10-12-2005, 04:19 PM
இலங்கையில் முடங்கிக் கிடக்கும் அமைதிப் பேச்சுக்களை மீண்டும் தொடங்க சிறிலங்கா அரசுக்கு சர்வதேச சமூகம் அழுத்தம் அளிக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி நோர்வே தலைநகர் ஒஸ்லோவில் எதிர்வரும் 20 ஆம் திகதி 'பொங்கு தமிழ் தீப்பந்த எழுச்சிப் பேரணி' நடாத்தப்பட உள்ளது.
ஒஸ்லோ மத்திய தொடரூந்து நிலையத்திற்கு அருகாமையில் இந்தப் பேரணி நடைபெறும்.
இது தொடர்பாக நோர்வே தமிழ் அமைப்புக்களின் ஒன்றியம் வெளியிட்டுள்ள அறிக்கை:
நீண்ட காலமாக இடைநிறுத்தப்பட்டுள்ள சமாதானப் பேச்சுக்கள் மீண்டும் ஆரம்பிக்கப்பட வேண்டும் என்ற அழுத்தத்தினை அனைத்துலக சமூகம் சிறிலங்காவிற்கு கொடுப்பதன் மூலம், இலங்கைத்தீவில் நீதியானதும், உண்மையானதுமான சமாதானம் உருவாக பங்காற்ற வேண்டும்.
ஐரோப்பிய ஒன்றிய உறுப்பு நாடுகளுக்கு தமிழீழ விடுதலைப் புலிகளின் பயணங்கள் வரவேற்கப்படவில்லை என்ற ஐரோப்பிய ஒன்றியத்தின் நிலைப்பாடானது, தமிழ் மக்களின் போராட்ட நியாயப்பாடுகளையும் உண்மை நிலைமைகளையும் அனைத்துலக சமூகத்திற்கு எடுத்துச்சொல்வதற்கான கதவுகளை மூடியுள்ளது. எனவே ஐரோப்பிய ஒன்றியத்தின் அந்நிலைப்பாடு மீள்பரிசீலிக்கப்படுவதோடு, இலங்கைத்தீவின் இனப்பிணக்கில் தொடர்புள்ள இரண்டு தரப்புக்களும் சமத்துவத் தன்மையுடன் நடத்தப்படவேண்டும்.
தமிழீழ விடுதலைப் புலிகளே தமிழ்மக்களின் ஏகப் பிரதிநிதிகள் என்ற யதார்த்தம் ஏற்றுக்கொள்ளப்பட்டு, தமிழ் மக்களின் தாயகம், தேசியம், தன்னாட்சி ஆகிய வாழ்வுரிமைகளின் அடிப்படையில் தமிழீழ மக்களின் இறைமைக்கான போராட்டத்தினை அனைத்துலக சமூகம் ஏற்றுக்கொள்ள வேண்டும்.
உயர்பாதுகாப்பு வலயம் என்ற போர்வையில் தமிழ்மக்களின் வாழ்விடங்களை ஆக்கிரமித்து நிற்கும் சிறிலங்கா அரச படைகள் வெளியேற்றப்பட்டு, தமிழ் மக்கள் மீது நடாத்தப்படும் நிழல் யுத்தம் உடனடியாக நிறுத்தப்பட்டு, நெருக்கடிக்கு உள்ளாகியிருக்கும் போர்நிறுத்த ஒப்பந்தம் செழுமையாக நடைமுறைப்படுத்தப்பட்டு அதன் மேன்மை பேணப்பட வேண்டும்.
ஆழிப்பேரலைப் பொதுக்கட்டமைப்பு நடைமுறைப்படுத்தப்படுவதற்கான அழுத்தம் சிறிலங்கா அரசாங்கத்தின் மீது செலுத்தப்பட வேண்டும். தமிழர் தாயகத்தில் நடைமுறையிலிருக்கும் தனியாட்சிக் கட்டமைப்பினை அனைத்துலக சமூகம் ஏற்றுக்கொள்ள வேண்டும்.
சிறுவர்கள், இளையவர்கள், பெரியவர்கள், முதியோர் என நோர்வேயின் திசைகளெங்கணும் வாழும் தமிழர்கள் யாவரும் அணிதிரண்டு, பதவியேற்கவுள்ள புதிய நோர்வே அரசாங்கத்திற்கு தமிழ்த்தேசியத்தின் உரிமைக்குரலை வெளிப்படுத்துவோம்! அணியணியாய் எழுந்து வாரீர்!
http://www.eelampage.com/?cn=20784