10-12-2005, 04:10 PM
Nanban Wrote:குருவிகள் -
ஓடமாக
ஏணியாக
இன்னும் எத்தனை எத்தனையோ வழிகளில் மக்களை மேலே ஏற்றி விட்டு அல்லது அக்கரையை அடைய வைத்து விட்டு தான் மட்டும் எங்கும் போகாது ஓரிடத்திலே கிடந்து போகும் பல தியாகப் பொருட்கள் தான் நினைவிற்கு வருகின்றன.
நன்றாக இருக்கிறது குருவிகள்...
நல்லதொரு கருத்தியல் பார்வை... இத்தோடு உங்கள் பார்வையோடு ஒட்டிய எங்கள் பார்வையும் சேர்ப்பது இந்த இடத்துக்கு நல்லது...என்று தோன்றுகிறது..!
இப்படித்தான் பெறும் கல்வியையும் கூட பலர் பரீட்சை முடித்து சான்றிதழ் வாங்கியதும் பாவிக்க மறந்து விடுகின்றனர்..! கல்லூரி பாடசாலை என்பதும் வெறும் கல்வியை மட்டும் தருவதல்ல... ஒழுக்கம் வாழ்வியல் நெறிகளையும் போதிக்கிறது...அதையும் பலர் பாடசாலை வளவோடே மறந்து விடுகின்றனர்.... இன்று ஒழுக்கம் பண்பாடு என்பது சீரழிந்து கொண்டிருக்கிறது... ஒழுக்கயீனங்கள் புரட்சிகளாக சீர்திருத்தங்களாக சித்தரிக்கப்படுகின்றன... உதாரணத்துக்கு பல்கலைக்கழகம் புகும் ஒரு மாணவன் வீதியில் கூட சமூகத்துக்கு அவசியமில்லாத ஒரு வார்த்தையை துணிந்து பிரயோகிப்பான்..கேட்டால் நான் ஏன் பயப்பிடனும்..நான் பல்கலையில் படிக்கும் அனைத்தும் அறிந்தவன் என்று செருக்காகச் சொல்லிக் கொள்வான்...! உண்மை அதுவல்ல...இவர்கள் அதுவரை பாடசாலைச் சுவருக்குள் பேசிக்கொண்டவையும்...அதற்கு ஆசிரியர் வழங்கிய தண்டனைக்களுமே அவர்களை இப்படிப் பேசச் செய்கின்றன...! பேசி என்ன பயன்...???! அதைச் சிந்தப்பவர்களாக இல்லை...! பேசுகிறார் எழுதுகிறார்..அதுக்கு சொல்லும் எழுத்தும் அல்ல பொறுப்பு உச்சரிக்கும் எழுதும் மாணவனோ நபரோ தான் பொறுப்பு...! ஒரு விடயத்தை நாகரிகமாகச் சொல்ல வழி இருக்கும் போது ஏன் அநாகரிகமாக...சொல்ல வேண்டும்..! தாக்கத்துக்காக என்றால்... அது ஏற்றுக் கொள்ள முடியாது... காரணம் அநாகரிகம் ஏற்படுத்தும் தாக்கத்தைவிட நாகரிகமே வலுவான தாக்கத்தை தந்து வருகிறது...! அநாகரிகம் என்றது என்ன... எல்லோரும் மனங்கோணாமல் ஒன்றை கேட்க ஏற்க பாவிக்க முடிந்தால் அது நாகரிக வடிவம்.. ஒருவன் மனம் கோணினும் அது அநாகரிகம் தான்... அவை அவசியமா... அவசியமற்றதுகளை சொல்லாக்கினும் பொருளாக்கினும் அவை சமூகத்தை முழுமையாக சென்றடையாது...! இப்போ... உதாரணத்துக்கு நாய் ஒன்று பழுதாகிய உணவை உண்ண முடிகிறது... மனித நீயும் உண்ணலாம் முடியாதென்றல்ல...உண்டால் என்னாகும்...???! அதே போல்தான் அநாவசிய அநாகரிகங்கள் சமூகத்துக்கு அவசியமில்லை... அதுவும் நாகரிக வடிவம் என்ற ஒன்று இருக்கும் போது..! அதைப் பாவிக்கத் தவறிவிட்டு வார்த்தைகளையும் கருத்துக்களையும் பழித்துப் பயனில்லை...! அது யார் குற்றம்...சிந்திப்பவனின் சிந்தனைக் குற்றமே அன்றி சமூகத்தினதல்ல...! :wink:
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>

