் குப்பைத் தொட்டி
அழுகின்ற குரல் கேட்கும்
கண்ணில் வளர்த்தெடுத்த
கனவுகளில் சிறுகனவு
கனவுகளில் சிறுகனவு
கலங்குகிற குரல் கேட்கும்!
தூக்கி வளர்ப்பதற்குத்
தோள் பலத்தை நம்பாமல்
தூக்கி எறிந்து விட்ட
துயரக் குரல்கேட்கும்!
தூக்கி எறிந்து விட்ட
துயரக்குரல் கேட்கும் இடம்
தொடுவானில் கட்டவிழ்ந்த
தொட்டிலோ? புதைகுழியோ?
கனவுகளின் நூலிழையில்
கைராட்டை சுற்றுகிறாள்
தங்கத் துகளெடுத்துக்
தரைnழுகிப் பாடுகிறாள்
ஆசைகளின் வான்வெளியில்
ஆயிரமாய்ப் பு மலர
ஒசைகளால் வீடு கட்டி
உயிர்த்தோட்டம் போடுகிறாள்......
வாலிபத்தின் புங்கொத்தில்
வருடல்கள்
தாலிகட்டும் முன்பு சில
தரிசனங்கள்
வேலியிலா இள நிலத்தில்
விதைகள்
மதிமயக்கும் பளபளப்பில்
மனம்மறந்து வேளைகளில்
பாய்விரித்த தோணியின் மேல்
பருவத்தின் ஊர்வலங்கள்.....
பன்னீர் மரக்கிளையில்
பாச இலை உதிர்காலம்
கண்ணீர் மர வயிற்றில்
கர்ப்ப இலை உதயம்
தேவ சுகக்கதைகள்
சேகரித்துத் தந்த
சேவல் சிறகடிப்பு
சேயிழையின் எதிர்பார்ப்பு
மாதக் கலண்டர்
மார்பில் கனம்குறைய
மாது மணிவயிற்றில்
மடியில் கனம் வளர
வாசலிலே கோலம்
வரையா திருந்த மகள்
ஆசைகளின் கோலம்
அழிந்தாள்
அதிர்வடைந்தாள்
நம்பிக்கை வானில்
நட்சத்திரம் உதிர
கோபுரத்தின் பொற்கலசம்
குடையோடு சாய்ந்து விழ
தன்னந் தனிப்பறவை
தாய்ப்பறவையாகிவிட
ஆலமரத்தடியில்
ஆளுயரக் குப்பைத் தொட்டி
ஆளுயரக் குப்பைத் தொட்டி
அழுகின்ற குரல் கேட்கும்
கண்ணில் வளர்த்தெடுத்த
கனவுகளில் சிறுகனவு
கனவுகளில் சிறுகனவு
கலங்குகிற குரல் கேட்கும்!
தூக்கி வளர்ப்பதற்குத்
தோள் பலத்தை நம்பாமல்
தூக்கி எறிந்து விட்ட
துயரக் குரல்கேட்கும்!
தூக்கி எறிந்து விட்ட
துயரக்குரல் கேட்கும் இடம்
தொடுவானில் கட்டவிழ்ந்த
தொட்டிலோ? புதைகுழியோ?

